இடுகைகள்

December, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
☰ உள்ளே....

சிறுதுளி பெருவெள்ளம் (சென்னை அனுபவம் -2)...

படம்
பகல் பொழுதில் நன்றாக உறங்கி இருந்தேன். சங்கர் அண்ணாவிற்கு போன் செய்ததும் என்னை அழைத்துவர கார் கொடுத்துவிட்டிருந்தார். இரண்டு பெண்கள், சங்கர் அண்ணா அவரது நண்பர்கள் என மொத்தம் பதினாறு பேர் கோவையைச் சேர்ந்த ஒருரின் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்திருந்தனர்.  வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து குடும்பங்களாக வந்து தங்கியிருந்தனர். சங்கர் அண்ணாவின் நண்பர்களின் உதவியால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைத் தனியாக வேன் வைத்து அழைத்து வந்திருந்தனர்.

திருக்குறள்.

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்  தம்தம் வினையான் வரும்.
தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.
Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.

மன்னிப்பு கவிதை.

படம்

Depth of Field 2 (my click).

படம்

பப்பு அண்ணா..

பரட்டை தலை, 
அழுக்கு சட்டை,
கவாஸ்கர் தொப்பி,
கழுத்தில் தொங்கும்
பித்தளை விசிலுடன்
இருக்கும் அவருக்கு
நாங்கள் வைத்த பெயர்
பப்பு அண்ணா.

மறக்க தக.

படம்

நான் - வெஜ்.

படம்

நிற்க..

படம்

The wall .

படம்

புத்தன்

படம்

உணவு.

படம்

Old is Gold (பாடல்கள்) .

படம்
அந்த காலத்துல இது மாதிரியா பாட்டு வந்தது என சில பெருசுகள் புலம்புவதை அடிக்கடி கேட்டிருப்போம். அப்படி என்னதான் இருக்கிறது என பழைய பாடல்களை கேட்டால் அவர்களின் புலம்பல் நியாயமானதாகவே தோன்றும்.
இந்தியமொழி திரைப்படங்களின் உயிர்நாடி இசையும் பாடல்களும். திரைப்படங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒலி அமைப்புகள் மோனோ, ஸ்டிரியோ என மாறிக்கொண்டே வந்திருக்கிறது அந்த வளர்ச்சியின் ஆரம்ப காலட்டத்தில் வெளிவந்த பாடல்கள் கவித்துவம் மிக்கதாகவும், இனிமையான இசையைக் கொண்டதாகவும் இருந்திருக்கிறது. பாடலின் உயிர் இசைக்கருவியிலும், பாடல் வரிகளிலும், பாடும் குரலிலும் மறைந்திருக்கிறது. பழைய பாடல்களை கேட்கும்போது நிச்சயம் நாம் இதை உணரலாம்.
தற்போதைய பாடல் பதிவுகளிலும், இசையமைக்கும் கருவிகளிலும் நவீனம் புகுந்து கொண்டது வெறும் இரைச்சல்களினால் இசை நிறைந்திருக்கிறது. 

சிறுதுளி பெருவெள்ளம் (சென்னை அனுபவம்-1).

தீபாவளி விடுமுறை முடிந்து தற்போதுதான் வேலைகளைத் தொடங்கினோம். மின்னஞ்சலில் அவசர செய்தி வந்தது "உடனே புறப்பட்டு சென்னை வரவும்".

அவல்.

வெறும் வாய்க்கு சிம்பு எனும் அவல் கிடைத்துவிட்டது.
-வாங்க மெல்லுவோம்.

Depth Field

படம்

வழி அனுப்பும் காதல்.

