பெரு மூச்சு..

I Don't Know what it's Say. (My click)

மர்மயோகி - நாஸ்டிரடாமஸ்...


நாஸ்டிரடாமஸ் எது நடந்ததோ, அதைத்தான் சொன்னார். எது நடக்கிறதோ, அதை சொல்லியிருக்கிறார். எது நடக்கப் போகிறதோ, அதைக்கூட சொல்லியிருப்பார்.

யார்? இந்த நாஸ்டிரடாமஸ்.

கி.பி 1503 - 1566 ஆண்டில் பிரான்சில் வாழ்ந்த தீர்க்கதரிசி Michael De Nostredame. அதாவது ஜோசியர். பளபளக்கும் சட்டை போட்டுக்கொண்டு, கழுத்தில் கொட்டையும், நெற்றியில் பட்டையுமாக கும்பராசி நேயர்களே! என, டீவியில் தினசரி ராசிபலன் சொல்லும் சாதாரண ஜோசியர் இல்லை இவர். இந்த உலகில் நடந்ததை நடப்பதை நடக்கப் போவதை கணித்த உலகமகா ஜோசியர். இவர், அப்படி என்ன சொன்னார் ? சொன்னதெல்லாம் நடந்ததா?

அமிர்தம் ..

The Matian. Manjhi. தாரை தப்பட்டை.

சமீபத்தில் ரசித்த மூன்று திரைப்படங்கள்.

The Martian.

கண்ணைக்கட்டி காட்டில் விட்டமாதிரி என்று சொல்லுவோம். இந்த படம் கயிற்றைக் கட்டி செவ்வாய் கிரகத்தில் விடப்பட்ட ஒருவனின் கதை. 2035 ஆம் வருடம்(அப்பதான் நாம நம்புவோம்) NASA அனுப்பிய வின்வெளி வீரர்கள் செவ்வாய் கிரகத்தில் டென்ட் அமைத்து ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களது குழுவிற்கு Melissa Lewis தலைமைப் பொறுப்பேற்றுள்ளார். 
கம்மல்..

My Dear..

My Dear சில நேரங்களில்
My Bear ஆகிவிடுகிறாள்.

(நான் கரடியா கத்திட்டு இருக்கேன் காதுல விழுதா இல்லையா?)

சிறுதுளி பெருவெள்ளம்(சென்னை அனுபவம் - 5)...


சரிவர தூங்கி இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. சென்னைக்கு வந்த முதல் வேலையே கொஞ்சம் கடினம்தான். அசந்து தூங்கியிருந்தேன். அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்ததும் விழித்துக்கொண்டேன். பசி வயிற்றில் பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தது. சரிவர சாப்பிட்டும் இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. இங்கு ஹோட்டலில் எல்லாம் கிடைக்கிறது, இருந்தும் பாழாய்போன நாக்கு வீட்டு சாப்பாட்டை நோக்கியே! துறுத்திக் கொண்டிருக்கிறது. தனி அறையில் டிவியை ஆன்செய்து எதாவது ஒரு நடிகையின் இடுப்பைத் தொட்டுக்கொண்டே சாப்பிடுவதை நினைத்தால் கொடுமையாக இருந்தது. முன்பு சென்னையில் அக்காவும், மாமாவும் இருந்தார்கள். நாக்கு மறத்துப்போகும் தருணங்களில் அவர்களது வீட்டிற்குச் சென்றுவிடுவேன். ருசியான சாப்பாடும், விளையாடி மகிழ குழந்தைகளும் என  ஞாயிற்றுக்கிழமைகள் அமைதியாக கழிந்துபோகும். இப்போது மாமா மாற்றலாகி சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். சில நண்பர்களைத் தவிர சென்னையில் நெருங்கிய உறவுகள் என யாரும் இல்லை.
அந்த நாட்களின் ருசியை அசைபோட்டுக் கொண்டிருந்த போது அக்கா வசித்துவந்த கீழ்க்கட்டளை சாய்பாபா காலனி நினைவுக்கு வந்தது.உப்பு..மா...

நான் செய்த உப்புமாவில் என்ன குறைச்சல்? கோபத்துடன் கேட்டாள்..
அவளுக்கு பதில் அளித்தேன்..

உப்பு..மா..

உப்புமா...

பாவம் இந்த உப்புமா.
சமைக்கும் போது அவள் கைகளிலும்,
சாப்பிடும் போது என் வாயிலும்,
படாதபாடு படுகிறது...

