☰ உள்ளே....

பாரதி கண்ணம்மா (பாடல்கள்) .

சினிமா பாடல்களோ, கர்நாடக சங்கீதமோ, அலுவலக நேரத்தில் பாரதியின் பாடல்களை ஒலிக்கவிட்டு வேலைகளை செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். சில காலைப்பொழுதுகள் அவனது கவிதையில் புலரும். அப்படி
சமீபத்தில் கேட்கும் மூன்று பாடல்களை இங்கு பகிர்கிறேன். பாரதியின் பாடல்களுக்கு விமரிசனம் தேவையில்லை வரிகளில் தொலைந்து போகாமலிருக்கவும் முடிவதில்லை.
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா....

குற்றம்கடிதல் படத்திற்கான பாடல் யாழினி மற்றும் ராஜேஷ் ரகுநதனின் டூயட் குரல் மனதை மயங்கச் செய்கிறது. சமீபத்திய படங்களில் அடியேனை மிகவும் கவர்ந்த பாடல் இது. சங்கர்ராஜனின் இசை கவணிக்க வைக்கிறது பாடல் வரிகளுடன் YouTube -ல் கிடைக்கிறது அழகு.

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்
உத்திரங்  கொட்டுதடி;
என் கண்ணில்  பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர்  நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!

பாரதிக்கு யார் இந்த கண்ணம்மா? அவனது மொத்த அன்பும் கவிதைவரிகளில். என் உயிர் நின்னதன்றோ என்ற ஒரே வரியில் தன்னை கண்ணம்மாவிடம் ஒப்படைத்துவிடுகிறான் அந்த ஏழைக் கவிஞன். பாயும் ஒளி நீ எனக்கு.......

பாம்பே ஜெயஸ்ரீயின் மயக்கும் குரலில் பாரதி கவிதைகளின் இசை ஆல்பம். கண்ணம்மா பாட்டு YouTube -ல் கிடைக்கிறது. பாயுமொளி நீ யெனக்கு மெல்லிய சோகமாக ஒலிக்கிறது. மயக்கும் வரிகளும் ஜெயஸ்ரீயின் குரலும் மனதை சொல்லமுடியாத சோகங்களுகிடையே அழைத்துச் செல்கிறது. பாடல் முடிந்ததும் அந்நிலையிலிருந்து வெளிவர மறுக்கிறது மனம். 

பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா.
காக்கை சிறகினிலே நந்தலாலா....

ஏழாவதுமனிதன் படத்தில் இளையராஜாவின் இசையில்  KJ.யேசுதாஸ் பாடிய பாடல். அட! படத்தின் ஹீரோ நம்ம ரகுவரன் சார். இசை மேதைகளைப்பற்றி சொல்லத் தேவையில்லை அப்படியே காற்றில் பறக்க வைக்கும் பாடல்.

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா..