மனிதம் (சாப்ளின் பகுதி-3).நீங்கள் சந்திக்க விரும்பும் நபர் யார்? என ஒருமுறை ரஷ்யாவின் லெனினை கேட்டபோது அவர் அளித்த பதில் சாப்ளின். லெனின் மட்டுமல்லாமல் உலக பிரபலங்கள் பெரும்பானவர்களுக்கு சாப்ளினை வாழ்வின் ஒருமுறையாவது சந்தித்து விடவேண்டும் என்ற ஆசை இருந்தது. சிலர் அதை நிறைவேற்றிக் கொண்டனர் சிலருக்கு அது கனவாகவே இருந்தது. சாப்ளினும், டக்ளஸ் பேர், கிரிஃபித், ஐசன்ஸ்டீன் போன்ற சினிமா பிரபலங்களுடனும், பெர்னாட்ஷா, ஹெச். ஜி. வெல்ஸ் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களுடனும், ராம்ஸே, வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற அரசியல் தலைவர்களுடனும், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பல முக்கிய பிரபலங்களுடனும் நட்பில் இருந்தார். புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டின் சில நேரங்களில் தனது E=mc2 யை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு சாப்ளினோடு சேர்ந்து அவரது திரைப்படத்தை முதல்நாள், முதல்காட்சி, முதல் இருக்கையில் அமர்ந்து விசிலடித்து ரசித்து மகிழ்ந்து கண்கலங்கியிருக்கிறார். சாப்ளினின் திரையுலக காலகட்டத்திற்குப் பிறகு பிறந்தவர்கள் கூட அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையை வைத்திருந்தனர். ஆனால் சாப்ளிக்கு ஒரு ஆசை இருந்தது வாழ்நாளில் ஒருமுறையாவது அந்த மகானை சந்திக்க வேண்டும்.


ரசவாதம் (தகவல்கள்).ரச சாதம் கேள்விப்பட்டிருக்கிறோம் (மனைவி புராணத்தின்படி கொடுக்கப்படும் மகா தண்டனை) அது என்ன ரசவாதம்?. இரும்பு, ஈயம், பித்தளை போன்ற சாதாரண உலோகங்களை ஜொலிக்கும் தங்கமாகவோ, மதிப்புமிக்க உலோகமாகவோ மாற்றும் தில்லாலங்கடி வேலைதான் ரசவாதம். ஆங்கிலத்தில் இது பொதுவாக "Alchemy" என அழைக்கப்படுகிறது. பாதரசம் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுவதால் தமிழில் இது ரசவாதம் என பெயர் பெற்றது. அறிவியலில் இதனை "Pseudo science" (போலி அறிவியல்) என்கின்றனர். சாதாரண ஒரு உலோகத்தை நீர்மமாக உருக்கி அதனுடன் இன்னபிறவற்றை சேர்த்து கலக்கி தங்கமாக மாற்ற முடியுமா? ரசவாத கலை என்பது உண்மையா? அல்லது வாயிலிருந்து லிங்கத்தை எடுக்கும் சாமியார்களின் சித்துவேலையா? வாருங்கள் ஒரு கை பார்த்துவிடலாம்.


Shiva in the city of Nectar - மதுரமான நகரினில் சிவபெருமான் (புத்தகம்)"ஆயிரம் பொற்காசுகள்... அய்யோ ஆயிரம் பொற்காசுகள்.... சொக்கா"- இந்த வசனத்தையும் தருமி நாகேஷையும் திருவிளையாடல் திரைப்படத்தையும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. சிவாஜிகனேசன், மன்னிக்கவும் சிவபெருமான் விறகுவெட்டியாகவும் புலவராகவும் மீனவனாகவும் கெட்டப் மாற்றிக்கொண்டு திருவிளையாடல் நடத்திய திரைப்படம். தொன்மை வாய்ந்த இந்தியத் திருநாட்டில் கடவுள்களுக்கு பஞ்சமில்லை, அந்த கடவுள்களைப் பற்றிய புராணக் கதைகளுக்கும் பஞ்சமில்லை. பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து வாய்வழிக் கதைகளாக சொல்லப்பட்ட புராணக் கதைகளை, உண்மையா? பொய்யா? என காலிபிளவர் மூளையை கசக்கி ஆராய்ச்சி செய்யாமல் அதனை கேட்பதும், பார்ப்பதும், படிப்பதும் அதில் உள்ளம் கரைந்து போவதும் தனி சுகமே.


