மெலீனா.




Sicily 1940 Italy இரண்டாம் உலகப்போரில் கலதுகொள்ளும் தருணம், 12 வயது சிறுவன் ரெண்டோ (Renato) இன்று மூன்று புதிய அனுபவங்களை பெருகிறான் ஒன்று இத்தாலி  போரில் கலந்துகொண்டது,தனக்கு கிடைத்த புதிய சைக்கிள் மற்றொண்று மெலினாவை (Melena) பார்த்தது.
மெலினாவின் கணவன், நினோ ச்கோர்டியா (Nino Scordia) ஆப்ரிக்காவிற்கு போரிட அனுப்பப்பட்டுளான். அவள், காது கேளாத தன் தந்தையுடன் வசித்து வருகிறாள். தனது தனிமையை சமாளிக்க முயல்கிறாள். தனிமையில் வசிக்கும் ஒரு அழகான பெண்படும் துயரத்தை அவளும் அனுபவிக்கிறாள் நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் அவளை அடையத் துடிக்கிறார்கள்  12 வயது சிறுவன் ரெண்டோ உட்பட. மெலினா தன் கணவன் மீது என்றும் அன்புடன் இருக்கிறாள்.  சிறுவன்  ஒருமுறை ரெண்டோ மெலினா தனிமையில் இருக்கும்போது அவளது வீட்டிற்கு சென்று ஜன்னல் வழியே பார்க்கிறான். அவளது அழகை ரசிக்கிறான், நினைத்து ஏங்குகிறான் சுயஇன்பம் செய்கிறான் .


போரில் தன கணவன் இறந்த செய்தி வருகிறது மெலினா வருந்துகிறாள். ரெண்டோ அவளது சோகத்தைப் பார்க்கிறான். நகரத்தில் வசிக்கும் பெண்கள் அவளைப்பத்தி புரளி பேசுகின்றனர் காரணம் அவளது அழகு. ஒருநாள் அவளது தந்தையின் கைக்கு ஒரு அவதூறு கடிதம் கிடைக்கிறது. பல் மருத்துவர் ஒருவரின் மனைவி தன் கணவரை மெலினா பறித்துக் கொண்டதாக கோர்ட்டில் புகார் செய்கிறாள். அவளது அழகு எல்லோரையும் அச்சுருதளுக்கு உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறாள். ஒரு வழியாக வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறாள். மெலினாவின் லாயர் அவளது வீட்டிற்கு வருகிறார் தனது வக்கீல் ஃ பீசாக அவருடன் நடனமாட அழைக்கிறார், அவள் மறுக்க வலுக்கட்டயமாக அவளது கற்பை சூறையாடுகிறார். இவற்றையெல்லாம் மறைந்திருந்து ரெண்டோ பார்க்கிறான் அவளுக்காக கண்ணிர் விடுகிறான்.

போரில் சிலி தாக்கப்படுகிறது ஒரு குண்டுவெடிப்பில் தனது  தந்தையையும் இழக்கிறாள் மெலினா. வறுமையும் பசியும் அவளைக் கொல்லுகிறது கடைசியில் விதிவழி ஒரு விலைமாதுவாகிறாள். போரில் ஜெர்மனி சிலியை கைப்பற்றுகிறது. ஜெர்மனி அதிகாரிகள் சிலியில் தங்குகின்றனர் அவர்களுக்கு மெலினா தன்னை விற்கிறாள்.அவளது நடை, உடை மாறுகிறது அனைத்தையும் ரெண்டோ கவணிக்கத் தவறவில்லை, அவளது நினைவாக  அன்று இரவும் சுயஇன்பம் செய்கிறான். அவனது போக்கை கண்ட அவனது தந்தை அவனை ஒரு விபச்சார விடுதிக்கு அழைத்துச் செல்கிறார். ரெண்டோ விலைமாது ஒருவளிடம் அனுப்பப்படுகிறான்.   மெலினாவை நினத்துக்கொண்டு அவளுடன் உறவுகொள்கிறான்.

