சிறியதென தென்றல்..

 சின்னத்தாயவள் - தளபதி.

இந்த பாடலுக்கு கண்ணீர் சிந்தாதவர் இருக்காவா?  முடியும். படத்தின் மையப்புள்ளி இந்த பாடல். ஒட்டு மொத்த கதையையும் தாங்கக்கூடிய பாடல். ஜானகி அம்மாவின் குரல் கேட்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. நேர்த்தியான ஒளிப்பதிவு பாடலுக்கு மிகப்பெரிய பலம். ராஜா என்ற அன்னையின் தாலாட்டு. 




கடவுள் பாதி மிருகம் பாதி - ஆளவந்தான்.

கமலின் குறும்பு. வைரமுத்துவின் உன்னத வரிகள் உண்மையை உணர்த்துகின்றன. "உள்ளே மிருகம் வெளியே கடவுள் விளங்க முடியா கவிதை நான் ". முழுப்பாடல் வரிகளையும் கேட்டுப்பாருங்கள் நிதர்சன தத்துவம் விளங்கும். 



அன்பென்ற மழையில்- மின்சார கனவு.

ரஹ்மானின் மாஸ்டர் பீஸ்பிரார்தணைப் பாடல். இன்றும் சில தேவாலயங்களில் துயில் எழுப்புதல் பாடல்களாக இந்த பாடலை ஒலிபரப்புகின்றனர். அனுராதா ஸ்ரீராமின் மயக்கும் குரல் அமைதியின் பாதைக்கே இட்டுச்செல்கிறது. வைரமுத்துவின் வரிகள் தேவனை கண்முன்னே காட்டுகிறது. மதத்தையும் தாண்டி எல்லோரையும் ரசிக்க வைக்கும் பாடல்.


கொல்லையிலே தென்னைவைத்து - காதலன்.

இது காதலின் தாலாட்டு. தூக்கம் பிடிக்காத காதலிக்கு காதலனிடமிருந்து வரும் தென்றல் தாலாட்டும் வரிகள். மீண்டும் AR. ரஹ்மான் - வைரமுத்து கூட்டணி. ஜெயச்சந்திரனின் காந்தக் குரல் நம்மையும் தாலாட்டவே செய்கிறது.


அடி காவக்கார கிளியே! - அவன் இவன்.

ஜாலியான சீன்டல் பாடல். யுவனின் இசையில். எனக்கு இந்த பாடலில் பிடித்தது ஜனனியின் கண்கள்.


பூப்போல் - மின்னலே.

ஹரிஸ் ஜெயராஜுக்கு முகவரி தந்த பாடல். இன்றும் இளசுகளின் பேவரிட் ரிங்டோன் இந்த பாடல். தலைவி மழையில் நனைகிறாள் மறைந்திருந்து பார்க்கும் தலைவன் அவளோடும் இசையோடும் சேர்ந்து நனைகிறான். நாமும் சேர்ந்து நனைவோம்.


என்னைத் தீண்டிவிட்டாய் - குத்து. 

சின்மயி, பிரசன்னராவின் காதல் டுயட், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் காதல் காய்ச்சலின் ராகம். காதல் ஸ்பெஷல். காதல் வந்தவுடன் கட்டிலில் புரன்டுகொண்டு காதலியும், விட்டத்தை பார்த்துக்கொண்டு காதலனும் பாடும் வழக்கமான பாடல்தான் இருந்தாலும் சம்திங் ஸ்பெஷல்.


உன்னை நானறிவேன் -குனா.

தாய்மையின் தாலாட்டு பாடல். பாடலின் பல்லவியை வரலட்சுமி அம்மா பாடி இருப்பாங்க பழைய படங்களில் இவங்க பக்தி பாடல்கள் மிகவும் பிரபலம்.குரலில் ஒரு தனித் தன்மை இருக்கும். மீதி சரணத்தை ஜானகி பாடியிருப்பாங்க.பாடலின் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் "உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் " ஆஹா! .