சமுதாயம்.

அவர் டிரிங்க்ஸ் சாப்பிடுவார் -பணக்காரன். ..
அவன் குடிப்பான் - ஏழை.
..................................................................................................

சில பல வேலைகளும்.
சில பல நட்பும்.
சில பல உறவுகளும்.
சில பல சரக்கினால் மட்டுமே
சாத்தியமாகின்றன. 
 .................................................................................................. 

மிஸ் கிட்ட சொல்லிடாதடா
இண்டர்வெல்லில் ஐஸ் வாங்கித்தறேன்.
என்பதில் ஆரம்பிக்கிறது லஞ்சம் .
அதை வாங்கி
நக்குவதில் ஆரம்பிக்கிறது ஊழல்.
..................................................................................................

ரம்ஜான் மற்றும் பக்ரீத் நாளில் பிரியாணிக்காக ஏங்குவதே! 
மதச்சார்பற்ற இந்து(தி)ய மனம். 
..................................................................................................

மாடோ!
பன்றியோ!
எதைத் தின்றாலென
செரிக்குமா? என
பார்த்துக் கொ(ல்)ள்.
இப்படிக்கு
வயிறு..
..................................................................................................

கவனிக்க!.... உதிரம் சிவப்பேயின்றி 
வேறெந்த வண்ணமில்லை.
..................................................................................................

ஊர்கூடித் தேரிழுத்தோம்..
தேரிழுத்து
தெருவில் விட்டோம்.
..................................................................................................

ஒரு மகள்,
         சகோதரி
         தோழி
         காதலி
         மனைவி
         அன்னை யென,
மாது விள(ல)க்கினால்
மதுவிலக்கு சாத்தியமே...