இடுகைகள்

October, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
☰ உள்ளே....

துப்பாக்கி...

படம்

அந்த பட்டு வேஷ்டிக்காரர் (அனுபவம்) .

அதிகாலை இரண்டுமணி முதல் நான்கு மணிவரை இரயில்வே ஸ்டேஷனில் கொஞ்சம் அமைதி நிலவும். எங்களது அரட்டையின் உச்சகட்டம் அப்போதுதான் தொடங்கும். மணி கூட கண்ணசந்து பப்பியையோ ஜூலியையோ நினைத்து கனவு கண்டுகொண்டிருக்கும் தருணம் அது வழக்கம் போல் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ஏதேச்சயாக கண்ணில் பட்டது அந்த உருவம். சுமார் ஐம்பது வயதிருக்கும் மிடுக்காக பட்டு வேஷ்டி சட்டையில் பார்ப்பதற்கு பணக்காரர் போல் தோன்றிய அவர்  தண்டவாளங்களை வெறித்தபடியே அமர்ந்திருந்தார். நாங்கள் உலக பொருளாதாரத்தைப் பற்றியும் நதிநீர் பங்கீடு பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம் (வெட்டி பேச்சிற்கு வேறென்ன வேண்டும்) ஆனாலும் எனது பார்வை அவரை கவணித்தபடியே இருந்தது.

யாரோ? ஒருவர் ஏதோ? பிரச்சனை போல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே இருக்கிறார் வாங்க போய் விசாரிக்கலாம் என்று ராமகிருஷ்ணன் சாரிடம் கூறினேன். நமக்கு ஏன்டா வம்பு? பேசாதிரு என்றார் அவர். சார், நியாபகம் இருக்கா? இதே போல் ஒருநாள் ஒரு பையன் இதே ஸ்டேஷனில் இப்படித்தான் உட்கார்ந்திருந்தான் அப்போது அவன் மீது அன்பாக ஒரு கை விழுந்தது அதற்குப்பின் இருவரும் வயது வித்தியாசம் பார்க்காமல் நண்ப…

உயிர் நண்பன்.

எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால், உடனே ஓடிவருகிறான் உயிர் நண்பன்.
வழக்கமாக சரக்கடிக்கும்
டாஸ்மாக் பாருக்கு..

கடவுளின் உண்டியல்.

படம்

அப்பாவுடனான பயணம் ..

"பார்த்து மெல்ல போப்பா" என தோளை அழுத்தும் அப்பாவுடனான பயணம், "இன்னும் வேகமா மிதிப்பா" எனும் பால்யகால நினைவை நோக்கி விரைகிறது..

சேலையில் நீ...

4G கவிதைகள் (No Rules).முள் கரண்டியில்
சிக்கியிருக்கும்
நூடுல்ஸ்.சேலையில் நீ...

Two States: The Story of My Marriage

படம்
உலகை சுற்றிலும் உள்ள காதல் திருமணங்கள் எளிதானவையே! .பையன் பெண்ணை காதலிக்கிறான், பெண் பையனை காதலிக்கிறாள். இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் அவ்வளவுதான். ஆனால் நம்ம இந்தியாவில் நிலமையே வேறு. பையன் பெண்ணை காதலிக்கிறான், பெண் பையனை காதலிக்கிறாள். பெண்ணின் குடும்பம் பையனை விரும்ப வேண்டும், பையனின் குடும்பம் பெண்ணை விரும்ப வேண்டும். பெண்ணின் குடும்பம் பையனின் குடும்பத்தை விரும்ப வேண்டும். பையனின் குடும்பம் பெண்ணின் குடும்பத்தை விரும்ப வேண்டும். ஸ்....ஸ்...அப்பாடா!  கண்ணகட்டுதா? நிஜம்தான். இதற்கு பிறகும் பையனும், பெண்ணும் காதலித்தால் திருமணம் என்பது சாத்தியமே.

4G கவிதைகள் (No rules) .

கொசுவென
கடிக்கிறது
உன் நினைவுகள்.Good night
Active mode.

சங்கு..

படம்

முன் இரு கை குழந்தை

படம்

மீண்டும்.மீண்டும்..நீ.

படம்

நெளிவு....

படம்

டிரைலர் -Muhammad: The Messenger of God

படம்
வேதாளம் டிரைலர் இங்கு மொக்க போடு போடும் நேரத்தில் மன்னிக்கவும் சக்க போடு போடும் நேரத்தில் எதாவது உருப்புடியா படம் வெளியாகி உள்ளதா என you  tube- ல் தேடினேன் இரண்டு படங்களின் டிரைலர்   மிகவும் பிரபலம் அதிக எண்ணிக்கையில் பார்க்கப்பட்டிருந்தது ஒன்று  The Walk. ஏற்கனவே இந்தப்படம் பார்த்துவிட்டு பதிவு செய்துவிட்டேன் மற்றொன்று  Mohammad The Messenger of God.

வாழ்த்துக்கள்.

படம்

அன்பாசிரியர் - சித்ரா....

படம்
பெரிய அளவில் பணம் சம்பாதிப்பதற்குப் பதிலாக, பெரிய மாற்றத்தை விதைக்க ஆசைப்பட்டேன். அதனாலேயே ஆசிரியர் ஆனேன்!"- தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் சாதித்ததற்காக குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது, அப்துல் கலாமின் பாராட்டு, மைக்ரோசாப்ட்டின் உலகளாவிய மன்ற, தேசத்தின் சாதனையாளர் விருது, நல்லாசிரியர் விருது மற்றும் ஏராளமான தேசிய, மாநில, ஊரக விருதுகள் பெற்ற சித்ரா என்னும் அரசுப் பள்ளி ஆசிரியரின் வார்த்தைகள் இவை.


இனி சித்ராவின் பயணம், அவரின் வார்த்தைகளிலேயே...

"1996-ம் ஆண்டு விக்கிரவாண்டி ஊராட்சியின் வாக்கூர்பகண்டை என்னும் ஊரின் தொடக்கப் பள்ளியில், என் ஆசிரிய வாழ்க்கை தொடங்கியது. அப்போது நான் ஒன்றாம் வகுப்பு ஆசிரியை. வழக்கமான அ, ஆ தானே என்றிருந்த எனக்கு, மாணவர்களே பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள், அவர்கள் எழுதிய 'அ'வையும், 'ஆ'வையும், படிக்க கூடுதல் முயற்சி தேவைப்பட்டது.
அப்போது பேருந்தில் பள்ளிக்கு வந்து சேர ஒன்றரை மணி நேரம் ஆகும். அந்த சமயத்தில் குஜராத்திய எழுத்தாளர் ஒருவர் எழுதிய 'கனவு ஆசிரியர்' என்ற புத்தகம் கிடைத்தது. அதில் கூறப்பட்டிருந்த வழிமு…

புரியாத புதிர்..

படம்
பிகாஸோ, ஹுசைன் போன்றவர்களின் ஓவியங்களில் புதிர் மறைந்திருக்கும். அதுபோல டிரை பன்னலாமென தோன்றியது. இது ஓவியம் அல்ல கிரியாட்டிவ்.

Colour of Paradise ..

படம்

சாதி..

படம்

வயிறு..

மாடோ!
பன்றியோ!
எதைத் தின்றாலென
செரிக்குமா? என
பார்த்துக் கொ(ல்)ள். இப்படிக்கு
வயிறு..

Book of acting..ஆச்சி.

படம்

வில்லோடு வா நிலவே.