லண்டன், கென்னிங்டன் சாலை, தெரு எண் 12 (சாப்ளின் பகுதி-2).அது ஒரு பனிக்காலம் சாப்ளின் லண்டன் வருகிறார் என்ற செய்தியைக் கேட்டு லண்டன்வாசிகள் மகிழ்ச்சிக் கடலில் குதித்தனர். சாப்ளினை வரவேற்க வீதியெங்கும் தோரணங்கள் வானவேடிக்கைகள் என கிருஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் போல் லண்டன் தெருக்கள் கலைகட்டத் தொடங்கியது. அவரது தாயின் கனவுகளை சிதைத்து, அவளுக்கு வறுமையை கொடுத்து, மனநலம் பாதிக்கப்பட்ட நிலைக்குத் தள்ளி, பசியோடும் வலியோடும் அலைய வைத்த அதே லண்டன் தெரு. தந்தையின் பாசம் என்பது என்ன? எனத் தெரியாதவனாக, பேப்பர் போடும் சிறுவனாக, தினக் கூலியாக, வாய்ப்புத் தேடும் கலைஞனாக, மறுக்கப்பட்ட இதயத்தின் காதலனாக சாப்ளின் சுற்றித்திரிந்த அதே லண்டன் தெரு தற்போது அவரின் பாதம் பட காத்திருந்தது. குறித்த தேதியில் சாப்ளின் லண்டன் வந்து இறங்கினார். வழியெங்கும் மக்கள் கூட்டம் அவரைக் காண மொய்க்கத் தொடங்கினர். சிறிய புன்னகை மற்றும் சம்பிரதாய கையசைப்புடன் சாப்ளின் தான் தங்கப்போகும் ரிட்ஸ் ஹோட்டலுக்குச் சென்றார். ஹோட்டலைச் சுற்றிலும் கூட மக்கள் அவரைக் காண காத்துக் கிடந்தனர். உள்ளே நுழையவே பெரும் சிரமப்பட்ட அவர், ஒருவழியாக ஹோட்டல் அறைக்குச் சென்று பால்கனியில் தோன்றி அனைவருக்கும் காட்சி கொடுத்துவிட்டு மீண்டும் சிறிய புன்னகை மற்றும் கையசைப்புடன் விடைபெற்று அறைக்குத் திரும்பினார்.

கதைக் கரு (சாப்ளின் பகுதி -1).தோல் சுருங்கினால் வாய்ப்புகளும் சுருங்கிவிடும் என்பதற்கேற்ப நடன விடுதிகளில் பாடிக்கொண்டிருந்த ஹென்னாவிற்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின. 16 வயதில் பட்டாம்பூச்சியாக Lilly Harley என்ற பெயரில் லண்டனில் உள்ள British Music அரங்கத்தில் அவள் பாடியபோது கைத்தட்டி விசிலடித்து மெய்மறந்த கூட்டம் தற்போது நிராகரித்து ஒதுக்கியிருந்தது. தனக்கு முன் ஒரு கையில் சுருட்டு மறு கையில் மதுக்கோப்பையுடன் மிடுக்கான தோற்றத்தில் சில்லரைகளை வாரியிறைக்கும் வசதியானவர்களைப் போன்று ஒரு கணவன் கிடைத்து, அவனுடன் விலையுயர்ந்த ஆடை, நகைகள், மனக்கும் வாசணை திராவியங்களுடன் லண்டன் வீதிகளில் ஜட்கா வண்டியில் ஆடம்பரமாக உலாவரும் வாழ்க்கையை வாழ அவள் கனவாக வைத்திருந்தாள். ஆனால் எல்லாம் விதிப்படிதான் நடக்கிறது என்பதற்கேற்ப "Sydney Hawke" என்ற பணக்காரன் மற்றும் "Charles Chaplin" என்ற குடிகாரன் இருவரிடமிருந்து இரண்டு குழந்தைகளும் வறுமையும் மட்டுமே அவளுக்கு வாழ்க்கைத் துணையாக கிடைத்திருந்தது. அந்த வறுமையுடன் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தை நோக்கிய சாலையில் ஒரு மதுபானவிடுதிக்கு எதிரே அமைந்த குறுகளான வெளிச்சமற்ற வீட்டில் வாழ்ந்து வந்த அந்த மூன்று ஜீவன்களுக்கு, ஒற்றை நிலா, மின்னும் நட்சத்திரங்கள், நடுங்கும் குளிர், பசி என்ற நான்கையும் இறைவன் பலநாள் பல இரவிற்கு படியளந்திருந்தார். பெரியவன் சிட்னியாவது பசியை பொருத்துக் கொள்வான் ஆனால் சிறியவன் சாப்ளின் "அம்மா பசிக்கிறது" என வயிற்றை பிடித்துக்கொண்டு நிற்பான். இரண்டு குழந்தைகளின் பசியை போக்க ஹென்னா புதிய யுக்தியை கண்டுபிடித்தாள் அதுதான் கதை சொல்வது.