கலாச்சார "காதல்"...

பொங்கலுக்கு,
அடியேன் வேட்டி,
அவள் சேலை,

- கலாச்சார "காதல்"...

மஞ்சுவிரட்டு..

களத்தில் விடாமலே
விரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

- ..

படித்ததில் பிடித்தது.

வாழ்க்கை ஒரு சூதாட்டம். பகடைகள் எப்படி விழும் என்று உனக்குத் தெரியாது. ஆனால் அவை விழுந்தவுடன், உன் காய்களை நீ எவ்வாறு நகர்த்துகிறாய் என்பது உன் கைகளில்தான் உள்ளது.

சுஜாதாவின் குறுநாவல்கள்.


சரித்திரமும், விளிம்பு மனிதர்களின் வாழ்க்கையும் நாவல்களாக வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில் சுஜாதாவின் எழுத்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. காதல், காமம், விஞ்ஞானம், சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த அவரது கட்டுரைகளும், சிறுகதைகளும், நாவல்களும் ஒவ்வொன்றும் முத்திரை பதிப்பவையே.

No  rules என்பதுதான் அவரது சிறப்பு. கடந்துபோகும் மனிதர்கள், உதிர்ந்துவிழும் வார்த்தைகள், பிரம்பிப்பூட்டும் விஞ்ஞானம். தொழில்நுட்பத்தின் அப்டேட், என அவரது எழுத்துக்கள் தனித் தன்மையானதே. எழுபது மற்றும் என்பதுகளில் வார பத்திரிக்கை முழுவதையும் அழங்கரித்தவர். அவரது கதைகளுக்காக காத்துகிடந்த அத்தைகளும், மாமாக்களும் அதிகம். அவ்வாறு வெளிவந்த நான்கே வாரத்தில் முடிந்துவிடக் கூடிய அவரது குறுநாவல்கள் சிலவற்றை திரைப்படமகவும் எடுத்திருந்தனர்.

அவர்கள் ..

ஹி. ஹி. கவிதை.

தூரிகை - 5

பட்டாம் பூச்சி..

சிறுதுளி பெருவெள்ளம் (சென்னை அனுபவம் -4)...

சென்னைக்கு வந்து இறங்கி முழுதாக ஒருநாள் முடிந்திருந்தது பகல் தூக்கத்திலும், மழையிலும், இரவு விழித்துக்கொண்டும் பொழுதுகள் கழிந்தது. மறுநாள் சங்கர் அண்ணாவின் நண்பர் தங்கியிருக்கும் ஹோட்டல் வரை கொண்டுவந்து விட்டார் குளித்து முடித்துவிட்டு எனக்கான வேலைக்கு தயாரானேன்.

காட்டுப்பூ (Mobile click) .

என்னு நிண்டே மொய்தீன் பாடல்கள்


சென்ற பதிவில் இந்த திரைப்படத்தைப் பற்றி எழுதி இருந்தேன். படத்தின் பாடல்களைப் பற்றி தனியே எழுதவில்லை என்றால் தூக்கம் வராது போலிருந்தது. பாடல்களை கேட்டாலும் அப்படியேதான் இருக்கிறது. படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் இனிமையானதே. எது சிறந்தது என குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் குழந்தை கேட்கும் மிட்டாய் மாதிரி ஆகிவிடும். (இதுவா-அதுவா).

படத்திற்கு ஜெயச்சந்திரன், ரமேஷ் நாராயண் மற்றும் கோபி சுந்தர் என மூண்று இசையமைப்பாளர்கள். கோபி சுந்தர் மட்டும் பின்னனி இசை அமைத்திருந்தார். உயிரோட்டம் நிறைந்த கதைக்கு பாடல்கள் ஆக்ஜிசன் மாதிரி, கூட குறைச்சல் இருந்தால் மொத்த கதையும் சிதைந்து விடும். இந்தபடத்தில் பாடல்களை சரிவர பயன்படுத்தி இருக்கின்றனர். ஜாம்பவான் யேசுதாஸ் ஒரு பாடலை பாடியிருக்கிறார். மழையோடு அந்த பாடலில் நாமும் கரைந்துபோவது உறுதி. ஸ்ரேயாகோசல் இந்தியாவின் அத்துணை மொழிகளிலும் எப்படி உச்சரிப்பு பிழையின்றி பாடுகிறார் எனத் தெரியவில்லை. "காத்திருன்னு" பாடலில் காஞ்சனமாலாவின் சோகத்தை அப்படியே! குரலில் பிரதிபலிக்கிறார். விஜய் யேசுதாஸ் குரலை கேட்கும்போது சற்று சந்தேகம் வருகிறது பாடுவது அவரா அல்லது அவரது தந்தையா?என்று. மதுஸ்ரீ -யின் "பிரியமானவனே" பாடல் மனதை அள்ளிச்செல்கிறது. பாடல் வரிகளை புகழ் பொற்ற கவிஞர் ரஃபீக் அஹமத் எழுதியிருக்கிறார். "சாரதம்பரம் "பாடலை ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார். மற்றும் சித்தாரா, சுஜாதா என மேலும் சில குரல்களும், பாடல்களும் கதைக்கு உயிர் ஊட்டுகின்றன. சென்ற வருடத்தில் அதிகம் கேட்டு ரசித்த பாடல்கள் இவை. அனைத்தும் ஒரே திரைப்படத்தில் இடம்பொற்றவை. "என்னு நிண்டே மொய்தீன்" எல்லோர் மனதிலும் நின்று விடுகிறான்.


