காகர் கி ஆக் (குன்றிலிட்ட தீ)

சில நீண்ட காத்திருப்புகளில் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்து முடித்துவிடுவேன். அப்படி வாசிக்கப்பட்ட சிறு நாவல்தான் குன்றிலிட்ட தீ.
கனவன் இறந்துவிட்டால் மனைவி தீக்குளிக்க வேண்டுமென நிலை மாறி கனவனுக்குப்பின் ஒரு ஆண் துணை தேடிக்கொள்ளலாம் என்ற நிலை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆணும் பெண்ணும் திருமணமானாலும்,ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை ஒரு ஒப்பந்தத்தின் கீழ் சேர்ந்து வாழலாமென கூத்தும் நடந்து கொண்டிருக்கிறது. கள்ளக்காதலும்,கொலையும் தினம்தினம் நடந்தவண்ணமே இருக்கின்றன. நியாயம்,அநியாயம் எல்லாம் அவரவர் வைத்திருக்கும் பணத்தைப் பொருத்தே அமைகிறது.


இந்த நாவலில் வரும் நாயகி கோமதி,ஏழைக் குடிசையில் பிறந்த அழகு தேவதை. அந்த அழகுதான் அவளது வாழ்க்கையில் ஆபத்தாகவும் முடிகிறது. உபயோகமற்றப் பொருளாய் இருக்கும் கனவன், துன்பத்தை இன்பமாக்கப் பிறந்த மகன் இதுவே அவளது குடும்ப வட்டம். கோமதியின் வாழ்வைப் பொருத்தவரையில் துண்பத்திற்காகவே பிறந்தவள். எங்கே சென்றாலும் அவள் அடக்கு முறைகளுக்கும், கொடுமைகளுக்கும், அவமானங்களுக்கும் ஆளாகி ஓடிக்கொண்டிருக்கும் அவலநிலை.
மோசமான சமுதாயக் கட்டுப்பாடுகளும், ஆண் வர்கத்தின் காமக் கழுகு பார்வையும் துரத்த நாவல் முழுவதும் ஓடிக்கொண்டேயிருக்கிறாள். ஒரு கட்டத்தில் ஆறுதலாக ஒருவன் கிடைத்துவிட அவளை காப்பாற்றி தன் குழந்தையில்லாத இரண்டு மனைவிகளோடு திருமணம் செய்து கொள்கிறான்,அதற்காக அவளை பணம் கொடுத்தும் வாங்கிக் கொள்கிறான்.  தன் முதல் கனவனையும், குழந்தையையும் கோமதி மறந்து வாழ்ந்தாளா? என்ன நடந்தது? கதையின் முடிவு என்ன? வாசித்துப் பாருங்கள்.

இந்த உலகம் மாறினாலும் கோமதி போல சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் பெண்களை விலை கொடுத்து வாங்கும் பழக்கம் நடந்து கொண்டேயிருக்கிறது.அப்படிப்பட்ட ஒருத்தியின் உண்மைக்கதையை ஆழகாக நாவலாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். கதையில் வரும் கிமு சித்தப்பா இன்னும் உயிருடன் இருக்கிறார். கோமதி வாழ்ந்த கிராமத்திற்கு சென்று நடந்தவைகளைக் கேட்டு ஆசிரியர் எழுதியிருக்கிறார். அவள் இருந்த வீடு பாழடைந்து கிடக்கிறது. கோமதி நிஜத்தில் என்னானாள். அவளது மகன் எங்கு இருக்கிறான் யாருக்கும் தெரியாது.ஊமை மனிதர்களின் வலிகளை உலகறியச் செய்வதே தனது இலக்கிய கடமை என்கிறார்ஆசிரியர்.
நாவலை படித்து முடித்தபின் மனம் கணக்கிறது. கோமதியை நினைத்தவுடன் கண் கலங்குகிறது. இந்த பெண்தான் எவ்வளவு வலிகளைத் தாங்கக்கூடியவள். தவறாமல் வாசியுங்கள்.

காகர் தி ஆக்
ஹிமான்ஷு ஜோஷி.
தமிழில் குன்றிலிட்ட தீ
அலமேலு கிருஷ்ணன்.
நியு செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.
விலை ரூ - 60.00

ஹிமான்ஷு ஜோஷி.

ஹிந்தியில் படப்பிலக்கியமும், கட்டுரைகளும் சுமார் 40 ஆண்டுகளாக எழுதிவரும் மூத்த பத்திரிக்கையாளர்.
சர்வதேச ஹிந்தி எழுத்தாளர் சங்கத்தின் செயலாளரராகவும். திரைப்பட தணிக்கைக்குழு உருப்பினராகவும் உள்ளார்.
இவரது "சுராஜ்"மற்றும் "தும்ஹாரே லியே" நாவல்கள் புகழ் பெற்றது. இவரது படைப்புகள் பல திரைப்படமாகவும் தொலைக்காட்சி நாடகமாகவும் உருவெடுத்துள்ளன. இந்த நாவலும் திரைப்படமாக எடுக்கப்பட்டு பல விருதுகளை பெற்றது.