☰ உள்ளே....

I Phoolandevi.


என்பதுகளில் இந்தப் பெயரைக் கேட்டால் சொம்பை தூக்கிக் கொண்டு கொல்லைப் பக்கம் ஓடியவர்கள் அதிகம். அப்பா..டா சரணடைந்து விட்டாள்  என பெருமூச்சு விட்ட தொப்பைகள் ஏராளம். இந்தியாவில் இவர் "பண்டிட்கியூன்" . உலக ஊடகங்கள் இவளை இந்தியாவின் "Lady Rabin Hood"  என அழைத்தனர். இவளது கதைதான் என்ன?. இந்த புத்தகத்தை வாசித்து பாருங்கள். இதை படிப்பவர்கள் பூலான் தேவியின் பக்கம் உள்ள நியாயத்தை புரிந்து கொள்வார்கள்.

Marie- Therese Cuny & Paul Rambali இருவரும் இணைந்து பூலான் தேவியை சந்தித்து இந்த புத்தகத்தை எழுதி உள்ளனர். இந்த புத்தகத்தில் உள்ளதைப்  பற்றி அறிமுகமாக எதையாவது எழுதுவதை விட  புத்தகத்தின் கடைசில் உள்ள பூலன் தேவியின் முடிவுரையை எழுதுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

புத்தகத்திலிருந்து ......

எனக்காக நான் ஒருமுறை கூட பேச வாய்ப்புக்  கிடைக்கவில்லை. எனினும், என்னைப்பற்றி பலபேர் பேசி இருக்கிறார்கள், பல பேர் என்னை புகைப்படம் எடுக்கவும், அவற்றை தங்கள் சுயநலத்திற்கு தவறாக பயன்படுத்தியும் இருக்கிறார்கள். தாங்க முடியாத துயரங்களை அனுபவித்தவளும், அவமானப்பட்டவளுமான ஒரு அப்பாவி பெண்ணை பலரும் திட்டினார்கள், கேவலப்படுத்தினார்கள், பழித்தார்கள். உதவிகேட்டு என் கைகளை நீட்டினேன் என்றாலும் எவரும் எனக்கு உதவவில்லை. சமூகம் என்னை சிறு பூச்சியாகவும், குற்றவாளியாகவுமே பார்த்தது. நான் நல்லவள் என்று சொல்லவில்லை, நான் எப்போதும் குற்றவாளியாக இருந்ததில்லை. மொத்தத்தில் நான் செய்ததெல்லாம் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பழிவாங்கினேன் என்பதுதான்.


பலதரப்பட்ட கொள்ளையர்களை நான் பார்த்திருக்கிறேன். காதகர்கள் என் உயிரை எடுக்க துடித்துக் கொண்டிருந்தவர்கள், என் கதைக்காக தூக்கமிழந்த செய்தியாளர்கள், என் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க நினைத்த சினிமாக்காரர்கள். கொள்ளையர்கள் என் உடலைத்தான் சித்ரவதை செய்தனர், ஆனால் மற்றவர்களோ என் ஆன்மாவில் கை வைத்தனர்.
இபோது இந்த நூலின் மூலமாக, என் சமுகத்தை சேர்த்த ஒரு பெண், தன் வாழ்க்கை உண்மைகளை, தான் அனுபவித்த அநீதிகளை, மனம் திறந்து சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. என் அனுபவம் அவமானப்படுத்துகின்ற மற்ற பெண்களுக்கும், என் சகோதரிகளுக்கும் உதவிகரமாக இருக்குமென நம்புகிறேன்.


எங்கு பிறந்தவர்களாயினும்,  எந்தச் சாதியை சேர்த்தவர்களாயினும் சரி, தோலின் நிரம் அல்லது எப்படிப்பட்ட உருவம் கொண்டவர்களாய் இருந்தாலும் சரி,ஒவ்வொருவருக்கும்  சுயமரியாதை இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தத்தான் நான் விரும்பினேன்.மனித மரியாதையை காப்பாற்றுவதற்காகத்தான் நான் போர் செய்தேன்.


பூலான் தேவியும் ஒரு மனிதபிறவி தான் என்று பிறர் சொல்லுவதை கேட்க
வேண்டும் என்று துடித்தேன். நன் சிறையிலிருந்து வெளிவந்த அன்றிலிருந்து ஒரு புதிய போராட்டம் தொடங்கியது, ஆமாம் வித்தியாசமான போராட்டம். இபோது கூட எனக்கு படிக்கத் தெரியாது, ஆனால் வாழ்க்கையை முழுமையாக எப்படி வாழவேண்டும் என்று இப்போது நான் கற்றுக்கொண்டேன், சின்ன ஊர்களிலும், அடர்ந்த காடுகளிலும் வாழ்ந்திருக்கிறேன். இந்த பெரிய நகரங்களில் வாழவும், ஏழைகளுக்கு உதவவும் என்னை தகுதியுடையவளாக்கிக் கொள்ளவும் வேண்டுமென்று இறைவனிடம் இடைவிடாது வேண்டிக் கொண்டிருக்கிறேன். ..

என் அடுத்த பிறவியிலாவது, அப்படி ஒன்று இருக்குமானால், விதி இவ்வளவு குரூரமாய் இல்லாமல் இருக்கவேண்டும். துர்கா தேவி என் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கட்டும்.. என் குற்றங்கள் மன்னிக்கப்பட்டலும் .... என் ஆன்மா சாந்தியடைய அருளினாலும்..... 


நான் பூலான் தேவி.
Marie- Therese Cuny & Paul Rambali
தமிழில்- மு. ந. புகழேந்தி
எதிர் வெளியீடு