காதல் பூ.




Hye Young ஓவியம் வரைபவள், Jeong Woo ஒரு இன்டர்போல் ஆபிசர், Park Yi தொழில்முறை கொலைகாரன். இந்த மூவருக்கும் இடையேயான முக்கோண காதல் கதைதான் Daisy.

Hye Young சுற்றுலா வருபவர்களுக்கு ஸ்கெட்ச் ஓவியம் வரைந்து கொடுக்கும் வேலை செய்கிறாள். ஒருநாள் அழகான இயற்கை ஓவியம் வரைய சிறிய ஓடையைத் தாண்டி மலைப்பகுதிக்கு போக நினைக்கும்போது கால் தடுமாறி அந்த ஓடையில் விழுகிறாள் தனது ஓவிய பொருட்கள் நிறைந்த பையையும் தவறவிடுகிறாள். மறுமுறை அவள் அங்கு மீண்டும் வரும்போது அந்த வழியில் அழகிய மரப்பாலம் ஒன்று கட்டப் பட்டிருக்கிறது கூடவே அவள் தவறவிட்ட பையும் அதில் மாட்டப்பட்டிருக்கிறது. தனக்காக இந்த அழகிய பாலம் கட்டியவருக்கு தான் வரைந்த Daisy பூக்கள் நிறைந்த ஓவியத்தை பாலத்தில் வைத்துவிட்டு வருகிறாள். இந்த நிகழ்ச்சிக்குப்பின் Hye Young வசிக்கும் வீட்டிற்கு முன் மாலை வேலையில் Daisy பூந்தொட்டி வைக்கப்படுகிறது. தினமும் சரியாக 4.00 மணிக்கு மேல் பூந்தொட்டி வைக்கும் நபரை ஒரு நாளாவது பார்த்து விடவேண்டும் என நினைக்கிறாள். முகம் தெரியாத அந்த நபரின் அன்பில் நனைகிறாள்.  


Park Yi ஒரு தொழில்முறை கொலைகாரன் அவனது தலைவன் கட்டளையிடும் வேலையை சரிவர செய்து முடிப்பவன். Park Yi தங்கியிருக்கும் படகு வீட்டிற்குமுன் கருப்பு மலர்கள் நிறைந்த பூந்தொட்டி வைக்கப்படுகிறது அப்படி வைத்தால் அவனுக்கான வேலை கொடுக்கப்பட்டது என அர்த்தம். அவனும் கிளம்புகிறான் குறிவைத்த நபரை கொல்லுகிறான் வேலை முடித்ததும் ஒரு ஹோட்டல் அறையில் தங்குகிறான் அந்த அறையில் இருந்து ஜன்னல் வழியாக Hye Young -ஐ தெரியாமல் பார்த்து ரசிக்கிறான் சுற்றுலா பயணிகள் குவியும் அந்த ஹோட்டல் முன்புதான் அவள் ஓவியம் வரைந்து சம்பாதிக்கிறாள். மாலை வழக்கம் போல் அவளுக்காக பூந்தொட்டி வைக்கப்படுகிறது.

Jeong Woo ஒரு இன்டர்போல் ஆபிசர் போதை போருட்கள் கடத்தும் கும்பலைத் தேடி கொரியாவிலிருந்து அந்த ஊருக்கு வருகிறான் எல்லோரும் கூடும் அந்த ஹோட்டல் முன்பு வேவு பார்க்கிறான். தற்செயலாக அங்கு ஒவியம் வரையும் Hye Young ஐ சந்திக்கிறான். சந்திக்கும்போது கையில்  Daisy பூந்தொட்டியையும் கொண்டுவருகிறான் தனக்கு ஒரு ஓவியம் வரைந்து கொடுக்குமாறு அவளிடம் கேட்கிறான். அவனை பார்த்தவுடன் Jeong Woo தனக்காக தினமும் பூந்தொட்டி வைப்பவன் இவன்தானோ? என நினைக்கிறாள் அவனை ஓவியம் வரைய தொடங்குகிறாள். இதை அனைத்தையும் ஹோட்டல் அறையில் இருந்து Park Yi ஜன்னலின் வழியே பார்க்கிறான். Jeong Woo திடிரென ஒருவனை கண்டு அங்கிருந்து ஓவியம் பாதி முடிக்காமலே போகிறான். மறுநாள் மீண்டும் அவன் வருகிறான் Hye Young -விடம் பேசிக்கொண்டே வேவு பார்க்கிறான் அவன் மீண்டும் வந்ததை நினைத்து அவள் மகிழ்கிறாள் அவனை அழகாக ஓவியமாக வரைகிறாள். 

