கனவுக் கன்னி...

சினிமா மேக்கப் போட ஆரம்பித்த காலத்தில் இருந்து கனவுக் கன்னிகள்
ஒவ்வொருவரின் தூக்கத்தையும்  துரத்த ஆரம்பித்து விட்டார்கள். கல்லூரி காலத்தில் ஜோ- வில் தொடங்கி லைலா, கஜோல், ஜூகி சாவ்லா, Drew Barrymore, Eva Mendez, Scarlet Johnson, Kirsten Dunsr  என அகில உலக அளவில் வெவ்வேறு காலகட்டத்தில் அடியேனையும் அப்படி இம்சித்தவர்களின் பட்டியல் ஏராளம். காலத்திற்கு தகுந்தார்போல் பட்டியலின் வரிசை மாறும்.


நயன்தாரா...


இன்று சில தமிழ் வார பத்திரிக்கைகளுக்கு படி அளந்து கொண்டிருப்பவர். அவருடன் காதல், இவருடன் காதல் என நயன்தாரா  பற்றி செய்தி இல்லாத வார இதழ் சிந்துபாத் இல்லாத கன்னித்தீவு போல. அவரது தனிப்பட்ட வாழ்கை ஒருபுறம் இருக்கட்டும். தனது வேலையை இப்போதுதான் தொடங்க ஆரம்பித்து இருக்கிறார் அதுதான் நடிப்பு . இன்று இவர்தான் most wanted south heroine. வேலையில் கச்சிதம், timing, முக்கியமாக சினிமா ராசி, என பீல்டில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். கடைசியாக நடித்த நான்கு படங்களும் ஹிட். ஒவ்வொரு படத்திலும் அவரது  நடிப்பும்,அழகும் கூடிக்கொண்டே போகிறது. நானும் ரௌடிதான் படத்தில் டைட் டி- ஷர்ட்டில்வந்து  BP ஏகிர வைக்கிறார்...

கயல் ஆனந்தி...


பலரின் மொபைல் வால்பேப்பர் இவரது முகமாக இருக்கும். Girl in  Next door - என சொல்லுவார்கள் அது போல் பார்க்க பாகத்துவீட்டு பொண்ணு மாதிரி இருக்கிறார். அப்பாவி பொண்ணாக கயலில் நடித்து இதயத்தை அள்ளியவர், சண்டிவீரனில்  பாவாடை தாவணியில் வந்து அதுகிற இதுங்கிற என பாடி, அதுவா? இதுவா? புரியாமல் புலம்பச் செய்தவர்.
அட! அந்த தாடையில் இருக்கும் மச்சம் அழகு கவிதை.

அழகிய கவிதை
எழுதிவிட்டு
முற்றுப்  புள்ளியை            
இடம் மாற்றி
வைத்துவிட்டான்
இறைவன் ... (ஐ...கவித...)...

பிரியா பவானி சங்கர்...


புதிய தலைமுறை சேனலில் நியூஸ் வசித்து கொண்டிருந்தார் அப்போதே சைட் அடிப்பதுண்டு. இப்போது விஜய் டீவியில் "கல்யாணம் முதல் காதல் வரை" எனும் சீரியலில் நடிக்கிறார். ஸ்டார்  ப்ளஸ் சேனலில் ஓடிக் கொண்டிருந்த "யே ஹாய் முஹப்படின்" என்ற சீரியலின் தமிழ் படைப்புதான் இந்த கல்யாணம் முதல் காதல் வரை ."கஸ்டடி" எனும் நாவலின் கதை இது. சீரியல் பார்க்கும் பழக்கம்  இல்லை அவ்வபோது சேனல் மாற்றி இவங்க இருக்காங்களா என மட்டும் பார்ப்பேன். அழுது வடியும் சீரியல் முகங்களுகிடையே இவங்க கொஞ்சம் அழகு.

இவங்க மூன்றுபேர்தான் அடியேனின் கனவுக் கன்னிகள் பட்டியலில் டாப் -3
அப்போ திரிஷா என்னடா ஆச்சின்னு? நீங்க கேட்கும் மைன்ட் வாய்ஸ் இங்கு கேட்கிறது . கனவுக் கன்னிகள் வரலாம்,போகலாம், மாறலாம் நமக்கு எப்பவும்
one and only திரிஷாதான் (டார்லிங் நமக்குத்தான்).     

          

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5 லட்சம் ஆணுறைகள்..

பிரமிடுகள் - சுவார(க)சிய தகவல்.

இணை பிரபஞ்சம்...

பொனொபோ - ஒருலட்சம்விட்ட தாத்தா...

எழுச்சிமி......கு கண்டுபிடிப்பு...