அய்யய்யோ!  பாடா படுத்துறானே..

அய்யய்யோ!  பாடா படுத்துறானே. அக்கம் பக்கம் திட்டு வாங்கிக்கொண்டு சில பாடல்களை கேட்பதுண்டு. கல்லூரிக்காலமாகட்டும் மேன்சன் காலங்களாகட்டும் ஹைபிட்சில் பாடல்களை அலரவிட்டு தாளத்திற்கேற்ப டான்ஸ் செய்வதுண்டு. அவ்வாரான பாடல்களை வரிசைபடுத்தியுள்ளேன்.


They don't care about this - MJ

சிறுவயதில் சிங்கப்பூரிலிருந்து மாமா MJ -வின் Bad ஆல்பம் கேசட் கொண்டு வந்திருந்தார் அப்போதிலிருந்து பாப் கிங் MJ -விற்கு அடிமையானேன். அவரது எல்லா ஆல்பங்களும்,ஏன்? சின்ன ஹம்மிங்கூட தொகுத்து வைத்துள்ளேன். பாப் உலகின் முடிசூட மன்னன் இன்றும் அவரது பாடல்களையும் நடன அசைவுகளையும் காப்பியடித்துக்கொண்டுதான் உள்ளார்கள்.They don't care about. Colombia verson MJ -வின் சொந்த ஊரில் படமாக்கப்பட்ட பாடல். கிராமத்து டிரம்ஸ் வாசிப்பவர்களை பயன்படுத்தியிருப்பார். பாடலின் முடிவில் இரண்டு நிமிடங்கள் டிரம்ஸ் ஒலிக்கும் நம்மஊரு தார தப்பட்டை போல. கலா மாஸ்டர் ஸ்டைலில் சொன்னா!  சும்மா கிழி,கிழின்னு கிழித்திருப்பார்கள்.


I am slave for u.- Britney Spears 

ஹி.ஹீ.கொஞ்சம் கிளுகிளுப்பு பாடல். MJ -விற்கு அடுத்து பெண் பாடகிகளில் Britney என்றால் உயிர். கல்லூரிகாலங்களில் அறை முழுவதும் அவளது படங்களை ஒட்டிவைத்திருப்பேன். மயக்கும் குரலுக்கு அடிமை. One more time,  opps like did again. Toxic போன்றவை ஹிட்டடித்தாலும் எனக்கு இந்தபாடல் மிகவும் பிடிக்கும். பாடலின் முதல் வரியைப்போலவே அவரது குரலும் அந்த Feeeeeeling.


Maria - Ricky Martin.

உலகமெங்கும் கிட்டதட்ட எல்லா மொழிகளிலும் காப்பியடிக்கப்பட்ட பாடல். கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு தேசியகீதம்போல் இருந்தபாடல். Rickey Martin -ன் மற்ற பாடல்களை நீங்கள் கேட்கும்போது அட! இத முன்னமே கேட்டுருக்கேன் எனத்தோன்றும். நம்மாளுங்க நிறைய சுட்டுருக்காங்க. பாவம் இப்ப அவர் பாடுறதேயில்லை.


On the floor - Jenifer Lopez.

தேவதை Jenifer -ன் பார்ட்டி ஆல்பம். Pitbull - கூட சேர்ந்து பாடியிருப்பாங்க. அவரது Jenifer blog ற்றும் Peppi ஹீட் வகைகள்.மெலடிஸ் இயல்பா வரும் அவங்களுக்கு.பாடலில் செம Fantasy - ஆக இருப்பாங்க இந்த பின்னழகு தேவதை. 


In da club - 50 cent.

50 cent - ஐ ராப் பாடுபவர்களில் உச்சத்தில் வைத்த பாடல். வரிகள் முழுவதும் கெட்ட வார்த்தைகள் தாராளம். நமக்குதான் இங்லீஸ் தெரியாதே அப்ப என்ன கவலை?. 
இந்த பாடலை கேட்கும்போது சுபிக்ஷா நினைவுக்கு வருவாள். அவள்குழந்தையாக இருக்கும்போது பாடலின் தாளத்திற்கேற்ப தலையாட்டுவாள் வேடிக்கையாக இருக்கும். ரீமோட் வால்யூம் கூட்ட தானாகவே கைவரும் பாடல்.


Danza - Kundro - Rabiosa.. - Don omer.vs Shakira vs Pitbull.

மூவர் கூட்டனி. Fast of Furious டீசருக்காக பாடிய பாடல். Shakira -வின் கொலப்பியன் வாய்ஸ். அவரது Hip உலகமுழுவதும் பிரபலம். மன்னிக்கவும் Hip hop உலகம் முழுவதும் பிரபலம். இதுல அதெல்லாம் இல்லை இருந்தாலும் சும்மா காது பஞ்சராகும் பாடல்.