படம்
உலகின் மிகத் தொன்மையான நாகரிகமான நமது திராவிட நாகரிகம் பற்றி புத்தங்களில் படிக்கும் போதெல்லாம் நாமும் அதனின் மிச்சமென நினைத்து பெருமைப்படுகிறேன். காதலும், வீரமும் கலந்து செய்யப்பட்ட கலாச்சாரம். வீரத்தையும், மானத்தையும் உயிராகவும், மரணத்தை வாழ்க்கையின் பரிசாக கருதிய நம் இனத்தை பற்றி கர்வமே தோன்றுகிறது. சேரன் செங்குட்டுவனின் தம்பி "ஆட்கோட்பாட்டுச் சேரலாதன் " என்பவன் "காக்கைப் பாடினியார் நச்செள்ளை" என்ற பெண் புலவரை தன் பக்கத்து கொண்டான் என்கிறது சேரர்களின் வரலாறு. சாதாரண கொல்லனின் மகளுக்கும், இளவரசனுக்கும் இடையேயான காதல் மலர்ந்த விதம் வீரத்துடன் இந்த புதினத்தில் கூறப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, போன்ற வரலாற்று புதினங்கள் வரிசையில் வைரமுத்து எழுதிய காதல் காவியம்தான் "வில்லோடு வா நிலவே ".

Status

ஓசை..

படம்

மிருகப் புணர்ச்சி..

படம்

வெங்காயம்..

படம்

சேமிப்பு..

படம்

The Walk.....

படம்
அலுவலகம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தேன் எதார்த்தமாக கண்ணில் பட்டது அந்த போஸ்டர். உயரமான கட்டிடங்களுக்கு நடுவே ஒரு கயிறு இரண்டு கால்கள் என The Walk படத்தின் போஸ்டர் அது. இரவுக்காட்சி சினிமா என்றால் பிரியம் மொத்தம் இருபத்தைந்து பேர் மட்டுமே இருந்திருப்பார்கள் தியோட்டரில் நுழைந்தேன். தனியாக சினிமா பார்பது கொடுமை, தூக்கம் பிடிக்காமல் சென்றிருந்தேன்.
முதலில் மெல்ல பயணித்தது தூங்கி விடுவேனோ என நினைத்து சாய்ந்து கொண்டேன். சிறிது நேரத்திற்குப் பின் தூக்கம் கலைந்து ஆர்வம் அடைந்தேன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தேன் படத்தின் காட்சிகள் வேகமெடுக்க இருக்கையின் நுனிக்கே கொண்டு சென்றது திரைக்கதை. மயிர்கூச்செரியும் காட்சிகள் என்று சொல்வார்கள் அது போலத்தான் இருந்தது. 23 ஆம் புலிகேசி ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் கிளைமேக்ஸ் காட்சியில் கபாலத்தில் இருக்கும் முடிகளெல்லாம் கம்பி போல் நீட்டிக் கொண்டுவிட்டது. அப்படி என்ன இருக்கிறது இந்த படத்தில் ? அதற்கு முன் Philippe Petits என்பவரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சின்ன சின்ன ஆசை..

சின்ன சின்ன குட்டியோன்டு ஆசைகள் எல்லா மனதிலும் இருக்கும். தினசரி நடவடிக்கைகளில் நமக்கே தெரியாமல் அவற்றை எல்லாம் நாம் அனுபவித்து வருவோம். அது நமது பழக்க வழக்கமாகவே கூட மாறிவிடும். ஒவ்வொரு நாளையும் இந்த குட்டி  குட்டி ஆசைகள்தான் அழகாக்கின்றன. அடியேன் அப்படி அனுபவிக்கும் ஆசைகளை இங்கு எழுதலாமென்று தோன்றியது.

