☰ உள்ளே....

ராஜ போதை ....

காதல், மோகம், பிரிவு, காமம் என
உயிரின் அடி ஆழம்வரை தொட்ட பாடல்கள் இவை. ராஜ போதை. ஆம் ராஜாவின் போதை. 

(முன் குறிப்பு இந்த பாடல்களை எப்ப வேண்டும் என்றாலும் கேளுங்கள். ஆனால் பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் பதினொரு மணிவரை காத்திருங்கள்).


ஹேராம்...

ராஜா சிங்கம் ஹங்கேரியில் முழங்கிய இசை. கமல் எனும் மன்மதன் விட்ட அம்பு. காதலர்களின் இதயத்தை நிச்சயம் துளைத்திருக்கும். 


தளபதி.

தலைவன் - தலைவி என காப்பியங்களில் வரும் பிரிவு பாடல். போர்களத்திற்கு சென்ற தலைவனின் வரவை எண்ணி பேதை உருகும் பாடல். மீரா..

ஆஷா போஸ்லே யின் கொஞ்சும் குரல்.கேட்கும் போது பட்டர்பிளை போல் மனது சிறகடித்து பறக்கிறது.வள்ளி..

மோகம் கொண்ட பெண்ணின் ரீங்காரம்.
சுவர்ணலதாவின் குரலில் கோரசாக ஒளிக்கிறது.