காபி.

முதல் வாரம் -படுக்கைக்கே வருகிறது.
இரண்டாவது வாரம் -டேபிலில் இருக்கிறது.
மூண்றாவது வாரம்-
கெஞ்சினால் கிடைக்கும்.
நான்காவது வாரம்-
நானே போட்டுக்கொள்கிறேன்.

தயவுசெய்து திருமணத்திற்கு முன் காபி குடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிடுங்கள்...

போ..

விலகியா ஓடுகிறாய்?
போ..

மனம் முன்னமே!
அணைத்துவிட்டது..

3 பெக்..

முதல் பெக் - ஆசுவாசம்,
இரண்டாவது பெக் - நினைவுகள்,
மூன்றாவது பெக் - தத்துவம்
வந்தால்!

- மச்சி நீ தேறிட்ட.. டா.

புடவை ...தாவணி...திரிஷா....

மலர்கள் கேட்டேன் வனமே.. தந்தனை................
சித்ரா - வைரமுத்து - A .R .ரஹ்மான் கூட்டணி  ஓ.கே கண்மணி பாடல்...............
காதலாம் கடவுள்-முன் -பத்மலதா-கமல்ஹாசன்-ஜிப்ரான் கூட்டணி
உத்தமவில்லன் பாடல்.............
அட! இரண்டுமே மனதை மயக்குகிறது.

முதலாவது பெரிய கூட்டணி பல ஹிட் பாடல்களை தந்தது, வைரமுத்துவின் வரிகள் மாயாஜாலம்,சித்ராவின் குரலில் இன்னமும் இளமை ததும்புகிறது பாடலின் முடிவில் A .R .ரஹ்மானின் குரல் கோரஸாக ஒலிப்பது அருமை மீண்டும் மீண்டும்  கேட்க தோன்றுகிறது. இரண்டாவது கமலின் வார்த்தை விளையாட்டு பத்மலதாவின் மயக்கும் குரல், ஜிப்ரானின் உயிர் இசை. பாடலின் வரிகள் உன்னதம் (கமல் இல்லை-யா?) தடதடக்கும் பாடலின் நடுவே கமலின் ரீங்கார சப்தம்(மனுஷன் ஸ்க்ரீன்ல என்ன பன்னிருக்காரோ?)ஆவலை தூண்டுகிறது.எனக்கு என்னமோ? இரண்டாவது பாடல் புதுமையாகவும் அழகாகவும் தெரிகிறது.


எளிமை!

இவங்கெல்லாம் எப்படி நிம்மதியா இங்க தூங்குறாங்க?
நடைபாதை, பேருந்து நிலையம், ரயில் நிலையம் ,பணிபுரியும் இடத்தில் அப்படியே! இப்படி தூங்குபவர்களைக்கண்டால் பொறாமையாகத்தான் இருக்கிறது? நானும் விஜயகுமார் சாரும் பேசிக்கொண்டு நடந்தோம்.

காமத்தீ...தீண்டல்.....

தீண்டாதே!

கட்டளையிட்டபடி
படுக்கச்செல்கிறாய்.

காலையில்
எல்லாம் களைந்திருக்கிறது...

நமது படுக்கை..

உன்னையும் என்னையும்,
குழுந்தையெனச்
சுமக்கிறது
நமது படுக்கை..

கவலை..பசித்திருக்கிறேன்..
................பறக்கும் 

தவிப்பு

விழித்திருக்கும்வரை சமாளித்துவிடுகிறேன்.
கண்முடும்போதுதான்
..... ..
!!!!
??
...
அருகிலே இரு...