அதிகாலை காற்றை நாசிக்குள் செலுத்துவது பிடிக்கும். (சொந்த ஊர் அல்லது மலைப் பிரதேசங்கள் என்றால் மிக உத்தமம்).
பல்லு வெலக்காத காஃபி. (படுக்கைக்கு வந்தால் பரவாயில்லை).
பிடித்த பாடல்களை ஒளிக்க விட்டு
வீட்டு வேலைகளை செய்வது. (துணிதுவைப்பது, அறையை சுத்தம் செய்வது, சேவ் இத்யாதி - ஞாயிறு மட்டும்).
குளத்தில் குளிப்பது அதுவும் குதித்த பின் குளி. (சொந்த ஊருக்கு போனால் மட்டுமே இது வாய்க்கும், மீதி நாட்களில் காக்கா குளியல்தான்) .
வானெலியில் இருந்து சுடச்சுட தட்டிற்கு தாவி விழும் வறுத்த மீன் துண்டுகள் ( அம்மா கை பக்குவம்).
புதிய டிஷ் சமைக்க பிடிக்கும்.
(கொஞ்சம் சமைக்கத் தெரியும் வீட்டில் மூன்று சோதனை எலிகள் இருக்கிறது அம்மா, அப்பா, தம்பி) .
ஃபுல் கட்டு கட்டிட்டு மதிய வேளையில் குட்டி தூக்கம் (ஏற்க…

ஜீன்ஸ் .

அயர்ன் தேவையில்லை,
அழுக்கு தெரியாது,
அஞ்சாறு தடவை போடலாம்,
அதற்கு மேலும்
என்ற நம்பிக்கையில்
துவைக்கப்படுகிறது.
-ஜீன்ஸ்...

Branded..

சட்டை,
பேண்ட்,
பனியன்,
ஜட்டி,
செருப்பு,
வாட்ச்,
பேஸ்ட்,
பிரஸ்,
சோப்பு,
சீப்பு,
ஃபெர்பியூம்,
எனஎன்னைத் தவிர 
நான் உபயோகப்படுத்தும்
அனைத்துமே
Branded........

தமிழுக்கும் அமுதென்று பேர்...

படம்
தமிழுக்கும் அமுதென்றுபேர் பாரதிதாசனின் வரிகள். பஞ்சவர்ணக்கிளி என்ற படத்தில் MSV இசையில் சுசிலா பாடியிருப்பாங்க. Old is glold வரிசையில் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் இது. கேட்கும் போதெல்லாம் ஒரு சிலிர்ப்பு ஏற்படும் அப்படியே நம்மை மெஸ்மரிசம் செய்தது போலிருக்கும். அந்த பாடலை  வானவில் வாழ்க்கை என்ற படத்தில் சமீபத்தில் ரீமேக் செய்திருக்கிறார்கள். டிரண்டி இசையமைப்பில் ஜனனி, மற்றும் ஜித்தின் பாடியிருக்காங்க. பாடலை சிதைக்காமல் அப்படியே கொடுத்திருக்காங்க சமீபத்தில் சுவைத்தது. படத்தோட இயக்குனர் யார் தெரியுமா?  ஜேம்ஸ் வசந்தன்.அழகிய பாடல் கேட்டு ரசிங்கள்.

மதச்சார்பு..

ரம்ஜான்,மற்றும் பக்ரீத் நாளில் பிரியாணிக்காக ஏங்குவதே! மதச்சார்பற்ற இந்து(தி)ய மனம்.

கடவுளின் Status.

Today is my best day.I am in temple. Blessing in God. Enjoy the moment.   happy. என கடவுளோடு செல்பி எடுத்து Status போட்டேன். அடுத்து நொடி ஒரு Status வந்தது.Today is my bad day? I am also tird. How many peoples? How many requests?. Oo so sad.. From - @கடவுள்.

தேவதைகளின் ...குரல்கள்...

படம்
Who says- Selena Gomez..

சிறிய Band களில் பாடிக்கொண்டிருந்த Selena -விற்கு இது மூண்றாவது ஆல்பம் (when the sun goes down).அதுவும் இந்த பாட்டு செம ஹிட்டு. தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு ஓப்பனிங் சாங் ஒன்னு இருக்கும் மலையில இல்லனா மழையில ஓடி,ஆடி உருண்டு விழுந்து பாடுவாங்க அதுபோல ஒரு பாடல்தான் who says. பெண்களோட ஹிட்லிஸ்டில் தவறாமல் இடம்பெரும். Selena -வுக்கும் நல்ல ஓப்பனிங் அதற்குப் பிறகு பொண்ணு செம பிசி. 

