போர்வீரனின் கதை.




ஈராக்..ஸ்னைபர் (Sniper) துப்பாக்கியின் லென்ஸ் கட்டிடங்களுக்கிடையே யாரையோ தேடிக் கொண்டிருக்கிறது. யாருமற்ற அமைதியில் ஒரு வீட்டிலிருந்து பெண்மனியும் அவரது சிறிய மகனும் வெளிவருகின்றனர். அந்த பெண் திடீரென தன்னுடன் வந்த சிறுவனிடம் எதையோ? கொடுக்கிறாள்,அதனை அவன் மறைத்துக் கொண்டு அமெரிக்க படைகள் இருக்குமிடைத்தை நோக்கி வருகிறான். அனைத்தையும் லென்ஸ் கண்கள் நோட்டமிட்டபடியே இருக்கிறது.
அந்த சிறுவன் மறைத்து வைத்த பொருளை வெளியே எடுத்து வீச நினைக்கிறான். அது வெடி குண்டு. கண்ணிமைக்கும் நேரத்தில்  இதனை பார்த்துக் கொண்டிருந்த லென்ஸ் கண்கள் துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்துகிறது. படம் Cris Kyle - ன் இளமை காலத்திற்கு பின் நோக்கி பயணிக்கிறது.

சிறுவன் Cris Kyle -க்கு அவனது தந்தை ஒரு மானை வேட்டையாட சொல்லித்தருகிறார். Cow boy ஆக நினைக்கும் அவன் வளர்ந்ததும் அமேரிக்காவின் Navy SEAL படையில் சேருகிறான். அங்கு Sniper(தொலை தூரத்திலிருந்து சுடக்கூடிய துப்பாக்கி சுமார் 2000 அடி தூரம்) ஆக பயிற்சி பெறுகிறான். ஒரு பார்டியில் Tanya -வை சந்திக்கும் அவன் அவளை காதலித்து திருமணம் செய்து கொள்கிறான். செப்டம்பர் 9/11 தாக்குதலுக்கு பின் அல் கயிதா தீவிரவாதிகளைத் தேடி ஈராக்கிற்கு அனுப்பப்படுகிறான்.

மீண்டும் படம் லென்ஸ் கண்களுக்கு மாறுகிறது. வெடிகுண்டை கொண்டு வந்த சிறுவன் கீழே இறந்து கிடக்கிறான். அவனை அனுப்பிய பெண்மனி வெடிக்காத அந்த குண்டை எடுக்க முயல்கிறாள் மீண்டும் டிரிகர் அழுத்தப்படுகிறது அவளும் செத்து வீழ்கிறாள். அன்று மாலை வீர செயல் புரிந்த Cris Kyle - ஐ சக வீரர்கள் பாராட்டுகின்றனர். ஈராக்கில் இது அவனுக்கு முதல் பயணம் ஓய்வில் திரும்பவும் அமேரிக்கா செல்கிறான் மனைவியுடன் பொழுதைக் கழிக்கிறான்.

பயணம்- 2 மீண்டும் ஈராக். இந்த முறை இவனுக்கு புதிய பொருப்புகள் ஒப்படைக்கப் படுகிறது Cheif petty officer-ஆக பதவி உயர்வு பெறுகிறான். அல் கயிதாவின் முக்கிய பொருப்பாளியான Abu Musab al Zargawi -என்பவனைத் தேடும் பணிதான் அது. அவனது ஆதவாளர் ஒருவனின் வீட்டை முற்றுகையிடுகின்றனர் தேடுதல் வேட்டை தொடங்குகிறது. ஒரு சில சுடுதல்கள் மற்றும் ஓய்வு கிடைக்கிறது. கற்பமாக இருக்கும் மனைவியை பார்கச் செல்கிறான். அகிய பெண் குழந்தை பிறக்கிறது நாட்கள் நகருகிறது.

பயணம்- 3. மீண்டும் ஈராக். தீவிரவாத குழுவிலூம் Kyle போல ஒரு Sniper செயல்படுகிறான் அவனது பெயர் முஸ்தபா சிரியா நாட்டிற்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கியவன் பின்னாளில் தீவிரவாதியாக மாறியவன் அமேரிக்க வீரர்களின் தேடுதலை தடுக்கிறான். Kyle தன் சக வீரனை இழக்கிறான் ஒரு முறை அல் கயிதா முக்கிய தலைவனை மயிரிழையில் தவற விடுகிறான். மேலும் தன்னுடன் இருக்கும் சில வீரர்களையும் இழக்கிறான்.

பயணம்-4 அவனுடன் சக வீரன் இறந்ததை நினைத்து அவன் மனைவி கலக்கம் கொள்கிறாள். வேலையை விட்டுவிடும்படி கூறுகிறாள். குழப்பத்தோடு மீண்டும் ஈராக் வருகிறான். இந்தமுறை போர் தீவிரமடைந்த தருணம் நிறைய இழப்புகளை சந்திக்கின்றனர். தேடி வந்த அல்கயிதா தலைவனை சுற்றி வளைக்கின்றனர் இருந்தும் எதிரிகளின் Sniper முஸ்தபா இவர்களை தடுக்கிறான். Cris Kyle அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதம் 2010 அடி தொலைவில் பதுங்கியிருந்த முஸ்தபாவை சுட்டு வீழ்த்துகிறான். எதிர் தாக்குதலும் தீவிரமடைய அமேரிக்கபடை பின் வாங்குகிறது. இதில் Cris Kyle பலத்த காயமடைகிறான்.