நாட்கள் நகர்கின்றன இருவரும் நட்போடு பழகுகின்றனர். ஒருநாள் மாலை Hye Young வீட்டிற்குமுன் ஆபிசர் Jeong Woo பூந்தொட்டியுடன் நிற்கிறான். அவள் அவனை வரவேற்று வீட்டிற்குள் அழைத்து செல்கிறாள் தான் வரைந்த ஒரு ஓவியத்தை காட்டி தனக்காக ஒருநாள் மரப்பாலம் கட்டியவனின் நிஜக்கதையை சொல்லுகிறாள் சொல்லி முடித்து, இப்பொது அவனை கண்டுகொண்டேன் என Jeong Woo வை கட்டிக்கொள்கிறாள் அவனும் அவளை அனைத்துக் கொள்கிறான். அடுத்த மாதம் தான் கலந்துகொள்ளும் ஓவிய கண்காட்சிக்கு தவறாமல் கலந்துகொள்ள அழைக்கிறாள் ஆபிசர் Jeong Woo அதற்கு சம்மதிக்கிறான். 

மறுநாள் வழக்கம்போல் அவள் ஓவியம் வரையும் இடத்தில் ஆபிசர் Jeong Woo மற்றும் Hye Young  இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர் இதனை சன்னலின் வழியே Park Yi பார்த்துக் கொண்டிருக்கிறான். எப்போதும் இல்லாத ஒரு பதற்றம் அங்கு நிழவுகிறது சிறிய கடத்தல் குழுவிற்கும் Jeong Woo க்கும் சண்டை தொடங்குகிறது அங்கு நடக்கும் குழப்பத்தில் Hye Young தவறுதலாக குண்டடிப்படுகிறாள். ஆபிசர் Jeong Woo தான் செய்தது தவறென உணர்ந்து தன்னால் ஒரு அப்பாவி பெண் பாதிக்கப்பட்டாள் என வருந்தி அவளைப் பிரிந்து சொந்த ஊருக்கு திரும்புகிறான். 

குண்டிப்பட்ட Hye Yong தன்னுடைய பேசும் திறனை இழக்கிறாள் சொல்லிக் கொள்ளாமல் பிரிந்த Jeong Woo -வை நினைத்து வருந்துகிறாள். நாட்கள் தநகர்கின்றன ஹோட்டல் அறையிலிருந்து தினமும் அவளை பார்த்து ரசிக்கும் Park Yi பொழிவிழந்த ஓவியமாக அவளை கண்டு கலங்குகிறான். முதல் முறையாக அவளிடம் நெருங்கி வலுக்கட்டாயமாக நட்பு வைத்துக் கொள்கிறான். Hye Young க்கும் அவனுடன் பழகுவது சற்று ஆறுதல் அளிக்கிறது. இதற்கிடையில் கொலைத்தொழில் செய்யும் Park Yi ஒருவனை சுட்டுத்தள்ளுகிறான் அதற்காண விசாரணைக்காக இன்டர்போல் ஆபிசர் Jeeong Woo மீண்டும் அந்த ஊருக்கு திரும்ப வருகிறான். Hey Young ஐ சந்தித்து தான் நடந்து கொண்ட விதத்திற்காகவும் தான் ஒரு போலிஸ் ஆபிசர் என்றும் குற்றவாளிகளைப் பிடிக்க வேவு பார்க்க உன்னிடம் பழகியதாகவும் கூறி மன்னிப்பு கேட்கிறான். Hey Young அனைத்தும் நாடகம் என புரிந்து கொண்டு வாய்விட்டு பேசமுடியாது அழுகிறாள். 

Hey Young தன்னை ஏமாற்றினாலும் ஆபிசர் Jeong Woo நினைப்பிலே வாடுகிறாள். 

Jeong Woo குற்றவாளியை பிடிக்க தன்னையே பணயம் வைக்கத் துணிகிறான் அந்த குற்றவாளி Park-Yi. 

Park -Yi க்கு வழக்கமாக கருப்பு மலர்கள் வைக்கப்படுகிறது இந்த முறை அவன் கொள்ளப்போகும் நபர் ஆபிசர் Jeong Woo.

இதில் யார் பிழைத்தார்கள். Hey - Yong என்ன ஆனாள். அவளுக்கு தினமும் பூந்தொட்டி வைத்தது யார்? அக்ஷன் கலந்த அழகிய காதல் திரைப்படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். 

Official Trailer: 



Official Song: