Two States: The Story of My Marriage


உலகை சுற்றிலும் உள்ள காதல் திருமணங்கள் எளிதானவையே! .பையன் பெண்ணை காதலிக்கிறான், பெண் பையனை காதலிக்கிறாள். இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் அவ்வளவுதான். ஆனால் நம்ம இந்தியாவில் நிலமையே வேறு. பையன் பெண்ணை காதலிக்கிறான், பெண் பையனை காதலிக்கிறாள். பெண்ணின் குடும்பம் பையனை விரும்ப வேண்டும், பையனின் குடும்பம் பெண்ணை விரும்ப வேண்டும். பெண்ணின் குடும்பம் பையனின் குடும்பத்தை விரும்ப வேண்டும். பையனின் குடும்பம் பெண்ணின் குடும்பத்தை விரும்ப வேண்டும். ஸ்....ஸ்...அப்பாடா!  கண்ணகட்டுதா?
நிஜம்தான். இதற்கு பிறகும் பையனும், பெண்ணும் காதலித்தால் திருமணம் என்பது சாத்தியமே.


கிரிஷ் பஞ்சாபை சேர்ந்தவன். அனன்யாவுக்கு தமிழ்நாடு இருவரும் IIM -ல் சந்திக்கின்றனர். மனதிற்குள் பட்டாம்பூச்சி, நீண்ட புரிதலுக்குப் பின்,ல.ல.ல ஊ.உ.ஊ டூயட் பாடுகின்றனர். அப்புறம் என்ன? மனதார காதலிக்க தொடங்குகின்றனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர். பிரச்சனையே அங்குதான் ஆரம்பிக்கிறது. இருவரும் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு கலாச்சாரத்தை கொண்டவர்கள்.மேலே குறிப்பிட்டது போல் குடும்பத்தில் உள்ளவர்களும் விரும்ப வேண்டுமே! வழக்கம் போல் பெற்றோர்கள் எதிர்கிறார்கள். அதற்கு கிரிஷும் அனன்யாவும் என்ன செய்தார்கள்?  இதுதான் கதையின் சுவாரசியமே.
வழக்கமான பழைய கதைதான் ஆனால் நகைச்சுவையாக எழுதிய விதம் ரசிக்க வைக்ககிறது. சுஜாதாவை நினைவுபடுத்துகிறார் சேதன் பகத். ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிடக்கூடிய சிறந்த எழுத்துநடை. ஜாலியயா பிடிச்ச ஸ்னாக்ஸை சாப்பிட்டுக்கொண்டு வேடிக்கைபார்த்துக் கொண்டே நகரும் மாலை நேர இரயில் பயணம் போல் கடக்கிறது நாவல்.

Two State என்ற இதே பெயரில் 2014-ல் திரைப்படமாகவும் வெளிவந்து பல பாராட்டுகளைப் பெற்றது. அர்ஜுன் கபூர் கிரிஷாகவும், ஆலியாபட் அனன்யாவாகவும் நடித்திருந்தனர். அபிசேக் வர்மா இயக்கி இருந்தார். ஆலியாவின் தமிழ் அம்மாவாக ரேவதி நடித்திருந்தார்.

சேதன் பகத் (1972) இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர். இன்றைய இந்திய இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தன்னுடைய எழுத்துகளில் பதிவு செய்கிறார். தனது முழுநேர வங்கி தொழிலை தூக்கி வீசிவிட்டு எழுத்துப்பணிக்கு வந்தவர். திரைப்படத் துறையிலும் பிரபலமானவர் இவரது பிற படைப்புகள்.

Five point someone.
One night at the call center.
The 3 mistakes of My Life.
Revolution
What young India wants.
Half Girlfriend
Making India awesome.