சாப்ளின் புதிய பகுதி அறிமுகம்.அந்த ஹீரோ எழுந்தார், நடந்தார், பாத்ரூம் போனார், பல்லு வெளக்கினார், குளித்தார், உட்கார்ந்தார், சாப்பிட்டார், தும்மினார், தூங்கினார், அவர்தான் அடுத்த முதல்வர், இந்திய பிரதமர், அமேரிக்க ஜனாதிபதி, ஐநா சபை தலைவர், போப் ஆண்டவர் என்ற செய்திகளை தினமும் நாம் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றில் கடந்து வந்திருப்போம். அவற்றிற்கெல்லாம் காரணம் ஒரு பிரபலத்தின் மீது நாம் வைத்திருக்கும் கண்மூடித்தனமாக காதலாக இருக்கக்கூடும். சினிமா மட்டுமில்லாமல் அனைத்து துறைகளைச் சார்ந்த சிலரை நாம் கவணமெடுத்து ரசிப்பதும் அந்த பிரபலத்தைப் பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும் காட்சிகளையும் சேமித்து வைத்து அழகு பார்ப்பதும் அந்த இனம்புரியாத காதலாகவே இருக்கக்கூடும். அதற்கும் ஒருபடி மேலே சென்று பாக்கெட்டில் படத்தை வைத்துக்கொள்ளுவதும், பச்சைக் குத்திக்கொள்வதும், மொட்டை போடுவதும், சோசியல் மீடியாக்களில் சொல்லெடுத்து சண்டை போடுவதும் அதே வகைதான். ஒரு நாயகன் ஏதோ ஒரு வகையில் வாடகை தராமல் ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் குடியிருக்கிறான்.

பிரபுதேவா (பாடல்கள்).கோவில் வாசல் முட்டுசந்து காய்கறி மார்க்கெட் என ஊரே வேடிக்கை பார்க்க மஞ்சள் சிவப்பு பச்சை ஊதா சட்டையில் போட்டிருக்கும் மேக்கப் கலையாமல் ஓடிவந்து கையை காலை தலையை ஆட்டி ஒரு சொட்டு வியர்வைகூட வராமல் ஹீரோ பாடும் அதிரடியான ஓப்பனிங் பாடல். ஹீரோயின் ஒகே சொல்ல யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வெளிநாட்டிற்கோ மலைப் பிரதேசத்திற்கோ சென்று கையும் கையும் மூக்கும் மூக்கும் கண்ணமும் கண்ணமும் ----சும் ----சும் உரச ஒரு டூயட் பாடல். காற்று பலமாக வீச குப்பைகள் எல்லாம் பறக்க  இருட்டில் சுடுகாட்டில் கையில் புட்டியுடன் குட்டியை நினைத்து மழையைவிட தத்துவங்களைப் பொழிந்து முகத்தை கொடூரமாக வைத்துக் கொண்டு நிம்மதியாக இரவில் தூங்கும் குழந்தைகளை பயமுறுத்தும் சோகப் பாடல். தாஜ்மஹால் பிரமிடு அரண்மனை பெரிய இதயம் உதடு என ஆர்ட் டைரக்டர் மாதக்கணக்கில் கண்விழித்து போட்ட செட்டில் பளபளக்கும் லைட் வெளிச்சத்தில் ஜிகுஜிகு உடையில் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது போன்ற நடன அசைவில் ஹீரோவும் ஆட்டுக்கல்லில் மாவு அரைப்பதைப் போன்று இருபது முறைக்குமேல் இடுப்பை மட்டும் ஆட்டி ஹீரோயினும் பாடும் ஜாலியான பாடல்- என சலித்துப்போன 90 -களின் தமிழ் திரைப்படப் பாடல்களின் மத்தியில் ஒலியும் ஒளியும் பெப்ஸி உங்கள் சாய்ஸ் சூப்பர் டென் நிகழ்சியில் எப்பொழுது அவரது பாட்டு வரும் என BPL Videocon Onida Solider டிவியின் முன் உட்கார வைத்தவர் பிரபுதேவா.

