சொந்தங்களைத் தேடி.




Blu-Jewel தனது மூண்று குழந்தைகளுடன் நகரத்தில் வசித்து வருகிறது. Blue macaws என சொல்லக்கூடிய அறிய வகை நீலக்கிளி இனத்தை சார்ந்த இவை Linda Gunderson என்பவரின் வீட்டில் மனிதர்களைப்போல் வாழ்ந்து வருகிறது.ஒருநாள் Jewel tv-ல் நீலக்கிளிகள் Amazon காட்டில் இருப்பதை பார்த்துவிடுகிறது. தனது குடும்பமும் காட்டில் சுதந்திரமாக இருக்க வேண்டுமென நினைக்கிறது. தனது ஆசையை கணவனிடம் சொல்கிறது. நீண்ட வாக்குவாதத்திற்குப் பின் அனைவரும் கிளம்ப முடிவு செய்கின்றனர். Rio முதல் பாகத்தில் இருந்த Nigel இப்பொது தனது சிறகுகளை இழந்து பறக்கமுடியாத நிலையில் ஒரு ஜோசியம் சொல்பவனிடம் கூண்டில் அடைபட்டுக் கிடக்கிறது. Blu-வைப்பழிவாங்க Charlie என்னும் எறும்பு திண்ணி மற்றும் Gabi எனும் விஷத்தவளையுடன் தப்பித்து அதுவும் Amazon காட்டிற்கு செல்கிறது.

Amazon காட்டை அடைந்த Jewel அங்கு தன் குடும்பத்தை கண்டுபிடிக்கிறது,
Jewel -ன் அப்பா Eduerdo அந்த கூட்டத்திற்கே தலைவனாக இருக்கிறார். கூடவே தனது தங்கை Mimi மற்றும் பால்ய சிநேகிதன் Roberto -வை சந்திக்கிறது. நகரத்தில் வலது பழகிய Blu அங்கு தங்க சிரமப்படுகிறது ஆனால் Jewel மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கின்றனர்.Eduerdo, Blu-வை தன்  கூட்டத்தில் சேர்ப்பதை தவிர்க்கிறது.Blu அதற்காக போராடுகிறது.

Bigboss என்ற ஒரு கொள்ளைக்கூட்டம் Blue macaws வசிக்கும் காட்டில் உள்ள மரங்களைத் திருட வருகிறது blu அதை பார்த்து விடுகிறது. இதற்கிடையில் Linda Gunderson-ம் பறவைகளை ஆராச்சி செய்ய அங்கு வருகிறாள். பழிவாங்க நினைக்கும் Nigel-ம் வந்து சேர்க்கிறது.  Blu- இவர்களை எப்படி சமாளித்தது? கூட்டத்தில் சேர்ந்ததா? என்பதுதான் மீதிக்கதை.


Ice Age இயக்கியவர்களின் பிரமாண்ட படைப்பு 3D Animation திரைப்படம். படம் முழுவதும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைகளும், கண்ணை பறிக்கும் காட்சி அமைப்பும்  நம்மை கவருகிறது.அதிலும் Nigel மற்றும் Gabi -இன் காதல் காட்சிகள் சிரிக்காதவர்களையும் சிரிக்க வைக்கும். படத்தின் இசை மனதை மயக்குகிறது. Welcome Back  மற்றும் What is  Love பாடல் அருமை. இந்த கோடையில் நிச்சயமாக குழந்தைகளுக்கு படத்தை காண்பியுங்கள். நாமும் பார்க்க குழந்தையாகிப் போவோம்.

Directed By  - Carlos Scldanha
Screenplay    - Pone Rymer,
                        Carles Kokin
                        Jenny Bicks
                        Yoni Bennot
Music            -  Jay Poewll