☰ உள்ளே....

மீண்டும் பாரதி...மீண்டும் கண்ணம்மா...

பாரதி கண்ணம்மாவின் மேல் அப்படியொரு காதல் ஏனென்று தெரியவில்லை. மீண்டும் சில பாடல்களை தேடிப்பிடித்திருக்கிறேன்.
கேட்டுக்கொண்டிருக்கிறேன். 


தீர்த்த கரையினிலே...

வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் கிளைமேக்ஸ் பாடல். பாலச்சந்தருக்கு பாரதியின் மேல் உள்ள காதலை படம் முழுவதிலும் கவிதையில் காட்டியிருப்பார். SPB யின் குரலில் இசையேதுமில்லாமல் தனியே ஒலிக்கும் பாடல். வார்த்தை தவறிய வலி...

"வார்த்தை தவறிவிட்டாய் அடி
கண்ணம்மா மார்புதுடிக்குதடி
பார்த்த இடத்தில் எல்லாம்
உன்னைப்போலவே பாவை
தெரியுதடி....பாவை தெரியுதடி."மாலைப்பொழுதிலொரு 

பாம்பே ஜெயஸ்ரீயின்காந்தக்குரல். மனதிற்கு ஆசுவாசத்தை அளித்திடும் பாடல். கேட்க்கும்போதெல்லாம் மனது சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு திரும்புவதை தவிர்க்கமுடிவதில்லை. மெல்லிய வருடலாக ஒலிக்கிறது.

"மாலைப்பொழுதிலொரு மேடைமிசையே
வானயும் கடலையும் நோக்கியிருந்தேன்
மூலைக்கடலினையவ் வானவளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்தல் கண்டேன்.
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி, 
நேரங்கழிவதிலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற்கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்."சுட்டும் விழிச்சுடர் கண்ணம்மா.

நீண்ட நாட்கள் செல்போனின் ரிங்டோனாக வைத்திருந்தபாடல். AR ரஹ்மானின் இசையில் ஹரிஹரனின் மயக்கும் குரல். பாரதி காதலாகி கனிந்துருகிய பாடல். 

"சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா
சாத்திரம் ஏதுக்கடி
ஆத்திரம் கொண்டவர்க்கே
கண்ணம்மா சாத்திரமுண்டோடீ.
மூத்தவர் சம்மதியில் வதுவை
முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடி இதுபார்
கன்னத்து முத்தமொன்று."