வில்லோடு வா நிலவே.

உலகின் மிகத் தொன்மையான நாகரிகமான நமது திராவிட நாகரிகம் பற்றி புத்தங்களில் படிக்கும் போதெல்லாம் நாமும் அதனின் மிச்சமென நினைத்து பெருமைப்படுகிறேன். காதலும், வீரமும் கலந்து செய்யப்பட்ட கலாச்சாரம். வீரத்தையும், மானத்தையும் உயிராகவும், மரணத்தை வாழ்க்கையின் பரிசாக கருதிய நம் இனத்தை பற்றி கர்வமே தோன்றுகிறது. சேரன் செங்குட்டுவனின் தம்பி "ஆட்கோட்பாட்டுச் சேரலாதன் " என்பவன் "காக்கைப் பாடினியார் நச்செள்ளை" என்ற பெண் புலவரை தன் பக்கத்து கொண்டான் என்கிறது சேரர்களின் வரலாறு. சாதாரண கொல்லனின் மகளுக்கும், இளவரசனுக்கும் இடையேயான காதல் மலர்ந்த விதம் வீரத்துடன் இந்த புதினத்தில் கூறப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, போன்ற வரலாற்று புதினங்கள் வரிசையில் வைரமுத்து எழுதிய காதல் காவியம்தான் "வில்லோடு வா நிலவே ".


அறிவு,அழகு,வீரம் கலந்த பெண் கிடைப்பதே அறிது. அதிலும் ஒரு புலவர் பட்டத்து அரசியாக இருந்தது வரலாற்றையும் வியக்க வைக்கிறது. அப்படிப்பட்ட பெண்ணை சேரலாதன் எப்படி உருகி,உருகி காதலித்திருப்பான் கவிதை போல விவரிக்கிறது இந்த புதினம். காதல் காவியமென்றே சொல்லலாம் வைரமுத்துவின் காதல் வரிகள் சொட்டச்சொட்ட எழுதப்பட்ட புதினம்.

நீங்கள் காதல் வயப்பட்டவரா?  புதினத்தை படித்து பாருங்கள் காதலின் ஆழம் அதிகரிக்கும். காதலிக்கத் தெரியாதவரா? காதலைப் பற்றி அழுத்தம் அதிகரிக்கும்.

வில்லோடு வா நிலவே.  
வைரமுத்து
கிழக்கு பதிப்பகம்
விலை ரூ. 150.00.