படம்

எலிவால் தூரிகை 4

படம்

A Bug's Life 1998

படம்
உலகின் மிகப் பெரிய பலசாலி எறும்புகள். தங்களின் உடல் எடையைவிட 50 மடங்கு தூக்கக்கூடிய உயிரினம் வேறு எதுவும் கிடையாது. சுறுசுறுப்பிற்கும் உழைப்பிற்கும் எடுத்துக்காட்டு இந்த எரும்புகள். சோசலிசமும் கம்யூனிசமும் கற்றுத்தந்த ஆசான்கள். உழைப்பவர்களுக்கும் உட்கார்ந்து திண்பவர்களுக்கும் பாடம் இந்த எறும்புகளின் வாழ்க்கையே. அப்படி பட்ட சிறிய எறும்புக் கூட்டத்தின் கதைதான் A Bug 's Life.

SEL (Shankar–Ehsaan–Loy பாடல்கள்).

படம்
Shankar Ehsaan Loy இவர்கள் இருவர் சேர்ந்த கூட்டணி என நினைத்திருந்தேன் ஆனால் இவர்கள் மூவர் கூட்டணி Shankar- Ehsaan -Loy செல்லமாக SEL.
இந்த மூவரும் இந்திய சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்கள். வருடத்திற்கு இரண்டு படங்கள் அதில் இரண்டு பாடல்கள் ஹிட். போதும் என்பதே இவர்களின் சக்சஸ் பார்முலா.


கடவுள்.

கடவுள் இல்லை என்று சொல்லவில்லை.இன்று காலையில்தான் அவரை பார்த்தேன்.
சாலையில் அடிபட்ட நாய்குட்டிக்கு தன் கசங்கிய லுங்கியை கிழித்து கட்டுபோட்டுக் கொண்டிருந்தார்..

வள்ளி அக்கா...

படம்

குடைக்குள் மழை 2

படம்

திமிரு..

படம்

Life..

படம்
புத்தகம் மற்றும் சினிமாவிற்கான கடைகளில் மட்டும் எனது ஷாப்பிங் நேரத்தை அதிகமாக செலவிடுவேன். அப்படி ஒரு DVD கடையில் மேய்ந்து கொண்டிருந்தேன். பத்து வயது மதிப்புள்ள ஒரு சிறுவன் தன் அம்மாவுடன் சற்று மழையில் நனைந்து கடைக்குள் நுழைந்தான். மழையின் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் விடுமுறையில் இருந்த சமயம் அந்த சிறுவன் தனக்கு வேண்டிய தமிழ் பட டிவிடிக்களின் பெயர்களை கடைக்காரரிடம் அடுக்கிக் கொண்டே போனான். அவன் கேட்ட அந்த படங்களை நினைத்து நான் கொஞ்சம் திகைத்துப்போனேன். 
அவை எல்லாம் தற்போது வெளியான புதிய தமிழ் திரைப்படங்கள். அதிலும் "கா மா- சோ மா" காட்சிகள் நிறைந்த படங்கள். இந்த படங்களில் என்ன இருக்கிறது என தெரியாமல் அவன் பார்க்க விரும்பி கேட்டுக் கொண்டிருக்கிறான். என்ன இருக்கிறது? எதைப்பற்றி போதிக்கிறது? எனத் தெரிந்தும் அவன் அம்மா அதை வாங்கிக் கொண்டிருக்கிறாள்.
இளசுகளையும் விசிலடிச்சான் குஞ்சுகளையும் மட்டுமே நம்பி தற்போது பல திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஈஸ்ட்ரேஜன் மற்றும் ஆண்ட்ரோஜென்களை தூண்டக்கூடிய பாடல்களும் காட்சிகளும் நிறைந்த இந்த மாதிரி திரைப்படங்கள் சிறுவர்களை எப்படி ப…

ருசி..

படம்

எலிவால் தூரிகை- 4

படம்

தவளையும், கொக்கும்..

படம்

குடைக்குள் மழை..

படம்

I Phoolandevi.