My Current Status.


நாளைக்காவது
சம்பளம் வருமா?

1000
500 ரூபாய் நோட்டு
எப்பொழுது கிடைக்கும்?

எந்த ஏடிஎம்
திறந்திருக்கும்?

தாடிக்காரர்
நல்லவரா?
கெட்டவரா?

கொலையா
இயற்கை மரணமா?

Queen of Katwe (சினிமா) .ரஷ்யாவின் Khanty Mansiysk நகரம், 7 'C குறைவான வெப்பநிலை, பளபளக்கும் கண்ணாடிச் சுவர், பளிங்குபோல் மிண்ணும் தரை, ஜொலிக்கும் மின்விளக்குகள், சீராக அடுக்கப்பட்ட மேசைகள் கொண்ட அந்த அரங்கத்திற்குள், 148 -க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மிடுக்கான உடையணிந்த 1304 வீரர்கள் நிறைந்திருக்கும் சூழலில், கருத்த நிறம், மழித்த தலை, ஆணா? பெண்ணா? எனத் தெரியாத தோற்றம், பொருத்தமில்லாத உடை, திருதிருவென விழிக்கும் முழியோடு, தன் சகநாட்டு வீராங்கனை மற்றும் பயிற்சியாளருடன் உள்ளே நுழைந்த "Phiona Mutesi" என்பவளைப் பார்த்த அனைவரும் சற்று முகம் சுழித்தனர். தண்ணீர் கொடுக்கும் சர்வர் உட்பட "யாரைய்யா இவர்களை உள்ளே விட்டது" என ரின் விளம்பரத்தில் வருவதைப்போல பார்க்க, தனக்கான ஒதுக்கப்பட்ட இருக்கைக்குச் சென்று அமர்ந்து உகாண்டா நாட்டிற்காக 39 வது ஒலிம்பியாட் செஸ் போட்டியில்   Phiona Mutesi விளையாடத் தொடங்கினாள். அற்புதமான தொடக்கம், இயல்பான கவணிப்பு, மிகத் துள்ளியமான காய்நகர்த்தல் என முதல் சுற்றில் எளிதாக வெற்றிபெற்ற அவள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்குச் சென்று ஆனந்தத்தில் மிதக்கத் தொடங்கினாள். மிகப்பெரிய கட்டிடங்களையும் வசதியான அறையையும் வாய்க்கு ருசியான உணவையும் அவள் பார்ப்பது இதுவே முதல்முறை என்பதே அவளது ஆனந்தத்திற்கு காரணமாக இருந்தது. அறையின் குளியறை ஷவரில் குளித்து கும்மாளமிட்டு, மெத்தையில் ஆட்டம்போட்டு, வயிறுமுட்ட சாப்பிட்டு முடித்து, களைத்துப்போய் ஒரு குழந்தையைப் போல அவள் அன்று தூங்கிப்போனாள் (அவள் அவ்வாறு தூங்குவதும் அதுவே முதல்முறை).


Shadow on the Wall (Mobile Photography) .

நந்திபுரத்து நாயகி.


புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் பொண்ணியின் செல்வன் என்ற மகா சமுத்திரத்தில் மூழ்காமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று கூறலாம். சோழர்களின் வரலாற்றை மட்டுமல்லாமல் ஒரு வரலாற்றுப் புதினத்தை அத்தனை அழகுடனும் உயிர்ப்புடனும் வேறு எந்த மொழியில் வேறு எவராவது ஒருவர் எழுதியிருக்கிறார்களா? என்பது சந்தேகமே. சோழர்கள் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருபவர் இராஜராஜ சோழன், "அருண்மொழி வர்மன்" என்ற இயற்பெயர் கொண்ட அவர் அரசனாக முடிசுடுவதற்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும், அதற்காக செய்யப்பட்ட அரசாங்க சூழ்ச்சிகளையும், இராஜராஜனுக்கு அண்ணனாக முடிசூடும் பட்டத்து அரசனாக இருந்த ஆதித்த கரிகாலன் என்பவரின் மர்மமான மரணத்தையும் அதனைத் தொடர்ந்த அரண்மனை குழப்பங்களையும் சரித்திர ஆய்வுகளோடு கதாபாத்திரங்களின் வழியோடு வெகுஜன மக்களும் வரலாற்றை புரிந்துகொள்ளும் அளவிற்கு எழுதியிருந்தார் அமரர் "கல்கி கிருஷ்ணமூர்த்தி".
65 வருடங்களுக்கு முன்பு வாரஇதழில் தொடராக வெளிவந்தபோதும், புத்தகமாக அடுத்த தலைமுறைக்கு சென்றபோதும் பொண்ணியின் செல்வன் வரலாற்றின் காலகட்டத்திற்கே வாசிப்பவர்களை அழைத்துச் சென்றது.

லைஃப்பாய், லக்ஸ், விம் (Lifebuoy, Lux, Vim).அருவிலிருந்து நீர் கொட்ட  "ஆரோக்கிய வாழ்வினையே காப்பாற்றும் லைஃப்பாய். லை.....பாய்" என ஒரு குடும்பம் தூரத்தில் குளிக்க சிவப்பு நிற உறையில் பவள நிறத்தில் இருக்கும் சோப் மிக அருகில் கண்ணுக்குத் தெரிவது போன்ற விளம்பரத்தை எளிதில் யாராலும் மறக்க முடியாது. சினிமா தியோட்டர்களிலும் தூர்தர்ஷன் சேனலிலும் குறைந்தது 10 முறையாவது காண்பிப்பார்கள். அதேபோல் பிரபல நடிகை சிக்கென டவலில் வந்து கொஞ்சம் மங்கலான குளியலறையில் குளித்து முடித்துவிட்டு நம்மை நோக்கி ஒரு கையில் டவலையும் மறு கையில் சோப்பையும் விழாமல் பிடித்துக் கொண்டு ஒரு மார்கமாக "என் மேனி அழகிற்கு லக்ஸ்" -பத்தில் ஒன்பது ஸ்டார்கள் பயன்படுத்துவது என சொல்ல பார்த்திருப்போம். விம் இல்லைன்னா முனியம்மா பாத்திரம் வெளக்க வரமாட்டாளாம்" என ஒரு இல்லத்தரசி தன் கணவனிடம் புலம்ப, நறுக்கிய எலுமிச்சை பழங்கள் உருண்டோட 'பாத்திரங்களும் கைகளும் பளபளக்க விம்" என்ற விளம்பரமும் நமக்கு நன்கு பரிச்சியமானதே. இந்த மூன்று விளம்பரங்களில் வரும் பொருட்களுக்கு ஒற்றுமை இருக்கிறது. மூன்றும் அனைவரும் நன்கறித்த பொருள், மூன்றும் நூற்றாண்டைத் தாண்டிய தயாரிப்பு, மூன்றும் ஒரே தயாரிப்பு நிறுவனத்தைச் சார்ந்தது. வாருங்கள் அந்த மூன்றின் சுவாரசியங்களை பார்த்துவிடலாம்.

ரசித்த ஒன்று, எதிர்பார்க்கும் இரண்டு.சமீபத்தில் ரசித்த ஒரு திரைப்படமும் எப்பொழுது வெளிவரும் என எதிர்பார்ப்போடு காத்திருக்கும் இரண்டு திரைப்படங்களும் அதனைப்பற்றிய சிறிய அலசலும்.

