☰ உள்ளே....

கொஞ்சம் ஆசுவாசம்....

ஹிந்தி பாடல்களை பார்க்க கொஞ்சம் சேனல் தாவினால் கலர் கலராக பல்புகளை எரியவிட்டு பார்ட்டியில் ஆடிக் கொண்டிருப்பார்கள். இல்லை என்றால்  கலர் கலராக டிரஸ் போட்டுக்கொண்டு  எதாவது  function- ல் பாடிக் கொண்டிருப்பார்கள். இதையும் தாண்டி அத்தி பூத்தார்போல ஒருசில பாடல்கள் ரசிக்க தூண்டுபவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட நான் ரசித்த பாடல்களை இங்கு பகிர்கிறேன்.
Mausam....

சீரியசான  படத்தில் வரும் எதார்த்தமான பாடல். இது  இந்திய இராணுவ ரகசியங்களை பற்றிய படம். கிராமத்தின் தெருக்களில் இயல்பாக படம் பிடித்து இருக்கிறார்கள் பாடலின் அழகு இதுதான்.  அதைவிட அழகு, சோனம் கபூர்... ஹீ ..ஹீ   
Saawariya....

ரன்பீர் கபூருக்கு எக்கசக்க கேர்ள் ப்ரண்ட்ஸ் பெற்றுத்தந்த பாடல். சினிமாக்களில் ஹீரோயின் டவல் கட்டிக்கொண்டு ஆடுவதை பார்த்திருக்கிறோம் ஆனால்  இந்த பாட்டில், சார் டவல் கட்டிக்கொண்டு காதல் வந்த குஷியில் பாடுகிறார். கடைசியில் அதையும்  நழுவ விட்டுவிடுவர். இதையும் தாண்டி அழகான பாடல் இது . திரைப்படம் முழுவதும் studio- ல் எடுத்திருப்பார்கள்  மஞ்சள் கலந்த நீல கருப்பு வண்ணத்தில் காட்சிகள் அனைத்தும் அழகாக இருக்கும்.


Om Shanti Om....

காதலர் தின ஸ்பெஷல் பாடல். இந்தியாவில் அதிக நபர்கள் வைத்திருந்த
ரிங்க்டோன் பாடல். Dream of Love.


Gunday....

இந்த பாடலை பார்க்க, கேட்க, நண்பர்களுக்கு பகிர ஒரே காரணம் பிரியங்கா சோப்ரா... ஹீ ...ஹீ ...பாட்டில் பொண்னு சும்மா ------------ (சென்சார் கட்).