இடுகைகள்

July, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
☰ உள்ளே....

ஆடி..மாசம்..

ஆடித்தான் போகிறது
மனசு..
நீ!
ஆடிக்கு போனதால்...

ஆறாத சில காயங்கள்.

படம்

சிறு தவறுகள்,

நீ !
செல்லமாகத்
தட்டுவதற்காகவே
செய்யப்படுகிறது,சிறு சிறு
தவறுகள்..(பொண்டாட்டிகிட்ட அடிவாங்கியதை கவிதையா சொல்லுரான்பாருங்க)..

a real man long live...People's heart.....

படம்
.................with tears.....

சாலு மரத திம்மக்கா..

படம்
‘சாலு மரத திம்மக்கா’ என்றால், கர்நாடகாவுக்கே தெரியும்!
எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில்… இன்று சாலை நெடுக இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் சலசலக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூதூர் வரை நீளும் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை முழுக்க வரிசையாக (சாலுத) நின்று, ஊருக்கே நிழலாற்றும் அம்மரங்களை நட்டு வளர்த்த திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது… 101!

மௌனம்.

சிறந்த பேச்சு,
ஒரு நேர்மையான பொய்.. மோசமான மௌனம்,
ஒரு நிர்வாண உண்மை..

ஞாயிறு..

Tuition class
Dance class
Karate class
Drawing class
Sports
Swimming - என
பறந்து விடுகிறாள்
இறக்கை முளைக்காத
பட்டாம்பூச்சி. வாரநாட்களில் கிடைக்கும் முத்தம் கூட கிடைப்பதில்லை
ஞாயிற்றுக் கிழமையில்...

காபி குடிக்கும் தருணங்கள்..

தீண்டல்
முத்தம்
வருடல்
கோபம்
சலிப்பு
என
ஒன்றைக் கலந்து
தினமும் காபி கிடைக்கிறது.. காபியை விட
காபி குடிக்கும் தருணங்கள்
சுவையானவை.

Bachelor's breakfast

ஒரு வடை,
ஒரு டீ,
ஒரு சிகரெட்.= Bachelor's breakfast

save water .... save life....

படம்

சில குப்பைகள்..

படம்

பாரதி கண்ணம்மா (பாடல்கள்) .

படம்
சினிமா பாடல்களோ, கர்நாடக சங்கீதமோ, அலுவலக நேரத்தில் பாரதியின் பாடல்களை ஒலிக்கவிட்டு வேலைகளை செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். சில காலைப்பொழுதுகள் அவனது கவிதையில் புலரும். அப்படி
சமீபத்தில் கேட்கும் மூன்று பாடல்களை இங்கு பகிர்கிறேன். பாரதியின் பாடல்களுக்கு விமரிசனம் தேவையில்லை வரிகளில் தொலைந்து போகாமலிருக்கவும் முடிவதில்லை.


Daisy (சினிமா).

படம்
Hye Young ஓவியம் வரைபவள், Jeong Woo ஒரு இன்டர்போல் ஆபிசர், Park Yi தொழில்முறை கொலைகாரன். இந்த மூவருக்கும் இடையேயான முக்கோண காதல் கதைதான் Daisy.