A Millionaire's First Loveஆர்ப்பாட்டமில்லாத சாதாரண தயாரிப்பு, அனைவருக்கும் தெரிந்த பாட்டி வடைசுட்ட காலத்து கதை, ஜவுளிக்கடை பொம்மைபோல் ஹீரோ, அதே சைஸில் ஹீரோயின். நாலு தெரு இரண்டு சந்து ஆறு அல்லது புல்வெளி லொக்கேஷன், தாலாட்டும் வயலின் இசை, சலனமில்லாத ஒளிப்பதிவு இவற்றை வைத்துக்கொண்டு உணர்வுபூர்வமான திரைப்படத்தை கொரியன் சினிமாவால் மட்டுமே தரமுடியும். அதிலும் காதல் ஸ்பெஷல் என்றால் அவர்கள் வெளுத்து வாங்கி விடுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் ரசித்த திரைப்படம் "A Millionaire's First Love". பெரும் மலையையும் சமுத்திரத்தையும் புரட்டிப்போட்டுவிடும் பொல்லாத காதல் 18 வயது பணக்கார இளைஞன் ஒருவனின் வாழ்க்கையில் நுழைகிறது. அதன் விபரீதங்களை திடீர் மழையும் அதனைத் தொடர்ந்து வரும் வானவில் காட்சியைப் போன்றும், தென்றலின் நடுவே அமர்ந்து ஒரு இனிமையான கவிதையை வாசிப்பதை போன்றும் அழகாக படைத்திருக்கிறார்கள்.

மக்கள் கலைஞர்."டேய்! டேய்! ஒரு நிமிசம் அத வைடா"- என கரண்டியை காட்டி மிரட்டி டிவி ரிமோட்டை பிடுங்கி சப்தத்தை அதிகப்படுத்திவிட்டு அடுப்படியில் ஏதாவது வேலை செய்துகொண்டே அம்மா முணுமுணுக்கும் பாடல்கள் ஏராளம். ஆனால் அப்பாவிற்கு என்ன பாடல் பிடிக்கும்? அவர் எப்போதாவது ஒரு பாடலை மெய்மறந்து பார்த்து கேட்டு ரசித்து பாடியிருக்கிறாரா என்பது சந்தேகமே. காலையில் சுப்ரபாதத்தோடு எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜையறையில் பய பக்தியோடு சப்தமில்லாமல் சில ஸ்லோகங்களை அவர் உச்சரிப்பார். மங்கள இசையும் கர்நாடக சங்கீதமும் அவருக்கு கொஞ்சம் பிடிக்கும். அதனைத் தவிர்த்து அவருக்கு பிடித்த திரைப்பட பாடல்கள் என்றால் அது ஜெய்சங்கர் நடித்த படங்களிலிருந்து இருக்கக்கூடும்.


Village Girl - Street walk.

ஒத்திகை.

பிரமிடுகள் - சுவார(க)சிய தகவல்.
பிரமிடுகள் என்பது எழு அதிசயங்களில் ஒன்று என பாஸ்போர்ட் சைஸ் படம் போட்ட புத்தகத்தில் பார்த்த, படித்த நமக்கு சங்கர் புண்ணியத்தில் ஐஸ்வர்யாராயும் பிரசாந்தும் ஜீன்ஸ் படத்தில் முதன்முதலாக ஆடிப்பாடி சுற்றிக்காட்டினர். அதற்குப்பின் வெளிவந்த "தி மம்மி" என்ற ஹாலிவுட் திரைப்படம் பிரமிடுகளை வெகு அருகில் சென்று நமக்கு காட்டியது. இதனைத் தவிர்த்து எகிப்தில் இருக்கும் பிரமிடுகளும் அதில் புதைந்துள்ள உண்மைகளும் பரம இரகசியமானது. பிரமிடுகளின் உள்ளே சென்று ஆராய்ச்சி செய்வது பிரம்மிக்கத்தக்க ஒன்றாக இருக்கும் என்பதை விட, ஒரு தூரமாக ஓரமாக வெளியில் நின்று அண்ணார்ந்து பார்த்தால் கூட அது பிரம்மிக்கத்தக்க அதிசயமாகத்தான் தெரியும் ஏனென்றால் பிரமிடுகளை கட்டியது மனித செயல்களுக்கு அப்பாற்பட்ட ஒன்று. அதனை உண்மையாக்கும் விதத்தில் டாக்டர் "ஆலா ஷாஹீன்" (Ala Shaheen) என்பவர் எகிப்தில் சிறிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் உட்கார்ந்துகொண்டு பேரிச்சம்பழத்தை தின்று கொட்டையை துப்பிவிட்டு ஒரு செய்தியை வெளியிட்டார். அந்த செய்தி சாதாரண குல்ஃபி விற்கும் வியாபாரி முதல் நாசா விஞ்ஞானிகள் வரை திரும்பிப் பார்க்க வைத்தது.

