☰ உள்ளே....

A Bug's Life 1998உலகின் மிகப் பெரிய பலசாலி எறும்புகள். தங்களின் உடல் எடையைவிட 50 மடங்கு தூக்கக்கூடிய உயிரினம் வேறு எதுவும் கிடையாது. சுறுசுறுப்பிற்கும் உழைப்பிற்கும் எடுத்துக்காட்டு இந்த எரும்புகள். சோசலிசமும் கம்யூனிசமும் கற்றுத்தந்த ஆசான்கள். உழைப்பவர்களுக்கும் உட்கார்ந்து திண்பவர்களுக்கும் பாடம் இந்த எறும்புகளின் வாழ்க்கையே. அப்படி பட்ட சிறிய எறும்புக் கூட்டத்தின் கதைதான் A Bug 's Life.
Flik எதையும் வித்தியாசமாக செய்பவன் தான் புதிதாக வடிவமைத்த எந்திரத்தைக் கொண்டு அறுவடை செய்கிறான். அவனைப்போலவே மற்ற எறும்புகளும் உணவை சேமிப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். அவர்கள் சேமித்த உணவுகள் அனைத்தும் ஒரு இடத்தில் வெட்டுக்கிளி கூட்டத்திற்கு படையலுக்காக வைக்கப்படுகிறது. காலம் காலமாக அந்த கூட்டத்திற்கு பயந்து உழைப்பையும்,உணவையும் படையலாக வைக்கும் சிறிய எறும்புக் கூட்டத்திற்கு Princess Atta தற்போது புதிதாக தலைமையேற்றுள்ளார்.
அபாய சங்கு ஒலிக்கப்படுகிறது. அனைத்து எறும்புகளும் அலரிஅடித்துக்கொண்டு தங்களுடைய கூட்டிற்குள் நுழைகின்றன. Flik தட்டுத்தடுமாறி தான் சேகரித்த உணவை படையலில் கடைசியாக வைக்கும்போது தவறுதலாக தள்ளிவிட்டுவிடுகிறான். அனைத்தும் சரிந்து பக்கத்தில் இருக்கும் ஓடையில் விழுந்துவிடுகிறது.


வெட்டுக்கிளி கூட்டத்தின் தலைவன் Hooper தன் சகாக்களோடு வந்து சேருகிறான். படையல் வைத்திருந்த இடம் காலியாக இருப்பதை பார்த்து கோபமடைந்து எறும்புகள் கூட்டிற்குள் நுழைகிறான்.
காலம் காலமாக எறும்புகள் உழைக்க வேண்டும் வெட்டுக்கிளிகளுக்கு அடிமையாக இருக்கவேண்டும் என்பதுதான் விதி, இதை மாற்ற நினைப்பவர்கள் ஒழிந்துபோவார்கள் என அங்கிருப்பவர்களை பிடித்து மிரட்டுகிறான். Pricess Atta ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டதாகவும் சேமித்த உணவு முழுவதும் வீணாகிப் போய்விட்டதாகவும் இந்தமுறை மன்னிக்கும்படி கெஞ்சுகிறாள். நடந்ததை மன்னித்த வெட்டுக்கிளி கூட்டத்தின் தலைவன் புதிதாக தலைமை ஏற்றுள்ள Princess Atta -விற்கு கெடு வைக்கிறான். இலையுதிர்காலம் முடியும் போது அங்கிருக்கும் பெரிய மரம் ஒன்றின் கடைசி இலை விழுவதற்குள் முன்பைவிட இரண்டு மடங்கு உணவை படையலுக்கு வைக்க வேண்டும் எனவும் அப்படித் தவறினால் மொத்த கூட்டத்தையும் அழித்துவிடுவேன் எனவும் மிரட்டிச் செல்கிறான்.


மறுநாள் கூட்டம் கூடுகிறது Flik தான் செய்த தவறுக்காக தலைக்குணிந்து நிற்கிறான். முன்பைவிட இரண்டுமடங்கு உணவை சேமிப்பது இயலாத காரியம் என Princess Atta கலங்குகிறாள். நாம் ஏன் வெட்டுக்கிளி கூட்டத்திற்கு பயப்பட வேண்டும் அவர்களை எதிர்த்து போராடுவோம் என Flik கூறுகிறான். சிறிய கூட்டமான நாம் இதை எப்படி செய்வது என Princess Atta கேட்கிறாள். வெட்டுக்கிளி கூட்டத்தை சமாளிக்கும போர் செய்யும் பூச்சிகள் (Warriors Bug's) கூட்டத்தைக் கொண்டு சமாளித்துவிடலாம் எனவும் Warriors Bug's ஐ தேடிக் கூட்டிக்கொண்டு வரும் பொருப்பை தன்னிடம் விடும்படியும் Flik முறையிடுகிறான். இதெல்லாம் சாத்தியப்படாது எனத் தெரிந்து Flik ஐ இங்கிருந்து எப்படியாவது அனுப்பிவிடும் நோக்கத்தில் மொத்த கூட்டமும் இதற்கு சம்மதிக்கிறது. Flik தொலையட்டும் அவனால்தான் இவ்வளவு பெரிய பிரச்சனை நாம் வழக்கம் போல் அடிமை வாழ்க்கை வாழ்ந்துவிடுவோம் என முடிவு செய்கின்றனர். Princess Atta வின் கடைசி தங்கை Dot's மட்டும் Flik -ஐ முழுமையாக நம்புகிறாள். மறுநாள் Warrior's Bug's தேடி Flik நகரத்திற்கு கிளம்புகிறான்.

