☰ உள்ளே....

City Lights...(1931)...


சார்லி சாப்ளினை ஏன் திரைப்படத்தின் பிதாமகன் என்கிறோம்? காதல் என்பது என்ன? அழுகை, கோபம், சிரிப்பு, போல காதலின் உணர்ச்சி எது? City Lights பாருங்கள்.

நாடோடியாய் திரிபவனுக்கு, பார்வையற்ற பூ விற்கும் ஏழைப் பெண்ணுக்குமான காதல் கதையே City Lights. கூடவே சாப்ளினின் அதிரிபுதிரி நகைச்சுவையும் கலந்து.
 நாடோடியான சாப்ளின் நீண்ட டிராபிக் கிடையே  பூ விற்கும் Virginia Cherrill -ஐ சந்திக்கிறான். அவளிடம் பூக்களை வாங்கும் போது சில்லரையை தவற விடுகிறான் அதை அவள் தட்டுத்தடுமாறி எடுக்க முற்படும் போது அவளுக்கு கண்பார்வை கிடையாது என உணர்கிறான். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் நகருகிறது. அவள் கார் போகும் திசையை நோக்கி கையை நீட்டி மீதி சில்லரை என்கிறாள். சாப்ளினை தவறுதலாக பெரும் பணக்காரன் என நினைத்துக் கொள்கிறாள் இதை அசைவற்று கவணிக்கும் சாப்ளின் மெல்ல நகர்ந்து மறைந்திருந்து அவளை பார்த்து ரசிக்கிறான்.
அன்றிரவு ஆற்றுப்பாலம் ஒன்றில் சாப்ளின் அவளது நினைப்பில் 
கனவுகண்டுக் கொண்டிருக்கிறான். அப்போது அங்குவரும் Harry Mayer தற்கொலைக்கு முயல்கிறார். சாப்ளினின் வழக்கமான சேட்டைக்குப் பின் அவரை காப்பாற்றுகிறான். ஊரிலே பெரும் செல்வந்தர் அவர், வாழப்பிடிக்காமல் சாகத் துணிந்த தன்னை காப்பாற்றிய சாப்ளினை நண்பனாக்கி கொள்கிறார். இருவரும் குடிக்க பாருக்கு செல்கின்றனர்மூ ச்சுமுட்ட குடித்துவிட்டு வீட்டுக்கு வருகின்றனர். அடுத்தநாள் காலை சாப்ளின் தூங்கி எழுந்து வெளிவருகிறான் வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறான். வழியில் பூவிற்கும் அதே பெண்ணை சந்திக்கிறான் ஓடிச்சென்று அவரது புது நண்பரிடம் பணம் வாங்கிக்கொண்டு வருகிறான். அவளிடம் இருக்கும் எல்லா பூக்களையும் அவனே வாங்கிக்கொள்கிறான். நண்பரின் காரை எடுத்துக்கொண்டு அவளை வீடுவரை கொண்டு சேர்த்துவிட்டு வருகிறான். பணக்கார நண்பரை வைத்து அவளின் அன்பை பெற நினைக்கிறான். நண்பரை தேடி மீண்டும் அவரது வீட்டிற்கு செல்கிறான். சாப்ளீனை யார் என்று தெரியாது? என அந்த நபர் சொல்ல வெளியே தள்ளப்படுகிறான். இரவில் மூச்சுமுட்ட குடிக்கும் அந்த பணக்காரர் போதை தெளிந்ததும் நடந்ததை மறந்துவிடக் கூடிய நியாபக மறதிக்காரர்.


அடுத்த நாள் வழக்கமாக பூ விற்கும் இடத்தில் Virginia- வை காணாமல் சாப்ளின் தவிக்கிறான் அவளது வீட்டிற்கு சென்று மறைந்திருந்து பார்க்கிறான். அவளுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது. இதனை கவணிக்கும் சாப்ளின் தெருவை சுத்தம் செய்யும் வேலைக்கு செல்கிறான். கிடைத்த பணத்தில் சாமான்கள் வாங்கிக் கொண்டு அவளது வீட்டிற்கு வருகிறான். தற்செயலாக அங்கு ஒரு கடிதத்தை பார்க்கிறான் அதில் வீட்டு வாடகை பாக்கி இருப்பதாகவும் உடனே காலி செய்யவும் என எழுதி இருக்கிறது. அதை படிக்க கேட்டதும் அவள் கண்கலங்குகிறாள். நான் பணம் ஏற்பாடு செய்வதாக கூறி அன்றைய பொழுதை அவளுடன் கழிக்கிறான். ஊரில் உள்ள புகழ்பெற்ற மருத்துவர் பார்வையற்றவர்களுக்கு கண் சிகிச்சை செய்து திரும்பக் கொண்டு வருவதாக செய்தித்தாளின் மூலம் அறிகிறான். கண்டிப்பாக உனக்கு பார்வையை பெற்றுத்தருவேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான். அவளும் தமக்கு உதவும் சாப்ளினை பெரும் பணக்காரன் என நினைத்துக் கொள்கிறாள். அவனது கண்ணியமான அன்பில் நனைகிறாள்.