என்னு நிண்டே மொய்தீன்..எதார்த்தங்களால் நிறைந்தது மலையாள சினிமா உலகம்.
நெஞ்சைத் தொட்ட நிகழ்வுகளையும், சிறந்த எழுத்துக்களையும் மலையாள சினிமா தன் உள்ளங்கையில் தாங்கிக் கொள்ளும். விரசமில்லாத காதலையும், உறவுகளின் நினைவுகளையும் திரையில் காண ஒரு எட்டு நம்ம பார்டரை தாண்டலாம். அப்படி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்தான் "என்னு நிண்டே மொய்தீன்".
1960-ல் கேரளாவில் உள்ள கோழிக்கோடு பக்கம் முக்கம் எனும் ஊரில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தின் எதார்த்த காவியம்தான் இந்த திரைப்படம்.கதையில் வரும் காஞ்சனமாலா வயது முதிர்ந்து உயிரோடு வாழ்ந்து வருகிறார். அவரது நினைவுகளும் அந்த காதலும் இன்றும் இளமையாகவே இருக்கிறது. அந்த இனிமையான, இளமையான, நினைவுகளையும், அமரத்துவம் வாய்ந்த அவரின் காதலையும் நமக்கெல்லாம் காட்டுகிறது இந்த திரைப்படம்.

மேடை.


சிறுதுளி பெருவெள்ளம் (சென்னை அனுபவம்- 3).

பேரிடர் சமயங்களில் தற்காத்துக் கொள்ளுதல் என்பது இன்றியமையாதது அதைவிட இத்தகைய நேரங்களில் பாதுகாப்பும் ஒழுங்குமுறையும் மிக அவசியம். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைப் பற்றி அனைவரும் அறிவோம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் இறந்திருந்தனர் அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் உலக புகழ்பெற்றது. நிவாரணமாக குழந்தைகளுக்கான பால் பொருட்கள் கொடுத்துக் கொண்டிருந்த இடத்தில் அனைவரும்  கைக்குழந்தையோடு "வரிசையில்" நின்று வாங்கிக்கொண்டிருந்த புகைப்படம்தான் அது. உலக ஊடகங்கள் இந்த புகைப்படத்தை வெளியிட்டு ஜப்பான் எப்படியும், எதற்கும் பிழைத்துக் கொள்ளும் என புகழ்ந்து தள்ளினர். Made in Japan-லிருந்து பொருட்களை வாங்கி குவிக்கும் நாம் இந்த பண்பாட்டையும் சேர்த்து வாங்க வேண்டும். இந்த ஒழுங்கு முறையை நிச்சயம் நாம் கடைபிடிக்க வேண்டும் என நினைத்தேன். இங்கு தங்கியிருந்த மண்டபத்தில் காகிதங்களையும், குப்பைகளையும், திறந்த தண்ணீர் குழாயையும் பார்த்த பிறகே சங்கர் அண்ணாவிடம் இங்கு ஒழுங்குபடுத்த வேண்டும் என கூறினேன். ஒருநாள் இரண்டு நாள்தானே! என்ன வந்துவிடப் போகிறது என்பதில்லாமல் அவர்களது வாழ்க்கையில் என்றைக்காவது பயன்படுமே என்று நினைத்தேன். இதற்கு எல்லோரும் சம்மதித்தனர் உட்கார்ந்து கலந்து பேசி ஒரு பட்டியல் தயார் செய்தோம்.