படம்
என்பதுகளில் இந்தப் பெயரைக் கேட்டால் சொம்பை தூக்கிக் கொண்டு கொல்லைப் பக்கம் ஓடியவர்கள் அதிகம். அப்பா..டா சரணடைந்து விட்டாள்  என பெருமூச்சு விட்ட தொப்பைகள் ஏராளம். இந்தியாவில் இவர் "பண்டிட்கியூன்" . உலக ஊடகங்கள் இவளை இந்தியாவின் "Lady Rabin Hood"  என அழைத்தனர். இவளது கதைதான் என்ன?. இந்த புத்தகத்தை வாசித்து பாருங்கள். இதை படிப்பவர்கள் பூலான் தேவியின் பக்கம் உள்ள நியாயத்தை புரிந்து கொள்வார்கள்.
Marie- Therese Cuny & Paul Rambali இருவரும் இணைந்து பூலான் தேவியை சந்தித்து இந்த புத்தகத்தை எழுதி உள்ளனர். இந்த புத்தகத்தில் உள்ளதைப்  பற்றி அறிமுகமாக எதையாவது எழுதுவதை விட  புத்தகத்தின் கடைசில் உள்ள பூலன் தேவியின் முடிவுரையை எழுதுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
புத்தகத்திலிருந்து ......
எனக்காக நான் ஒருமுறை கூட பேச வாய்ப்புக்  கிடைக்கவில்லை. எனினும், என்னைப்பற்றி பலபேர் பேசி இருக்கிறார்கள், பல பேர் என்னை புகைப்படம் எடுக்கவும், அவற்றை தங்கள் சுயநலத்திற்கு தவறாக பயன்படுத்தியும் இருக்கிறார்கள். தாங்க முடியாத துயரங்களை அனுபவித்தவளும், அவமானப்பட்டவளுமான ஒரு அப்பாவி ப…

கனவுக் கன்னி...

படம்
சினிமா மேக்கப் போட ஆரம்பித்த காலத்தில் இருந்து கனவுக் கன்னிகள்
ஒவ்வொருவரின் தூக்கத்தையும்  துரத்த ஆரம்பித்து விட்டார்கள். கல்லூரி காலத்தில் ஜோ- வில் தொடங்கி லைலா, கஜோல், ஜூகி சாவ்லா, Drew Barrymore, Eva Mendez, Scarlet Johnson, Kirsten Dunsr  என அகில உலக அளவில் வெவ்வேறு காலகட்டத்தில் அடியேனையும் அப்படி இம்சித்தவர்களின் பட்டியல் ஏராளம். காலத்திற்கு தகுந்தார்போல் பட்டியலின் வரிசை மாறும். அந்த வரிசையில் தற்போது பிடித்த மூவர்

நயன்தாரா...


இன்று பல தமிழ் வார பத்திரிக்கைகளுக்கு படி அளந்து கொண்டிருக்கும் புண்ணிய ஜீவன் இவர்தான். அவருடன் காதல், இவருடன் காதல் என நயன்தாரா பற்றி செய்தி இல்லாத வார இதழ் சிந்துபாத் இல்லாத கன்னித்தீவு போல. அவரது தனிப்பட்ட வாழ்கை ஒருபுறம் இருக்க தனது திரைத்துறை வேலையை இப்போதுதான் தொடங்க ஆரம்பித்து இருக்கிறார் அதுதான் நடிப்பு . இன்று இவர்தான் most wanted south heroine. வேலையில் கச்சிதம், டைமிங் , முக்கியமாக சினிமா ராசி, என பீல்டில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். கடைசியாக நடித்த நான்கு படங்களும் ஹிட்டடிக்க  ஒவ்வொரு படத்திலும் அவரது  நடிப்பும்அ ழகும் ஒரு கிலோ கூடிக…

மிட்டாய்..

படம்

அமைதியின் மடியில்......

படம்
தனிமையான நேரம் என்று எதுவும் இல்லை, எதையாவது அள்ளி போட்டு, நிரப்பிக்கொண்டு காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அமைதியான நேரங்கள் வாய்ப்பதுண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் head phone அல்லது தங்கியிருக்கும் அறையில் சில பாடல்களை ஒலிக்க விடுவேன், இதில் ராஜாதான் முதல் தேர்வு. ஜேசுதாஸ் குரல் என்றால் உயிர், SPB, ஜெயச்சந்திரன் போன்ற குரல்களும் அடக்கம். என்பதுகளின் பாடல்களை முன்பெல்லாம் கேட்க பிடிக்காது இப்போது அப்படி இல்லை, வயதாகிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன் . அப்படி நான் அடிக்கடி கேட்கும் பாடல்கள்- அமைதியின் மடியில்....       

