☰ உள்ளே....

ஆல்பம்.......


ஆல்பம்

அவ்வபோது சினிமா பாடல்களைத்தாண்டி நல்ல இசைக்காக நெட்டில் அலைவதுண்டு. சமீபத்தில் ரசித்த பாடல்களை பகிர்ந்து கொள்கிறேன். சில மொழிகள் தெரியாத பாடல்களைக்கூட சேமித்து வைத்திருக்கிறேன். நல்ல இசையிருந்தால் போதும் மொழி ஒன்றும் தேவையில்லை. பெரிய வித்துவான்னு நினைக்காதிங்க! இசையைப் பொருத்தவரை நான் கழுதை, மோர்ந்து பார்பதோடுசரி.கற்பூர வாசனையறியேன்...AR. ரஹ்மானின் COKE Studio.

குலாம் முஸ்தபா காணின் கிளாசிகல் குரல். இந்தியாவின் தலைசிறந்த பாடகர். இவரது மகன் மற்றும் பேரன்களுடன் ரஹ்மானிற்காக பாடிய பாடல் . ரஹ்மானின் பியானோவுடன் நம்ம சிவமணி டிரம்ஸ் கூடவே சித்தார் அட!  ஜூகல்பந்தியாக தட தடக்கிறது. Coke studio ஆல்பத்தில் மேலும் சில மொழிகளில் பாடல்கள் இருக்கிறது,தமிழிலும் ஒருபாடல் ரஹ்மானுடன் அவரது அக்காவும் இனைந்துபாடிய நான் ஏன் பிறந்தேன் - அழகிய மெலோடியாக ஒலிக்கிறது. Angela July -யின் a thousand years...

Anjela July கொரியாவின் சிறந்த Harb இசைமேதை. Harb -என்பது நம்மஊரு யாழ். ஆரம்பத்தில் Reality show -ளில் பங்குபெற்ற இவர் இப்போது மிகப்பிரபலம். அதுபோல் Christina perrri மிகச்சிறந்த பாடகி. அவரின் A thousand years மிகப்பிரபலம். இருவரும் இனைந்து வெளியிட்ட பாடல் தான் a thousand years with vocal Anjela july.மெல்லிய சாரலாக ஒலிக்கிறது. 

A Lullaby of Hope....சித்ரா...

சின்னக்குயில் சித்ராவின் தாலாட்டடு. மலையாளஆல்பம் பாடல். You tube -ல் தேடினால் எல்லா மொழிகளிலும் இந்தப்பாடல் கிடைக்கிறது. தமிழ்.தெலுங்கு, ஹிந்தியென சித்ராவே பாடியிருக்காங்க. வரிகளும், இசையும் நம்மை குழந்தையென மாற்றிவிடுகிறது. பாடல் கேட்கும்போது கண் சிறிதுநேரம் ஓய்வெடுக்கச்செல்கிறது.