அரிதாக கேட்கும் பாடல்கள்ஒரு திரைப்படத்தின் நீளம் அகலம் உயரத்திற்காக இசைவெளியீட்டில் இருக்கும் பாடல்கள் ஒன்றிரண்டை அந்த திரைப்படம் வெளியாகும்போது நீக்கிவிடுவார்கள். 24 மணிநேரமும் தேய்ந்துபோன இசைத்தட்டைபோல நீங்கள் கேட்டவைகளாக திரும்ப திரும்ப ஒளிக்கும் தொலைக்காட்சிகளின் பாடலை தவிர்த்து நீக்கப்பட்ட அந்த பாடல்களை பன்பலைகளில் மட்டுமே மிக அரிதாக கேட்ட முடியும். தேனீர் கடையில் கோப்பையை விழுங்கிய சிறிய ஆசுவாசத்தில், நெரிசல் நிறைந்த பேருந்தின் வியர்வை நாற்றத்தில், நகரம் உறங்கும் வேலையில் பக்கத்து அறையின் கரகர சப்தத்தில் என மிக அரிதாக கேட்ட அந்த பாடல்களின் முதல் வரியை பிடித்துக்கொண்டு அதன் ஜாதகங்களைத் தேடி சேமித்து வைத்திருக்கிறேன். அவற்றை சில நேரங்களில் மீண்டும் கேட்கும்போதெல்லாம் இந்த பாடல்கள் காட்சிகளாக இருந்தால் எப்படியிருக்கும் என மனதிற்குள் பயாஸ்கோப் ஓட்டிப் பார்த்ததுண்டு. அத்தகைய பாடல்களை அதன் பயாஸ்கோப்பை நமக்குத் தெரிந்த கட்டிக் ஒட்டிங் வேலைப்பாடுகளை செய்து தங்களின் பார்வைக்கு வைக்கலாம் எனத் தோன்றியது.


இரண்டு நிமிட நட்பு.

எக்ஸ்யூஸ்மி பாஸ் தீப்பெட்டி இருக்கா?

டாஸ்மாக் பாரிலும் தியோட்டரிலும் கிடைக்கும் அந்த இரண்டு நிமிட நட்பு அலாதியானது.

ஸ்டார்ஸ் சூப்பர் சிங்கர் (அனுபவம்) .
"மச்சான் எங்க இருக்க? ஸ்டார்ஸ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரெண்டு விஐபி டிக்கெட் இருக்கு ரெடியா இரு" என நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது. போகலாமா? வேண்டாமா? என்ற இரண்டு கேள்விக்குறியை தூக்கிக்கொண்டு தூங்கி வழிந்த ஞாயிற்றுக்கிழமை மாலைப்பொழுதை எழுப்பி முகம் கழுவி சிங்காரித்து அழைத்துச் சென்றேன். ஆயிரம் நபர்கள் கூடிய அரங்கில் நிகழ்ச்சி தொடங்கியிருந்தது தொலைக்காட்சிகளில் பல சீசன்களில் பல எபிசோடுகளில் பாடிய சூப்பர் டூப்பர் சிங்கர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். விஐபி டிக்கெட் என்பதால் சற்று தாமதமாக சென்றாலும் மேடைக்கு அருகில் இரண்டாவது வரிசையில் பின்புறத்தை தட்டிவிட்டு கால்நீட்டி அமரும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி பக்தி ரசம் கொஞ்சம் கொட்டி ரஹ்மானின் "ஒரு தெய்வம் தந்த பூவே" மெலடி பாடலுக்கு தாவியது நிகழ்ச்சி. எட்டுவயது சிறுமி ஒருத்தி பாடத் தொடங்கினாள், அவளுக்கு கோரஸ் கொடுக்க மேலும் சிலர் மேடையில் இருந்தனர் நிகழ்ச்சி கலைகட்ட ஆரம்பித்தது. இருக்கையிலிருந்து சற்று நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

Wallpaper (Mobile Photography) .

Toy Story - Sweet Couple (Mobile Photography).

My Father's Riffle - அப்பாவின் துப்பாக்கி (புத்தகம்).ஒரு இனம், மொழி, நாகரீகம், பண்பாடு போன்றவைகளை அதனை பின்பற்றும் மக்களோடு சேர்த்து மிதித்து நசுக்கியபின் சர்வாதிகாரம் தன் அரியணையில் பாதுகாப்பாக அமருகிறது". பழமையான பேரரசுகளின் ஆட்சி முதல் நமக்குத் தெரிந்த ஹிட்லரில் தொடங்கி, பாலஸ்தீனம் மற்றும் இலங்கை யுத்தம் வரை இவ்வாறு நசுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை உலகம் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. நன்கு முன்னேறிய இருபத்தியோராம் நூற்றாண்டில் கூட தங்கள் இனம், தமது மக்கள், தனிநாடு என உரிமைக்காகவும் வாழ்வியலுக்காகவும் போராடக் கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார். காலம் அவர்களை அகதிகளாகவும் அடையாளமற்றவர்களாகவும் அலையவிட்டாலும் நாளை விடிந்துவிடும் என்ற நம்பிக்கையோடும் கனவோடு அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையை சேர்ந்தவர்கள்தான் குர்திய மக்கள் அவர்களுக்கு இருக்கும் கனவு "குர்திஸ்தான்".

B/W Nature (Mobile Photography) .

5 லட்சம் ஆணுறைகள் (வேடிக்கையான நிகழ்வு).1991-ஆம் ஆண்டு குவைத் நாட்டை சதாம் உசேன் ஆக்கிரமித்து இருந்த நேரம் மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிடுமோ என உலகம் அஞ்சியது. எது நடந்தாலும் பாப்கார்ன் கொறித்துக்கொண்டு வேடிக்கைப் பார்க்கும் ஐ நா சபை இந்தமுறை முந்திக்கொண்டு குவைத்திலிருந்து படைகளை வாபஸ்பெற வேண்டும் என சதாம் உசேனுக்கு நிபந்தனையும் அதற்கான கெடுவும் விதித்தது. நைனா சொல்லியே கேட்காத சதாம் ஐ நா சொல்லியா கேட்கப்போகிறார், நிபந்தனை கடிதத்தை சுருட்டி காதுகுடைந்து தூக்கியெறிந்தார். இதற்கிடையில் கொடுத்த கெடுவும் முடிய குவைத்தை மீட்க அமேரிக்கா மற்றும் பிரிட்டிஷ் படைவீரர்கள் சவூதி பாலைவனத்தில் குவிக்கப்பட்டனர். இந்த படைகள் மேலிடத்தின் உத்தரவிற்காக பல நாட்கள் வெய்யிலிலும் புழுதியிலும் காத்திருந்தனர்.

தீபாவளி பட்டாசு (கொஞ்சம் அனுபவம் அதனுடன் குட்டி தகவல்).அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து சூரியனை எழுப்பி குட்மார்னிங் ஹேப்பி தீபாவளி சொல்லிவிட்டு, அண்டா நிறைய கொதிக்கும் வெந்நீரில் எண்ணெய் தேய்த்து குளித்து, பற்கள் தந்தியடிக்க குளிரில் நடுங்கியபடி புதிதாக எடுத்த ஜட்டி பனியன் தொடங்கி மஞ்சள் பூசி சாமிக்கு படைத்த ஆடைகள் அனைத்தையும் உடுத்திக்கொண்டு, நெற்றி நிறைய விபூதி பட்டையோடு அம்மா அப்பா காலிலும் போட்டோவில் சிரிக்கும் தாத்தா முறைக்கும் பாட்டி காலிலும் விழுந்து வணங்கி, சீனி உருண்டையை வாய்க்குள்லேயும் சீப்பு முறுக்கை பாக்கெட்டிலும் அதக்கிக்கொண்டு, மங்கலான வெளிச்சத்தில் ஒரு 1000 வாலா சரவெடி பட்டாசை வைக்கும்போது தீபாவளி கலைகட்ட ஆரம்பிக்கும்.