பயனுள்ள சில ஆண்ராய்டு மென்பொருள்கள்




Ever Note.

அலுவலக உபயோகத்திற்கு மிகவும் பயனுள்ள மென்பொருள். அன்றாட வேலைகளை குறிப்பெடுத்துக்கொள்ளவும், அதை பகிர்ந்துக்கொள்ளவும் உதவுகிறது. கூடுதலாக வேர்டு, எக்சல், படங்களையும் இணைத்துக்கொள்ள வசதி தரப்பட்டுள்ளது. சிறிய படங்கள் வரைய ஸ்கெட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. மீட்டிங் மற்றும் வேலை அட்டவணைகளை உங்கள்கீழ் பனியாற்றுபவர்களுக்கு Work chat எனும் பகுதிமூலம் பகிர்ந்து கொள்ளலாம். செய்து முடிக்கப்பட்ட வேலைகளை ஹைலைட் செய்யவும், குறியிட்டுக்கொள்ளவும் முடியும். அலுவலகம் மட்டுமல்ல தனிப்பட்ட குறிப்புகளையும் வைத்துக்கொள்ளலாம். ரிமைன்டர் வசதியும் உள்ளது. இது உங்கள் மின்னஞ்சல் கணக்கின் மூலமே இயங்கும். மொபைல்போன் மட்டுமில்லாமல், டேப் மற்றும் லேப்டாப்பிலும் இணைத்துக் கொள்ளலாம். உங்கள் குறிப்புகள் ஒவ்வொருமுறையும் பாதுகாக்கப்படும். நீங்கள் உங்கள் மொபைல் மற்றும் கனிணியினை மாற்றினாலும், அனைத்து குறிப்புகளையும் பெறலாம். ஒவ்வொரு முறையும் திருத்தம் செய்து அப்டேட் செய்கிறார்கள். ரகசியமாக குறிப்புகளை பாதுகாத்துக்கொள்ளும் வசதியும் உண்டு.மிகச்சிறந்த மென்பொருள்.


Cam Scaner.

இது உங்களுடைய டாகுமென்டுகளை, புகைப்படங்களை, கேமரா மூலம் ஸ்கேன் செய்து கொள்ள உதவும் சிறந்த மென்பொருள். அவ்வாறு ஸ்கேன் செய்தவற்றை PDF வடிவிலும் Image வடிவிலும் பிறருக்கு பகிர்ந்து கொள்ள மிகவும் பயன்படும். அலுவலக பில்கள், ஆவணங்கள், மேலும் பல கோப்புகளை வெகுவிரைவில் விரல்முனையில் ஸ்கேன் செய்யலாம். ஸ்கேன் செய்தவற்றை ஒழுங்குபடுத்தவும், ஒன்றிற்கு மேற்பட்டவைகளை வரிசையாக அடுக்கவும் முடியும். தனிப்பட்ட டாகுமென்டுகளை அதாவது பாஸ்போட், லைசென்ஸ், அடையாள அட்டை போன்றவற்றை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளுங்கள் நிச்சயம் பயன்படும். எளிதாக கையாளக்கூடிய மென்பொருள். அப்டேட் வெர்சன் கிடைக்கிறது.

Expence manager.

உங்கள் வரவு-செலவு கணக்குகளை நிர்வகிக்கும் மென்பொருள். நாள், மாதம், வருடமென கணக்குககளை பராமரிக்கிறது. ஒவ்வொருநாள் வரவு செலவுகளை இதிலிருக்கும் Category -ல் தனித்தனியே குறிப்பிட்டு வந்தால் தங்களுடைய கையிருப்பு நிலையை காட்டிவிடும். வங்கி பரிவர்த்தனை மற்றும் காசோலைகளை இதில் இணைக்களாம். வரவு செலவுகளை தனித்தனியே Chart போட்டு காண்பிப்பது கூடுதல் வசதி. அடே இதுக்கு இவ்வளவு செலவு செய்திருக்கிறோமே! என பார்க்கும் போதெல்லாம் தோன்றுமளவுக்கு சிறப்பாக வடிவமைத்துள்ளனர். கணக்கு பரிவர்த்தனைகளை எக்சலில் பேக்கப் எடுத்துக்கொள்கிறது.
தேவையானால் பிரின்ட் செய்துகொள்ளளாம். ஏதேனும் பொருள் வாங்கினால் அதன் பில்,மற்றும் பல டாகுமென்டுகளை இதில் சேமித்து வந்தால் மிகவும் பயண்படும். (பின் குறிப்பு இந்த மென்பொருளை மனைவியிடம் காண்பித்து விடாதீர்கள். பின்னால் நிகழும் அசம்பாவிதங்களுக்கு நிர்வாகம் பொருப்பாகாது.)

Ezhuthani (Tamil keyboard)

தமிழில் டைப்செய்ய உதவும் எளிமையான மென்பொருள். உயிரெழுத்துகளையும், மெய்யெழுத்துக்களையும் அடுக்கிவிட்டு உயிர்மெய் எழுத்துக்களை தனியே தனித்து தெரியுமாறு வெவ்வேறு வண்ணங்களில் கொடுத்திருக்கிறார்கள். விரைவில் எளிதாக டைப் செய்யமுடிகிறது. சில ரிப்ளே மெசேஞ்களும் கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவே இடத்தை அடைத்துக்கொள்கிறது. டவுன்லோடு செய்தவுடன் செட்டிங்ஸில் Keyboard options -ல். ஒருமுறை பதிவு செய்யவேண்டும் செல்போனில் உள்ள அனைத்து மென்பொருள்களிலும் தமிழை சுலபமாக பயன்படுத்தலாம்.

Google Accounts:

உங்கள் ஆண்ராய்டு போனை உங்கள் மின்னஞ்சல் முகவரியில் செயல்படுமாறு மாற்றுங்கள்.உங்களது Contact நம்பர்களை Google Account-ல் சேமியுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் வேறொரு போனை மாற்றினாலும் கூட உங்களுக்கு நீங்கள் சேமித்துவைத்த Contacts  -ஐ திருப்ப பெறலாம். மேலும் காலண்டரில் மறக்கமுடியாத நாட்களின் வரவையும், நினைவுகளையும் குறித்து வைத்துக்கொண்டால் உங்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருக்கும். நண்பர்களின் மொபைல் எண்கள் இனி தொலைந்துபோகாது. மேலும் Play store -ல் உள்ள. ஒருசில மென்பொருட்களை இலவசமாகவும் பெற இந்த மென்பொருள் உதவும்.