☰ உள்ளே....

ABCD-2. Yaariyan. Kurbaan (பாடல்கள்) .

சமீபத்திய தமிழ் புதுப்பாடல்கள் அவ்வளவு கவர்ந்ததாக தெரியவில்லை. இங்கு கிடைக்கவுமில்லை அப்படியே வடக்கே கொஞ்சம் போனேன். தேடி ரசித்த மூன்று பாடல்கள்.
Sun Saathiyaa- ABCD 2.

சுப்ரபாரதம் போல் தினமும் ஒருமுறையாவது கேட்டுவிடுகிறேன் பாடல் பார்ப்பதற்கும் நன்றாகவே இருக்கிறது. Aashiqui-2 திரைப்படத்தில் கலக்கிய சாரதா கபூரா இது? பொண்ணு பாடலில் செம டான்ஸ் போடுகிறது. பாடலின் உணர்சிகள் முழுவதையும் அப்படியே முகத்தில் பிரதிபலிக்கிறார். இயல்பிலே சோகமான முகம் அவருக்கு அதுவே அழகும் கூட. Sachin Jihar இசையில் ABCD -2 திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல், ABCD என்றால்  Any Body Can Dance. காதலோடு கைகோர்த்து பாடலை ஒலிக்கவிட்டு ABCD என சொல்கிறது இந்த பாடல். Baarish- Yaariyan.

Aashiqui தயாரிப்பின் அடுத்த படம். அதுபோல பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் படம் ஓரளவிற்கு ஹிட்தான். படத்திற்கு இசை மொத்தம் நான்குபேர் இந்த பாடலுக்கு Mithoon இசையமைத்திருக்கிறார். Mohammad Irgan குரலில் மெலடியாக ஒலிக்கும் பாடலின் நடுவே கடக்கும் வயலின் அருமை. காதல் ஸ்பெஷல்.Shukran Allah- Kurbaan.

கொஞ்சம் பழய பாடல்தான் எதார்த்தமாக கேட்டேன். லாதா மங்கேஷ்கருக்கு பிறகு இந்தியாவை மயக்கும் குரல் ஸ்ரையா கோஷலுடையது. எல்லா மொழிகளிலும் கூவுகிறது இந்த குயில். Salim Merchant இசையில் Sonu Nigam சேர்ந்து பாடிய அழகிய டூயட். ரியல் ஜோடியான கரினாவும் சோயிப் அலிகானும் காட்சிக்கு இன்னும் அழகு சேர்க்கிறார்கள். இதுவும் காதல் ஸ்பெஷல்தான்.