அமேரிக்கா. Kyle கொஞ்ச கொஞ்சமாக குணமடைந்து வருகிறான். தன் குடும்பத்தோடு பொழுதை கழிக்கின்றான். போர் சுழலில் இருந்த அவனுக்கு ஒருவித மன நோய் தாக்குகிறது அதிலிருந்து விடுபட மருத்துவரை அனுகுகிறான். ஓய்வு நேரங்களில் இராணுவ ஓய்வு பெற்ற சங்கத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு போகிறான். நாட்கள் நகருகின்றது ஒருநாள் மனைவியிடம் Goodbye சொல்லிவிட்டு கிளம்புகிறான். அங்கு தவறுதலாக சுடப்பட்டு இறக்கிறான்.

இராணுவ மரியாதையுடன் Cris Kyle உடல் அமேரிக்க வீதிகளில் ஊர்வலமாக கொண்டுவரப் படுகிறது. நாடு அவனுக்கு Leagend பட்டம் வழங்கி கௌரவிக்கிறது. ஈராக் தேடுதலில் Kyle சுட்டுத் தள்ளியது கிட்டத்தட்ட 255 பேர் அதில் 160 பேரை தீவிரவாதிகளாக இராணுவம் உறுதி செய்கிறது.. அவனது உடல் சிறந்த வீரனுக்கு உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது திரை மெல்ல இருள்கிறது.

இது காஷ்மீர் தீவிரவாதியை வசனம் பேசி வாயலையே கொல்லும் கேப்டன் கதையில்லை. ஏழுமலை, ஏழுகடல் தாண்டி இருக்கும் தீவிரவாதியை கண்டு பிடித்து, வைக்கிங் பனியனுடன் சன்டை போட்டு, நாட்டை காப்பாற்றும் ஹீரோவின் கதையும் அல்ல. மாயாஜால வித்தைகாட்டி வாயபிளக்க வைக்கும் ஜேம்பான்ட் கதையுமில்லை,  Navy SEAL படைப் பிரிவில் வேலை செய்த Cris Kyle எனும் அமெரிக்க Sniper - ன் சுயசரிதை. சொல்லப்போனால் தனக்கு கொடுத்த டார்கெட்டை தவறவிட்டு,காயம் பட்டு திரும்பியவனின் கதை. ஏன், ஏதற்கு, எனத் தெரியாமல் அனுப்பப்படும் ஒருவனின் கதை. உலகெங்கும் போர் நடந்து கொண்டே இருக்கிறது. வீரர்கள் மடிந்து கொண்டே இருக்கின்றனர். அப்படி அனுப்பப்படும் ஒருவனின் மன ஓட்டமே இந்த திரைப்படம்.

படத்தில் ஒரு காட்சி வரும். Kyle ஒரு மொட்டை மாடியில் லென்ஸ் கண்களால் நோட்டமிட்டுக் கொண்டிருப்பான் ஒரு சிறுவன் ஏதோ யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பான். அமேரிக்க படையின் டாங்கி தெருவில் வந்து கொண்டிருக்கும். திடிரென ஒருவன் ராக்கெட் லான்சருடன் வெளிப்படுவான் அமேரிக்க டாங்கியை குறிவைப்பான்.  Kyle அவனை சுட்டு வீழ்த்துவான். அவன் வீழ்தவுடன் அங்கு அமர்ந்திருந்த சிறுவன் அந்த ராக்கெட் லான்சரை தூக்க முடியாமல் தூக்கி குறிவைப்பான் Kyle அந்த சிறுவனையும் கொல்ல டிகரை அமுத்த முயல்வான் கண்ணிமைக்கும் நேரத்தில் அச்சிறுவன் லான்சரை போட்டுவிட்டு ஓடிவிடுவான். இந்த காட்சி தீவிரவாதம் எப்படி பழக்கப்படுத்தப் படுகிறது என்பதை நமக்கு காட்டுகிறது. துப்பாக்கி சத்தம் கேட்டிறாத நாளை இந்த உலகம் பெறப்போவதே இல்லை. அது கண்டுபிடித்த நாளிலிருந்து இன்றுவரை உறங்கியதேயில்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் ஒலி அமைப்புதான் போர் சுழலை கண்முன்னே கொண்டு வருகிறது. அடுத்து நேர்த்தியான ஒளிப்பதிவு லென்ஸ் கண்களுடன் ஒரு வீடியோ கேம் பார்பதுபோல் தோன்றுகிறது. Bradly Cooper நிஜ Cris kyle -ஐ கண்முன் கொண்டுவருகிறார் வெகு இயல்பான நடிப்பு. ஈராக்கின் போர் சுழலிலே நேர்த்தியாக படம் பிடித்திருக்கின்றனர். படத்தில் தேவையான இடத்தில் மட்டும் இசை பயன்பட்டிருக்கிறது. சுயசரிதைக்கு அழகாக உயிர் கொடுத்திருக்கின்றனர். தவறாமல் பாருங்கள்.