46 வயதினிலே..

வயிறும்,
வழுக்கையும்தான் அழகு.
-46 வயதினிலே.

அட்வைஸ்..
சாம்பல்.

எரிந்து முடித்த
கொசுவர்த்தி
ஒருசில சிகரெட்
சாம்பலை
கூட்டுவதிலும்
பெருக்குவதிலும்
தொடங்குகிறது
பேச்சுலர்ஸ்
காலைப்பொழுது..

தலைக்கவசம்..

மனைவியின் பிறந்தநாளை எப்படி மறந்தேன்? என தெரியவில்லை.
அலுவலகம் முடிந்து வெருங்கையோடு, தாமதமாக வீடுதிரும்பினேன்.

அவ்ளோதான்.

ஏவுகணை தாக்குதல்கள்..
...

-நல்லவேளை ஹெல்மெட் போட்டிருந்ததால் தலைதப்பியது..

கவணத்திற்கு - ஏனோ தாமதமாக வீட்டிற்கு சென்றால் தயவுசெய்து உடனே ஹெல்மெட்டை கலட்டாதீர்கள்!

"தலைக்கவசம் நம் உயிர்கவசம் "

நன்றி....

ஒரு சின்ன விசயம் இவ்ளோ பெரிய மாற்றத்தை எற்படுத்துமென நினைக்கவில்லை. 9.5.2015 blogs -ல +2 பார்ட்டின்னு எழுதியிருந்தேன் அதை  படிச்சிட்டு நிறையபேர் போன் பண்ணுனாங்க. அந்த பையனோட மேற்படிப்புக்கு எங்களால முடிஞ்சத செய்யிறோம்னு சொன்னாங்க.

+2 ரிசல்ட்..... பார்ட்டி.....

சார் உங்க மொபைல்ல நெட் இருக்கா என் பொண்ணுக்கு +2 ரிசல்ட் பார்கனும்னு கேட்டார். ஒரு இரண்டு நிமிடத்திற்கு பின் மதிப்பெண்ணுடன் ரிசல்ட் வந்துவிட்டது. ரொம்ப நன்றி சார் சொல்லிவிட்டு பேருந்தில் இறங்கிப்போனார். எவ்ளோ வேகமா இருக்கு. நான் படிக்கும் போது ரிசல்ட் லிஸ்ட் எடுத்து நோட்டீஸ் போர்டில் ஒட்டுவார்கள். அதை  பார்க்க,காலையில் எழுந்து (ஒழுங்கா தூங்காம) குளிச்சிட்டு சாமி கும்பிட்டு,நெத்தி நிரைய விபூதி வச்சி,பிள்ளையாருக்கு தேங்கா உடைச்சி சைக்கிள் எடுத்துட்டு போவோம்.போருக்கு பயந்த புலிகேசி போல "காய்ச்சல் அடிக்கிறதுதானே"? தொட்டு பார்த்துக்கொள்வோம்.பாஸ்னு தெரிஞ்சா அவ்ளோதான் மிட்டாய் வாங்கிட்டு வர வழியில கொடுத்துட்டே வருவோம். ரிசல்ட் மறுநாள் பேப்பர்ல வரும் அத கிழிச்சி பத்தரமா வச்சிக்குவோம்.மார்க் லிஸ்ட் வர ரெண்டு மூணு நாள் ஆகும்.அது கைக்கு கிடைக்க ஒருமாசம் ஆகும் (நீ எவ்ளோடா?எடுத்தன்னு கேக்காதிங்க நிறைய மார்க் எடுத்தா! நாங்க ஏன்? இதுமாதிரி blogs-ல கிறுக்குறோம்).இப்போ ரொம்ப மாறிடுச்சி. one click எல்லாம் ok .

பக்தி .....
முட்டை..

ஆம்லெட்டோ?
ஆப்பாயிலோ?

முட்டையுடன் முடியாத
இரவுஉணவை
பேச்சுலர்ஸ் ரசிப்பதில்லை...

ஹோட்டல் தத்துவம்..

வெள்ளையாக இருந்தால்
உப்புமா..
மஞ்சளாக இருந்தால்
கிச்சடி..

-ஹோட்டல் தத்துவம்.

தனிமை..

எனது எல்லா தவறுகளையும் தனிமையின் தலையில் கட்டிவிடுகிறேன்.
தனிமையோ!
என்தலையைக் கட்டிக்கொண்டிருக்கிறது...

60 Jobs....60 Seconds....வெகு வேகமாக நகரும் காட்சி அமைப்பு ,நேர்த்தியான ஒளிப்பதிவு,சிறந்த படத்தொகுப்பு,மெல்லிய இசை என  60 நொடிகளில் 60 உழைப்பாளர்கள்  வீடியோ YouTube-ல் பார்த்தேன். உழைப்பாளர் தினம் கொண்டாடும் வேளையில் உங்களுடன் பகிர்வதை பெருமையாக கருதுகிறேன். slingshot விளம்பர நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட்டுயிருக்கிறது.


நடிப்பு...

என் கண்களும்,உதடுகளும் சில அன்பின் பிரிவுகளை பிறருக்கு அறிவிப்பதேயில்லை..
ஏனென்றால்!
எனக்கு கொஞ்சம் நடிக்க வரும்...