சாப்ளின் பணத்திற்காக நகரத்தில் நடக்கும் குத்துச்சண்டை போட்டியில் பங்கு பெறுகிறான். தன்னுடன் மோதும் எதிராளியிடம்  கிடைத்த பரிசில் ஆளுக்குபாதி என பேரம் பேசுகிறான்.அவனும் சம்மதிக்கிறான். கடைசி நேரத்தில் அவன் பின்வாங்க வேறொருவனோடு மோதுகிறான். வயிறுவலிக்கும் அந்த நகைச்சுவை நிறைந்த குத்துச்சண்டையில் கடைசியில் தோற்று அடிபட்டு திரும்புகிறான். தற்செயலாக போதையில் அங்குவரும் அந்த பணக்கார நண்பர் அவனை கண்டு கட்டிக் கொள்கிறார். அவரிடம் தனக்கிருக்கும் கஷ்டங்களை கூறுகிறான். அவரும் நான் பணம் தருவதாக கூறுகிறார். இருவரும் மது அருந்த செல்கின்றனர். அன்றிரவு அவரது வீட்டில் நடக்கும் மது விருந்தில் சாப்ளின் கலந்து கொள்கிறான். குடித்து கும்மாளமிடுகிறான். பார்ட்டி முடிந்ததும் முழு போதையில் இருக்கும் அந்த நண்பரிடம் பணம் கேட்கிறான் அவரும் கணக்கு பார்க்காமல் அள்ளிக்கொடுக்கிறார். அச்சமயம் அந்த வீட்டிற்கு திருட்டு கும்பல் ஒன்று நுழைகிறது. அங்கு நடந்த கலவரத்தில் கை நிறைய பணத்துடன் இருக்கும் சாப்ளினை திருடனாக நினைத்துக் கொள்கின்றனர். போலிஸ் வருகிறது, அவன் நிரபராதி என முயற்சித்தும் எந்த பலனின்றி அங்கிருந்து தப்பித்து ஒடுகிறான். கை நிறைய பணத்துடன் பூவிற்கும் Virginia வீட்டிற்கு செல்கிறான். அவளிடம் தொழில் விசயமாக நான் வெளிநாடு செல்வதாகவும் வர நீண்ட நாட்களாகும் எனவும்.அதற்குள் கண்சிகிச்சை செய்து கொள்ளவும் என பணத்தை நீட்டுகிறான். அவள் கண்கலங்குவதை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து போலீசில் மாட்டிக்கொள்கிறான்.

Virginia -விற்கு கண்பார்வை வந்ததா?சிறையிலிருந்து திரும்பிவரும் சாப்ளினை அவள் எவ்வாறு கண்டு பிடித்தாள்? காதலின் உன்மையான உணர்ச்சி எது? அந்த நெகிழ்ச்சியான முடிவை தெரிந்துகொள்ள திரைப்படத்தை பாருங்கள். 

உலகின் சிறந்த 100 படங்களில் இந்த படத்திற்கு 11 வது இடம். எனது தொகுப்பில் இதற்கு முதலிடம் ஏனென்றால் படத்தின் கிளைமேக்ஸ். Silent romantic comedy எனச் சொல்லக் கூடிய திரைப்படம். இந்த படத்தின் கருவைக் கொண்டு உலகின் அனைத்து மொழிகளிலும் திரைப்படமாக எடுத்து கல்லா கட்டிக் கொண்டார்கள். சாப்ளினை வெரும் நகைச்சுவை கோமாளியாக நினைத்திருந்த எனக்கு அவரை சினிமாவின் பிதாமகனாக காட்டியது இந்த திரைப்படம். படம் ஆரம்பித்தது முதல் கடைசிவரை வயிறுகுலுங்க சிரிக்க வைத்துவிட்டு கனத்த சோகத்தை முடிவாக உள் நுழைக்கும் யுக்தி சாப்ளினைத் தவிர யாரும் இலகுவாக பயன்படுத்தியதில்லை. நீங்கள் சினிமாவை காதலிக்க நினைத்தால் சாப்ளினின் படத்திலிருந்து தொடங்குங்கள்..