போர் நிறைவடைகிறது அமெரிக்கா சிலியை கைப்பற்றுகிறது.  ஜெர்மானியர்கள் விரட்டி அடிக்கப்படுகின்றனர். அவர்களது பிடியில் இருக்கும்  மெலினா  நடுத்தெருவிற்கு கொண்டு வரப்படுகிறாள். அங்குள்ள நகரத்து பெண்கள் அவளது தலை முடியை வெட்டுகின்றனர் அவளது ஆடையை கிழித்து, அடித்து அரை நிர்வாணமாக நிறுத்துகின்றனர். தனது தனிமையும் அழகும் தன்னை படுத்தும் நிலையை நினைத்து அங்கிருந்து சென்றுவிடுகின்றாள். இதை பார்க்கும் ரெண்டோ ஒருவன் மட்டுமே அவளுக்காக கண்ணீர் வடிக்கின்றான் .

போர் சூழல் சற்று தணிந்தபின் சில நாட்களுக்குப்பின் மெலினாவின் கணவன் நினோ ச்கோர்டியா திரும்ப வருகிறான். தனது வசிப்பிடமும் மனைவியையும்  காணாமல் தவிக்கிறான். அன்றிரவு அவனுக்கு ஒரு கடிதம் கிடைக்கிறது அதில் மெலினாவை பற்றி எழுதியிருக்கிறது, 

அவள் ஒருத்தி உன் நினைவாக இருந்தாள் இந்த உலகம் அவளை அவதூறு பேசியது அவளுக்கு என்றும் உறுதுணையாக இரு...  .. 

சில வருடங்களுக்குப்பின் சிலியின் நகரத்து தெருவில் நினோ ச்கோர்டியா தனது  மனைவி மெலினா உடன் கம்பீரமாக நடந்துவருகிறான் எல்லோரும் அவர்களை பார்க்கின்றனர் குறிப்பாக அவளை அவமாணப்படுதிய பெண்கள்.  எல்லோரையும் கிறங்கடித்த அவளது கண்கள் இப்பொது கருத்து பொழிவிழந்து  காணப்படுகிறது. எல்லோரும் அவளிடம் "Signora Scordia என்கிறார்கள் அதற்கு goodluck என்று அர்த்தம்.

கடற்கரை ஓரம்  ரெண்டோ மெலினாவை பார்க்கிறான் அவள் தன் பையிலிருந்து ஆரஞ்சு பழங்களைத் தவறவிடுகிறாள் அவற்றை சேகரித்துக்கொண்டு அவளிடம் முதல்முதலாக நேருக்குநேர் பேசுகிறான் "Buona fortuna, Signora Malena" (good luck, Mrs. Melena). பிறகு தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு செல்கிறான் சிறிது தூரம் சென்று  திரும்பிப் பார்க்கிறான் மெலினா நடந்து போய்க்கொண்டு இருக்கிறாள்... முன்பு அவள் நடக்கும் அழகை மறைத்திருந்து பார்த்து ரசிக்கும் காமம் தற்போது அவனிடம் இல்லை.  அவள் நடந்து போய்க்கொண்டு இருக்கிறாள் ரெண்டோ திரையில்பேசுவதுபோல் எழுத்துகள் தோன்றுகிறது....

 "Time has passed and I have loved many women. And as they've held me close and asked if I will remember them, I believed in my heart that I would. But the only one I've never forgotten is the one who never asked ... Malena"

எனது சிறந்த படங்களின் தொகுப்பில் இடம்பெறும் படைப்பு இது. படம் சிறுவன் ரெண்டோவின் பார்வையில் தொடங்குகிறது. படம் பார்ப்பவர்களும்  அவனைப்போல் மெலினாவை அடையத்துடிக்கும் அளவிற்கு காட்சி அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது . 
முதலில் XXX படம் போல் போகும் திரைக்கதை முடியும் போது கண்கலங்கடித்து விடுகிறது.Monica Bellucci -ன் துணிச்சலான நடிப்பு படத்திற்கு பலம். சில நிர்வாண காட்சியும் சிலியை விட்டு அடித்து துரத்தப்படும் காட்சியிலும் ஒரு நடிகை எதற்காக ஆடையை அவிழ்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார் Monica Bellucci. பல பாராட்டுகளை அள்ளிய படம். .

பின்குறிப்பு இந்த திரைப்படத்தை குடும்பத்துடன் பார்க்காதீர்கள்... நிர்வாண காட்சிகள் இடம்பெரும் படத்தின் அழுத்தமே அதுதான்... காமத்தை பற்றிய தீர்க்க தரிசனமாகக் கருதலாம்.

Directed by Giuseppe Tornatore
Produced by Harvey Weinstein
Screen play Giuseppe Tornatore
Story Luciano Vincenzoni
Music Ennio Morricone
Cinematography Lajos Koltai
Language Italian