P.T Flea சிலந்தி, எட்டுகால் பூச்சி, காண்டாமிருக வண்டு, மூட்டைபூச்சி, பட்டுப்புழு, என சிறிய பூச்சி கூட்டத்தை வைத்து சர்கஸ் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அனைத்தையும் சொதப்பி வைக்கும் அந்த குழுவை வைத்து சிரமமாக காலந்தள்ளிக் கொண்டிருக்கிறது. அன்றிரவு நகரத்தில் நடக்கும் பார்ட்டியில் இந்த சர்கஸ் குருப் கலவரத்தில் ஈடுபட அங்கு வரும் Flik இவர்களை Warriors என நினைத்துக்கொள்கிறான். தங்கள் கிராமம் ஆபத்தில் இருப்பதாகவும் நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும் எனவும் வேண்டுகிறான். சர்கஸில் போதிய பயன் கிடைக்காத அந்த குருப் மூண்று வேலை சாப்பாடு கிடைக்குமே என சம்மதிக்கிறது.


ஏறும்புகள் தற்போது முன்பைவிட அதிகமாக ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கின்றன. Flik Warrior's Bug's கூட்டத்துடன் அங்கு வருகிறான். பார்பதற்கே பயங்கரமாக இருக்கும் இந்த சர்கஸ் குருப்பை பார்த்து அனைவரும் மிரல்கின்றனர்.  தங்களை காக்கவந்த Warrior's Bugs என கருதுகின்றனர். Flik சொன்னதுபோலவே சாதித்துவிட்டான் என அனைவரும் பாராட்டுகின்றனர். தடபுடலான விருந்துகளுடன் ஆட்டம் பாட்டம் என அன்றைய பொழுது கழிகிறது. அடுத்த நாள் கூட்டத்தில் வெட்டுக்கிளியை எதிர்த்து போர் செய்ய வீயுகம் வகுக்கப்படுகிறது. மூண்று வேலை சோறு நிம்மதியான வாழ்க்கையை எதிர்பார்த்த சர்கஸ் குருப் தங்களை வசமாக மாட்டிவிட்டதாக நினைத்து பயந்து Flik இடம் நாங்கள் Warrior's இல்லை சாதாரண சர்கஸ் குருப் என உன்மையை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறது. தான் மீண்டும் தவறு செய்துவிட்டதாக கருதும் Flik சர்கஸ் கூட்டத்திடம் கெஞ்சுகிறான். அவர்கள் மறுத்து அங்கிருந்து செல்கின்றர். அவர்களை தடுத்த நிறுத்தும் போது தவறுதலாக அங்கிருக்கும் பறவையின் இடத்திற்கு அனைத்தும் சென்றுவிடுகிறது. அங்கு நடக்கும் கலவரத்தில் பறவையிடம் தப்பிப்பதற்காக FliK  மற்றும் சர்கஸ் குருப் செய்யும் சாகசங்களை எறும்புகூட்டம் பார்த்து பிரம்மித்து பாராட்டுகின்றனர். சர்கஸில் கூட இவ்வளவு பாராட்டுகளையும், கரகோசங்களையும் கேட்டிராத அந்தக் கூட்டம் அங்கேயே தங்கிவிட முடிவுசெய்கிறது. இலையுதிர் காலம் தொடங்கிக் கொண்டிருக்கிறது. Flik -க்கும் சர்க்கஸ் கூட்டமும் சேர்ந்து வரப்போகும் ஆபத்தை தடுத்தார்களா?  எறும்பு கூட்டம் வெட்டுக்கிளிக்கு அடி பணிந்ததா?  Hooper கடைசியில் என்ன ஆனான் திரைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


Toy Storry திரைப்படத்திற்கு பின் Wall Disney யின் பிரம்மாண்ட படைப்பு இந்த நகச்சுவை கலந்த அணிமேசன் திரைப்படம். Aesop's -ன் The Ant and the Grasshoopers கதையில் ஈர்கப்பட்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலமெங்கும் பல ரசிகர்களை சம்பாரித்தது.படம் முழுவதும் நேர்தியான நகச்சுவை காட்சிகளுடன் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கின்றனர். Flik -க்கும் Pricess Atta - விற்கும் இடையே வெளிப்படும் மெல்லிய  காதல் காட்சி அருமை. அணிமேசன் படங்களின் உயிர்நாடி பின்னனி குரல்கள். மிகப்பொருத்தமாக பிரபலங்களை கொண்டு அழகாக ஒலியமைத்துள்ளனர். தமிழ், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் கிடைக்கிறது தவறாமல் பாருங்கள்.

Directed by        - John Lasseter
Produced by       - Darla K. Anderson
                         - BKevin Reher
Screenplay by     - Andrew Stanton
                         - Donald McEnery
                         - Bob Shaw
Story by             - John Lasseter
                         - Andrew Stanton