நட்பு...

கையில் காசில்லாமல் பசித்திருக்கும் வேலையில்,
மச்சான் சரக்கடிக்கலாமாடா? 
செலவு என்னது - என்கிறது இடுக்கண் களையும் நட்பு....

மிடில்கிளாஸ் மனது..

பெரிய ஹோட்டலின் முன் பர்ஸ்ஸை சோதித்துப் பார்த்துவிட்டு நுழைகிறது மிடில்கிளாஸ் வயிறு....

The Dawns Here are quiet..

படம்
அதிகாலையின் அமைதியில்.
1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தீவிரமடைந்த காலம் ரஷ்யாவில் ஜெர்மானியர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிழக்கே மூர்மன்ஸும் மேற்கே லெலின் கிராத்தும் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் 171 இருப்புப்பாதை கிளைநிலையத்தில் உள்ள பண்டகசாலையை பாதுகாக்கும் பொருப்பு கமாண்டர் சார்ஜண்டு மேஜர் வாஸ்கோவிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஏற்கனவே சிதைந்து போன இந்த இடத்தில் போர் சூழல்கள் பெரிதும் இல்லாததால் பாதுகாப்புப் பணியைமட்டுமே வீரர்கள் செய்து வருகின்றனர்.வேலையற்ற சூழ்நிலையில் வீரர்கள் செயலின்றி குடிப்பதும் கும்மாளமிடுவதும் நடந்து கொண்டேயிருக்கிறது. மிகவும் கடுகடுப்பான மேஜர் பொருத்துக்கொள்ள முடியாமல் மேலிடத்திற்கு தகவல் அனுப்புகிறான். தயவு செய்து குடிப்பழக்கம், பெண் போதை இல்லாதவர்களை அனுப்பவும்.இந்த பழக்கங்கள் இல்லாதவர்கள் என்றால் அலிகளைத்தான் அனுப்பவேண்டுமென பதில் வருகிறது. வாஸ்கோவ் திரும்பத்திரும்ப நச்சரிப்பதால் மேலிடம் இருபது புதியவர்களை அனுப்புகிறது. அவர்களை கண்டதும் மேஜர் அதிர்ச்சியடைகிறான். அனைவரும் பெண்கள். முடிந்தால் சமாளித்துக்கொள்.
மேஜருக்கு…

கொலுசு...

படம்

வளையல்..

படம்

மூக்குத்தி...

படம்

இதழ்..

படம்

எலிவால் தூரிகை - சந்திரன்.

படம்

பக்தி..

நான் கடவுளை நாடிச்செல்வதில்லை.
அவரும் என்னை எதிர்பார்பதில்லை..

இருள்..

படம்
இருள்.

பிழைப்பு..

பிழைக்கத் தெரியாதவன் என்கிறார்கள் வாழத்தெரியாதவர்கள்.

நடிகன் ...

நடிகன் என்பவன் சாதாரண மனிதன்.
காட்டுமிராண்டிகளாகிய நாம்தான் கடவுளாக பார்க்கிறோம்..

திமிரு.

திமிரு பிடித்தவன்
என்கிறார்கள்..ஆம் ! கைகளில் மட்டும்...

புலி- விமர்சனம்....

காலையில் அலுவலகம் செல்லும் வழியில் மிகவும் கூட்டமாக இருந்தது என்ன காரணம்? என்றேன். இன்னக்கி "புலி" வருகிறது என்றார்கள். இரவு திரும்புகையில் அங்கு யாரையும் காணோம். ஒருவேளை புலி அடித்திருக்குமோ!

எங்கடா இருக்கீங்க?

உனக்காக உயிரையும் கொடுப்பேன்டா!  என்ற நண்பர்களை தேடிக்கொண்டிருக்கிறேன் - அவசரமாக 500 ரூபாய் கைமாத்து தேவைப்படுகிறது..

எலிவால் தூரிகை.- கதிரவன்..

படம்

Say No...

படம்

Save Trees..

படம்