Hye Young சுற்றுலா வருபவர்களுக்கு ஸ்கெட்ச் ஓவியம் வரைந்து கொடுக்கும் வேலை செய்கிறாள். ஒருநாள் அழகான இயற்கை ஓவியம் வரைய சிறிய ஓடையைத் தாண்டி மலைப்பகுதிக்கு போக நினைக்கும்போது கால் தடுமாறி அந்த ஓடையில் விழுகிறாள் தனது ஓவிய பொருட்கள் நிறைந்த பையையும் தவறவிடுகிறாள். மறுமுறை அவள் அங்கு மீண்டும் வரும்போது அந்த வழியில் அழகிய மரப்பாலம் ஒன்று கட்டப் பட்டிருக்கிறது கூடவே அவள் தவறவிட்ட பையும் அதில் மாட்டப்பட்டிருக்கிறது. தனக்காக இந்த அழகிய பாலம் கட்டியவருக்கு தான் வரைந்த Daisy பூக்கள் நிறைந்த ஓவியத்தை பாலத்தில் வைத்துவிட்டு வருகிறாள். இந்த நிகழ்ச்சிக்குப்பின் Hye Young வசிக்கும் வீட்டிற்கு முன் மாலை வேலையில் Daisy பூந்தொட்டி வைக்கப்படுகிறது. தினமும் சரியாக 4.00 மணிக்கு மேல் பூந்தொட்டி வைக்கும் நபரை ஒரு நாளாவது பார்த்து விடவேண்டும் என நினைக்கிறாள். முகம் தெரியாத அந்த நபரின் அன்பில் நனைகிறாள்.  

உடலோவியம்...

படம்

தூரிகை....

படம்

நீண்ட நாட்களுக்குப்பின் 3.5 Mega fixel-ல்.

படம்

பாயும் ஒளி நீயெனக்கு (Mobile Photography).

படம்

தேவதை (Mobile Photography).

படம்

Poorna (Mobile Photography).

படம்

குடைக்குள் மழை (Mobile Photography)..

படம்

நினைவுகள்..

பேருந்து படிக்கட்டுகளில்
இன்னமும் தொங்கிக் கொண்டிருக்கிறது,
கல்லூரிக்கால நினைவுகள்...

விதை..

நல்ல விதைகளை
நாம்
முளைக்கவிடுவதேயில்லை..

உண்மை..

நடந்து முடிந்ததைப் பற்றி பேசிக்கொண்டிருந்தால்
வருத்தம் மட்டுமே மிஞ்சும்... ஆராய்ந்தால்
உண்மை மிஞ்சும்...

அக்கா.

தம்பியுடன்
விளையாடும் அக்கா!மற்றொருஅம்மா,
நல்ல தோழி,
முதல் ஆசிரியை,
மற்றும்
மருத்துவர் ஆகிவிடுகிறாள்.காலம் விளையாட்டை
உண்மையாக்கி விடுகிறது.அக்காக்கள் பொற்ற தம்பிகள்
கொடுத்துவைத்தவர்கள்.

தலைமுறைகள் தாண்டி

இன்னமும்
பாட்டி
வடை சுடுகிறாள்,
காகம்
அதை திருடுகிறது,
நரி
தந்திரம் செய்கிறது.-இரண்டு,மூண்று
தலைமுறைகள் தாண்டி..

நட்பு..

பேச்சுலர்ஸ் பார்ட்டி
வைக்காத திருமணஅரங்கில் நண்பர்கள் இருக்கை பெரும்பாலும் காலியாகத்தான் இருக்கின்றன.

பிரார்த்தனை.

பொங்கல்,
சுண்டல்,
எப்போது கிடைக்கும்?-கவலையோடு நகர்கிறது
என் பிரார்த்தணை.

ரிங்டோன்..

பசி,
வலி,
இரண்டின் ரிங்டோன்அம்மா!..

தூக்கம்.

தூங்கிவிட்டால் இரவு நம்மைச் சுமக்கிறது.
தூக்கம் வராவிட்டால் இரவை நாம் சுமக்க வேண்டியிருக்கிறது...

தரமான பொருட்கள்..

Status என்னும் சட்டையைக்
கழட்டிவைத்துவிட்டு Shopping கிளம்பினால், தரமான பொருட்களுடன் வீடுதிரும்பலாம். (நூடுல்ஸ் போன்ற 64 பொருட்களுக்கு தடை வரும் -நாளிதழ் செய்தி..)

சில பல

சில பல
வேலைகளும்.
சில பல
நட்பும்.
சில பல
உறவுகளும்.சில பல
சரக்கினால் மட்டுமே!
சாத்தியமாகின்றன. -நன்றி டாஸ்மாக்.