கொஞ்சம் ஆசுவாசம்....

படம்
ஹிந்தி பாடல்களை பார்க்க கொஞ்சம் சேனல் தாவினால் கலர் கலராக பல்புகளை எரியவிட்டு பார்ட்டியில் ஆடிக் கொண்டிருப்பார்கள். இல்லை என்றால்  கலர் கலராக டிரஸ் போட்டுக்கொண்டு  எதாவது  function- ல் பாடிக் கொண்டிருப்பார்கள். இதையும் தாண்டி அத்தி பூத்தார்போல ஒருசில பாடல்கள் ரசிக்க தூண்டுபவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட நான் ரசித்த பாடல்களை இங்கு பகிர்கிறேன்.

காதலின் நரம்பு (Marriage Ring).

படம்
உலக அளவில் திருமணத்தின் குறியீடு மோதிரம். மோதிரம் மாற்றுவது என்பது இரண்டு உள்ளங்களையும் இணைப்பதாகும். பல நாடுகளில் இதுதான் திருமணத்தின் மொத்த சாட்சியம். நமது நாட்டில் தாலி போன்ற கயிறுகள்  முதன்மையாக இருந்தாலும் மோதிரம் மாற்றி திருமணம் உறுதி செய்யப்படுகிறது. அதற்குபின் "உனக்கு நான், எனக்கு நீ, நமக்கு நாம்" என வாழ்க்கை தொடங்குகிறது. இந்த மோதிரம் மாற்றிக்கொள்ளும் பழக்கம் எப்படி வந்தது.
பழைய வேதகாமத்தில் சொல்லப்பட்ட எத்தியர்கள் (Hittite) மோதிரங்களை வாழ்க்கையின் உயர்வாக பயன்படுத்தினர். அவர்களின் வழித் தோன்றல்களான எகிப்தியர்கள்தான் முதலில் திருமணத்தின்போது மோதிரம் மாற்றிக் கொண்டனர். நாணல், புல், பாப்பிரஸ் இலை இவற்றைக் கொண்டு அன்றைய திருமண மோதிரத்தை உருவாக்கினர். முடிவில்லா மோதிரங்கள் அமரத்துவத்தை குறிக்கும் என நம்பிய அவர்கள்,மோதிரத்திற்கு திருமணங்களில் முக்கியத்துவம் கொடுத்தனர். அன்றைய எகிப்தியர்கள் இடதுகையில் மோதிரங்களை அணிவார்கள். வாழ்க்கை துணைக்கு அந்த விரலில் மோதிரம் அணிவித்தால், அது நம் மீதான நம்பிக்கையை அதிரிக்கும் என நம்பினர்.
கி.மு.332 - ல் அலெக்சாண்டர் எகிப்தை கைப்பற்ற…

குருட்டு கனவு ..

படம்

City Lights...(1931)...

படம்
சார்லி சாப்ளினை ஏன் திரைப்படத்தின் பிதாமகன் என்கிறோம்? காதல் என்பது என்ன? அழுகை, கோபம், சிரிப்பு, போல காதலின் உணர்ச்சி எது? City Lights பாருங்கள்.

நாடோடியாய் திரிபவனுக்கு, பார்வையற்ற பூ விற்கும் ஏழைப் பெண்ணுக்குமான காதல் கதையே City Lights. கூடவே சாப்ளினின் அதிரிபுதிரி நகைச்சுவையும் கலந்து.
நாடோடியான சாப்ளின் நீண்ட டிராபிக் கிடையே  பூ விற்கும் Virginia Cherrill -ஐ சந்திக்கிறான். அவளிடம் பூக்களை வாங்கும் போது சில்லரையை தவற விடுகிறான் அதை அவள் தட்டுத்தடுமாறி எடுக்க முற்படும் போது அவளுக்கு கண்பார்வை கிடையாது என உணர்கிறான். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் நகருகிறது. அவள் கார் போகும் திசையை நோக்கி கையை நீட்டி மீதி சில்லரை என்கிறாள். சாப்ளினை தவறுதலாக பெரும் பணக்காரன் என நினைத்துக் கொள்கிறாள் இதை அசைவற்று கவணிக்கும் சாப்ளின் மெல்ல நகர்ந்து மறைந்திருந்து அவளை பார்த்து ரசிக்கிறான்.


குடைக்குள் மழை (Mobile Photography).

படம்

Relax (Mobile Photography)..

படம்

ஹிட்லர்....

படம்
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தீய சக்தி என்று ஹிட்லரை மிகச் சரியாக மதிப்பிட்டுவிடமுடியும். ஆனால் அவரைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல. ஹிட்லரின் யூத வெறுப்பு தெரியும். ஆனால் காரணம்?
எவ்வளவு லட்சம் பேர், எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு கொன்றொழிக்கப்பட்டனர் என்பது தெரியும். ஆனால் எதற்காக? மனிதக் கற்பனைக்கு எட்டாத அளவுக்குக் குரூரமான, கச்சிதமான ஒரு கொலைத்திட்டத்தை வடிவமைக்கவேண்டிய அவசியம் என்ன?நாஜிகளால் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படும்போது சாதாரண ஜெர்மானியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?ஹிட்லர் மட்டும்தான் அனைத்துக்கும் காரணமா?

ஹிட்லரை அவருடைய அத்தனை சிக்கல்களோடும் புதிர்களோடும் புரிந்துகொள்ள வேண்டுமானால் நாஜி ஜெர்மனி குறித்த மிக விரிவான ஒரு வரலாற்றுப் பார்வை தேவைப்படுகிறது.அத்தகைய ஒரு பார்வையை வழங்குவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.முழுக்க முழுக்க விவாதங்களின் அடிப்படையிலும் சமீபத்தில் வெளிவந்த வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையிலும் எழுதப்பட்ட புத்தகம். நாஜி ஜெர்மனி குறித்து ஜெர்மானிய வரலாற்றாசிரியர்கள் தற்போது விவாதித்து வரும் சில அம்சங்களையும் ஹிட்லர் குறித்து நாம் கொண்…

கதாவிலாசம்...

படம்
எழுத்தாளர்கள் காலத்தின் கண்ணாடிகள்-சமூகத்தின் சாட்சிகள்! ஒரு பறவையின் எச்சம் மண்ணில் பெரு மரமாய் நிழல் விரிப்பது மாதிரி, ஒரு படைப்பு வாழ்வை இன்னும் இன்னும் அர்த்தப்படுத்தியபடி வாழ்ந்துகொண்டே இருக்கும் எப்போதும். நம் தமிழ் மரபே கதை மரபுதான்.

வைத்தது யார் எனத் தெரியாமல் வளர்ந்து அடர்ந்துகிடக்கிற வனத்தைப்போல கதைகளும் நம்மைச் சுற்றி வளர்ந்துகிடக்கின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள் கதைகளின் கைகளைப் பிடித்து நடை பழகியவர்கள். தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த 'கதாவிலாசம்'. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த அனுபவங்களையும் சேர்த்து சுவைபட எழுதியிருக்கிறார் எஸ்.ரா. பாரதியாரிலிருந்து தமயந்தி வரை தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் கதைகள் இந்தப் பட்டியலில் அடக்கம். வாழ்க்கை எவ்வளவு மகத்துவமானது, காலம் எவ்வளவு விசித்திரமானது, மனிதர்கள்தான் எத்தனைவிதமான எண்ணங்களோடு வாழ்கிறார்கள் என ஏராளமான ஆச்சரியங்களையும் கேள்விகளையும் இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் நமக்குள் எழுப்புகிறது. இதைப் படிக்கும்போது கல்லெ…

டாலர் தேசம் ....

படம்
இந்த புத்தகம், கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தைக் கண்டுபிடித்ததில் தொடங்கி தற்போதைய நிகழ்வுகளில் முடிகிறது. கொலம்பஸ் கண்டுபிடித்தவுடன், ரோம் நகரத்தின் போப் கண்ணசைவில் சில ஐரோப்பிய நாடுகள் மட்டுமே இங்கு குடியேறத் துவங்கின. அதன் பிறகு நாடு பிடித்துப் பணம் சம்பாதிக்கும் ஆசையில் பிரிட்டிஷ், ஃப்ரான்ஸ், ஸ்பானிஷ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவில் தங்கள் குடியேற்றங்களை அமைத்தனர். இவர்களில் போட்டியில் செவ்விந்தியர் எனப்படும் அமெரிக்காவின் பூர்வக் குடிமக்கள் எப்படியெல்லாம் தங்கள் சொந்த மண்ணை விட்டுத் துரத்தி அடிக்கப்பட்டார்கள் என்பதை முதல் சில பக்கங்கள் விவரிக்கின்றன.

உயிர்.....

படம்
உலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான்.

அழுகை, கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட்டால் மன இறுக்கம் குறைந்து அவன் தேடும் பரவசம்,சந்தோஷம் கிடைக்குமென அனுபவசாலிகளும் அறிவியலாளர்களும் உணர்ந்து சொல்கின்றனர்.

நள்ளிரவில் சுதந்திரம்

படம்
நள்ளிரவில் பெற்றோம் ,
இன்னமும் விடியவே இல்லை...


அழகிய புதுக்கவிதை. இந்தியாவிற்கு  சுதந்திரம் நள்ளிரவில் ஏன் வழங்கப்பட்டது, ஆகஸ்ட்-15 ஏன்? என்ற கேள்விக்கு சரியான விடையை இந்த நூலில் காணலாம்.
1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தப்பின் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்துக்களும் முஸ்லிம்களும் பட்ட துயரங்கள் இதில் ரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது. முஸ்லீம்களுக்கு தனி நாடே என்று பிடிவாதமிருந்த ஜின்னா, இந்தியாவை கூறுபோடுவற்கு முன் என் உடலை கூறுபோடுங்கள் என்று முழங்கிய காந்திஜி,நோய்க்கு  தீர்வு காண்பதை விட்டுவிட்டு காந்தி காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டிருக்கிறார் என்ற மாற்று கருத்து கொண்ட நேரு.தொழில் புரட்சி மட்டுமே மறுமலர்ச்சி என்று  நம்பிய படேல், கஷ்மீர் தனி நாடு என அடம்பிடித்த ஹரிசிங்."விடுதலைக்கு மட்டுமே நாங்கள் ஒன்றுபடுவோம் சேர்ந்து வாழ அல்ல " என  நினைத்த இந்திய மக்கள்,, இவர்களுக்கிடையே இந்தியாவில் தங்களது சாம்ராஜியத்தை முடித்துக்கொள்ள அனுப்பப்படுகிறார் மவுண்ட் பாட்டன்.மிகவும் சிக்கலான ஒரு காலகட்டம். கடைசி வைசிராய் இந்தியாவில் என்ன செய்தார். பிரிவினையின் போது அவர் கையான்ட வி…

மீண்டும் பாரதி...மீண்டும் கண்ணம்மா...

படம்
பாரதி கண்ணம்மாவின் மேல் அப்படியொரு காதல் ஏனென்று தெரியவில்லை. மீண்டும் சில பாடல்களை தேடிப்பிடித்திருக்கிறேன்.
கேட்டுக்கொண்டிருக்கிறேன். 

ஆல்பம்.......

