தாத்தா -பாட்டி...

பத்து வயது இருக்கும் அவனுக்கு தன் கூன் விழுந்த பாட்டியை அழைத்துக்கொண்டு பேருந்தில் ஏறுகிறான் அவளுக்கான இடம் தேடி அலைந்து கடைசியில் அமர்கின்றனர். பயணம் முழுவதும் பாட்டி தன் அனுபவங்களை கூறிக்கொண்டே வருகிறாள் அவனும் கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவர்களுக்கான நிருத்தம் வருகிறது அவளை கைப்பிடித்து அழைத்துச்செல்கிறான்..
தன் பேரனை கூட்டிக்கொண்டு தினமும் மாலை பார்க் வந்துவிடுவார் அவர். இருவரும் வரும்போது பேசிக்கொண்டே வருவார்கள்.பேரன் சிறிதுநேரம் விளையாடுவான் அவனருகிலே இருந்து ரசிப்பார். மீண்டும் இருவரும் பேசிக்கொண்டே விட்டிற்கு செல்வார்கள்.
தாத்தா பாட்டிகளின் அன்பு கிடைக்கப்பெற்ற குழந்தைகள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நண்பன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தான் அம்மா இல்லாதது ரொம்ப கஷ்டம்டா குழந்தைக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போயிடுது. நிஜம்தான் வீட்டில் வயசானவங்க இருந்தால் மருத்துவம் குறைவுதான். இராமகிருஷ்ணன் சாருக்கு இரண்டு பேரன்கள்.மருமகளின் கண்டீசன் என்ன தெரியுமா?  தாத்தாகூட பேசக்கூடாது தினம் ஸ்கூல் போகனும் டியூசன்,கொஞ்சம் டீவி தூங்கிவிடவோண்டும் அவ்வளவுதான். மருந்துக்கும் தாத்தாவிடம் சேரக்கூடாது என்பதுதான் மீறினால் அடிஉதைதான். இதற்காகவே அவர் வீட்டில் தங்கமாட்டார் ATM காவலாளியாக ரயில்வே ஸ்டேசனில் வேலைசெய்கிறார். தினம் சாக்லட் வாங்கி வைத்திருப்பார் தான் பார்க்கும் குழந்தைகளுக்கு கொடுப்பார். School போகும் குழந்தைகள் என்றால் புத்தகப்பையை சுமப்பார். இப்பகூட எதாவது குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருப்பார். மூண்று வருடங்களாக அவரைத்தெரியும் ஒருமுறை கலக்கத்துடன் ரயில்வே ஸ்டேசனில் உட்கார்ந்து இருந்தேன் என்னைஅறிந்து தேற்றியவர் அவர். அதன் பின் நாங்கள் நல்ல நண்பர்களானோம். மனசுபாரமா இருந்தா அவரை பார்க்க போவேன்.சார் நான் கிளம்புகிறேன் இனி இங்க வருவேனா? தெரியாது என்று சொன்னபோது கட்டிக்கொண்டார். நீ நல்லா இருப்பனு வாழ்த்தினார் அந்த ரிட்டயர்டான ஆங்கில வாத்தியார்.
தாத்தா சிறுவயதில் உன்மேல் எவவளவு பிரியமா இருந்தா தெரியுமா? அம்மா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் எனக்கு நினைவில்லை, நினைவுதெரிந்தபோது அவர் எங்களோடு இல்லை. அவர் இறக்கும் தருவாயில் பார்க்க போயிருந்தேன் என் கைகளை பற்றிக்கொண்டார். கண்களில் நீர்கசிந்தது அதற்கு அர்த்தம் புரியவில்லை.
தாத்தா பாட்டியின் அன்பும் அரவணைப்பும் இல்லாமலே வளர்ந்துவிட்டேன்.
யாராவது குழந்தைகளை தாத்தா -பாட்டியோடு பார்க்கும் போது பொறாமையாகத்தான் இருக்கிறது. தாத்தாவின் கதைகளும்,பாட்டியின் மடியும் இந்த ஜென்மத்தில் எனக்கு கிடைக்கப்போவதில்லை.
கதைகளும் அனுபவங்களும் கேட்டுவளரும் குழந்தைகள் வாழ்க்கையில் தோற்பதில்லை. தயவுசெய்து குழந்தைகளை தாத்தா -பாட்டியிடம் விடுங்கள். கோடைவிடுமுறை வந்து விட்டது. சொந்த ஊருக்கு அனுப்புங்க. இல்லையென்றால் அந்த குழந்தையும் என்னைப்போல ஒருநாள் இப்படி கிறுக்கும்..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5 லட்சம் ஆணுறைகள்..

பிரமிடுகள் - சுவார(க)சிய தகவல்.

இணை பிரபஞ்சம்...

பொனொபோ - ஒருலட்சம்விட்ட தாத்தா...

எழுச்சிமி......கு கண்டுபிடிப்பு...