படம்
ஆல்பம்

அவ்வபோது சினிமா பாடல்களைத்தாண்டி நல்ல இசைக்காக நெட்டில் அலைவதுண்டு. சமீபத்தில் ரசித்த பாடல்களை பகிர்ந்து கொள்கிறேன். சில மொழிகள் தெரியாத பாடல்களைக்கூட சேமித்து வைத்திருக்கிறேன். நல்ல இசையிருந்தால் போதும் மொழி ஒன்றும் தேவையில்லை. பெரிய வித்துவான்னு நினைக்காதிங்க! இசையைப் பொருத்தவரை நான் கழுதை, மோர்ந்து பார்பதோடுசரி.கற்பூர வாசனையறியேன்...

சிறிய தென்றல்.......

படம்
சில பாடல்கள் படத்தின் கதையை ஒட்டியே வரும் ஒன்றிரண்டு நிமிடங்களில் சிறிய தென்றெலென கடந்து விடும். அடடா முடிந்து விட்டதே என தோன்றும். நேர்த்தியான இசையை அந்த பாடல்களில் காணலாம். அப்படிப்பட்ட பாடல்கள்.

ஒரு நாய் ....ஒரு துப்பாக்கி....ஒரு கதை......

படம்
சிறுவனுக்கு நிலையாமையை உணர்த்திய நெகிழ்வான சம்பவம்!

ABCD-2. Yaariyan. Kurbaan (பாடல்கள்) .

படம்
சமீபத்திய தமிழ் புதுப்பாடல்கள் அவ்வளவு கவர்ந்ததாக தெரியவில்லை. இங்கு கிடைக்கவுமில்லை அப்படியே வடக்கே கொஞ்சம் போனேன். தேடி ரசித்த மூன்று பாடல்கள்.

அய்யய்யோ!  பாடா படுத்துறானே..

படம்
அய்யய்யோ!  பாடா படுத்துறானே. அக்கம் பக்கம் திட்டு வாங்கிக்கொண்டு சில பாடல்களை கேட்பதுண்டு. கல்லூரிக்காலமாகட்டும் மேன்சன் காலங்களாகட்டும் ஹைபிட்சில் பாடல்களை அலரவிட்டு தாளத்திற்கேற்ப டான்ஸ் செய்வதுண்டு. அவ்வாரான பாடல்களை வரிசைபடுத்தியுள்ளேன்.

சிறியதென தென்றல்..

படம்
சின்னத்தாயவள் - தளபதி.

இந்த பாடலுக்கு கண்ணீர் சிந்தாதவர் இருக்காவா?  முடியும். படத்தின் மையப்புள்ளி இந்த பாடல். ஒட்டு மொத்த கதையையும் தாங்கக்கூடிய பாடல். ஜானகி அம்மாவின் குரல் கேட்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. நேர்த்தியான ஒளிப்பதிவு பாடலுக்கு மிகப்பெரிய பலம். ராஜா என்ற அன்னையின் தாலாட்டு. 

ரஹ்மானின் மெஸ்மரிச பாடல்கள். Water & High way...

படம்
ரஹ்மானின் மெஸ்மரிச பாடல்கள் இவை. கேட்கும் போது அப்படியே இழுத்துக் கொண்டு வேறிடத்தில் விட்டுவிடும் இசை. சிறிது ஆசுவாசம் தேவைப்படும் போதெல்லாம் ஒலிக்க விடுவேன். முதல் இரண்டு பாடல்கள் Water படத்தில் இடம் பெற்ற பாடல்கள். சாதனா சர்கம் பாடியிருப்பார். கம்பியில் நடப்பதை போல படத்தின் கதை அதற்கு இசை என்பது கையில் பிடித்திருக்கும் குச்சியைபோல் இருக்க வேண்டும். ரஹ்மான் அதை சிறப்பாக செய்திருப்பார்.

ராஜ போதை ....

படம்
காதல், மோகம், பிரிவு, காமம் என
உயிரின் அடி ஆழம்வரை தொட்ட பாடல்கள் இவை. ராஜ போதை. ஆம் ராஜாவின் போதை. 
(முன் குறிப்பு இந்த பாடல்களை எப்ப வேண்டும் என்றாலும் கேளுங்கள். ஆனால் பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் பதினொரு மணிவரை காத்திருங்கள்).

No Man's Land......

படம்
அதிகாலைப் பொழுது Bosnia-வின் எல்லைப்பகுதியில் ஒரு போராளிக்குழு துப்பாக்கியுடன் நுழைகிறது. விழித்துக்கொண்ட இராணுவம் அவர்களை தாக்குகிறது. எல்லோரும் இறத்துவிட Ciki (Branko Djuric) என்பவன் மட்டும் No Man's Land என வரையறுக்கப்பட்ட பதுங்கு குழியில் தங்குகிறான். சிறிதுநேர அமைதிக்குப்பின் எவரேனும் உயிருடன் இருக்கிறர்களா பார்பதற்கு  ஒருசில வீரர்களுடன் அனுபவம் இல்லாத  Nino (Rene Bitorajac) அனுப்பப்படுகிறான். பதுங்கு குழியில் நோட்டமிடுகின்றனர் யாரும் இல்லை என உறுதிபடுத்தியபின் அங்கு கிடக்கும் போராளி ஒருவனின் உடலுக்கு அடியில் கண்ணிவெடி ஒன்றை பதித்து வைக்கின்றனர். எதுவும் புரியாத Nino ஏன் இவ்வாரு செய்கிறீர்கள் என கேட்கிறான். இந்த உடலை மீட்கவரும் போராளிக்குழு வெடித்துசிதறட்டும் என அப்படி செய்வதாக சக வீரன் ஒருவன் கூறுகிறான்.


Rio-2

படம்
Blu-Jewel தனது மூண்று குழந்தைகளுடன் நகரத்தில் வசித்து வருகிறது. Blue macaws என சொல்லக்கூடிய அறிய வகை நீலக்கிளி இனத்தை சார்ந்த இவை Linda Gunderson என்பவரின் வீட்டில் மனிதர்களைப்போல் வாழ்ந்து வருகிறது.ஒருநாள் Jewel tv-ல் நீலக்கிளிகள் Amazon காட்டில் இருப்பதை பார்த்துவிடுகிறது. தனது குடும்பமும் காட்டில் சுதந்திரமாக இருக்க வேண்டுமென நினைக்கிறது. தனது ஆசையை கணவனிடம் சொல்கிறது. நீண்ட வாக்குவாதத்திற்குப் பின் அனைவரும் கிளம்ப முடிவு செய்கின்றனர். Rio முதல் பாகத்தில் இருந்த Nigel இப்பொது தனது சிறகுகளை இழந்து பறக்கமுடியாத நிலையில் ஒரு ஜோசியம் சொல்பவனிடம் கூண்டில் அடைபட்டுக் கிடக்கிறது. Blu-வைப்பழிவாங்க Charlie என்னும் எறும்பு திண்ணி மற்றும் Gabi எனும் விஷத்தவளையுடன் தப்பித்து அதுவும் Amazon காட்டிற்கு செல்கிறது.


Color of Paradise ....

படம்
உலக சினிமாவில் முதலிடம் வகிப்பது ஈரானிய திரைப்படங்கள். இரண்டாமிடம் கொரியன் திரைப்படங்கள். ஈரானிய திரைப்படங்களை முதலிடத்திற்கு அழைத்துச் சென்றவர்களில் முக்கியமானவர் மஜீத் மஜீதீ. நீங்கள் உன்னத சினிமாவை சுவைக்க வேண்டுமா தவறாமல் இவரை சேர்த்துக்கொள்ளுங்கள். உலகில் நிறைய திரைப்படங்கள் வெளிவந்து
கொண்டேயிருக்கின்றன. அவற்றுள் மனித சிந்தனையை மேம்படுத்தும் மகத்தான படைப்புகள் மிக அறிதே. அவ்வரிசையில் என்றென்றும் முக்கிய இடத்தில் உள்ளது 'கலர் ஆஃப் பாரடைஸ்' (Color of Paradise) எனும் இவரது திரைப்படம்.
கண் பார்வையற்ற இளம் சிறுவன் ஒருவனின் அழகிய கலர்புல் உலகம்தான் colour of paradise.