தன்னம்பிக்கை

இரவு 10.00 மணி சேலம்- கரூர் பேருந்தில் எனது இருக்கை அருகே சிறுவன் ஒருவன் வெள்ளை பூத்த கால்களுடன் கொஞ்சம் தயங்கித் தயங்கி அமர்ந்தான். நல்லா உட்காருடா என அவனை அதட்டினேன். இல்லன உடம்பு பூரா சிமெண்ட் உங்க டிரஸ்ல ஒட்டிக்கும் அதான் - என்றான். பரவா இல்லடா ஒழுங்க உட்காருடா என மீண்டும் அதட்டினேன். ராட்டினத்தில் ஏறினாலும் பக்கத்துக்கு இருக்கையின் சுவாரசிய விரும்பி நான். அதனால் அவனிடம் பேச்சு கொடுக்க கேள்விகளை அடுக்கினேன்  

என்னடா பண்ணுற ?
கட்டிட வேலைக்கு போய்ட்டுயிருக்கேன்.
ஏன்டா படிக்க போகல?
படிச்சிட்டுத்தான் இருந்தேன் அப்பா இல்ல அதான் வேலைக்கு போறேன். சரிடா இவ்வளவு நேரமாச்சி எப்ப வீட்டுக்குப்  போவ? .
காலைல  6.00 மணிக்கு கிளம்பிடுவேன் சாங்காலம் 5.00 மணிக்கு முடிஞ்சிடும் எக்ஸ்ட்ரா பாத்த காசு அதான் டெய்லி லேட் ஆகுது 11.00 மணிக்கு போய்டுவேன்ன. சரி இதுக்கு மேல என்ன செய்ய போற ? இப்பதான் கொஞ்சம் கொஞ்சம் கத்துகிட்டு வரேன் கொஞ்ச நாள்ல மேஷன் அயிடுவேன் ன- தன்னம்பிக்கையுடன் கூறினான்.
இதுபோல் குறைந்த வயது தொழிலாளர்களை பொதுவாக நான் வேலை செய்யும் இடத்தில் பணிக்கு அமர்த்துவதில்லை என்ற கட்டுப்பாடு வைத்திருந்தேன் லட்சுமியை பார்க்கும் வரை, லட்சுமி 14 வயது கர்ப்பிணி கட்டட வேலை செய்துகொன்றிருந்தாள். அவளது கணவனும் அங்குதான் வேலை செய்தான்.  வழக்கமாக சைட்க்கு செல்லும் நான்  அவளை பார்த்து திட்டி வேலையை விட்டு அனுப்புமாறு கூறினேன். எல்லோர் முன்னிலையிலும் காலில் விழுத்து அழத்தொடங்கினாள், மனதை உருக்க  செய்வதாகவே இருந்தது. எனக்கு பெரிய கொள்கையெல்லாம் கிடையாது .நானும் சிறுவயதில் வேலைக்குச்சென்றதால் அவ்வாரு நடந்துகொண்டேன். அன்று முழுவதும் லட்சுமி நினைவாக இருந்தேன் தூக்கம் பிடிக்கவில்லை, குட்டிமாவிடம் நடந்ததை பகிர்ந்துக்கொண்டேன், நீ எல்லாம் ஒரு மனிதனா? காலில் விழுவது பெரிய பாவமெனத் திட்டி தீர்த்துவிட்டாள். அவளுக்கு எதாவது செய்ய வேண்டுமென தோற்றியது மறுநாள் காலை ஒரு கார்மெண்ட்ஸ்ல் பேசி வேறொரு நிரந்தர வேலை ஏற்படுத்திக்கொடுத்தேன். சமீபத்தில் லட்சுமிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது அதைப்பார்க்க எனக்கு அதிஷ்டம் இல்லை.
சரி அந்த சின்னப்பையன் விசயத்துக்கு வருவோம் சிறிதுநேர பேச்சுக்கு முடிவில் புன்னகையுடன் அவன் இறங்கிச்சென்றுவிட்டான். மனது நிறைய குழப்பங்களுடன் அடுத்து என்ன செய்வது புரியாமல் அலைந்துக்கொண்றிருந்த நேரம்அது அவனது சந்திப்பு எனக்கு புது ஊக்கம் தருவதாகவே இருந்தது.  நமக்கு தன்னம்பிக்கை தரக்கூடியவர்கள் வேறெங்கும் இல்லை நம்மைச்சுற்றி மிகச்சாதாரணமாக இருக்கிறார்கள் .. ஆட்டோ சண்முகம் அண்ணன் ,அஞ்சம்மா பாட்டி ,கீதா அக்கா இப்படி நான் சந்தித்த ஒருசிலரை என்  வாழ்கையின் ரோல்மாடலகக் கருதுகிறேன். அந்த சிறுவனையும் சேர்த்து..
எனக்கான நிருத்தம் இறங்கிச்செல்லும் போது லேசாக உணர்ந்தேன்..........

............... பறக்கும்      

 

My Bucket list

அது என்ன Bucket list ?  a list of things a person wants to achieve or experience, as before reaching a certain age or dying: (a bucket list for a terminally ill patient)  ஒருபடம் கூட வந்திருக்கு. cancer பாதித்த, சாகும் தருணத்தை எதிர்நோக்கிய  இருவரின் கடைசி ஆசைகளின் கதைதான் திரைப்படம்.சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.

காட்டு மனிதன்

ஃபிரெஞ்சு எழுத்தாளர் ழான் ழியோனோ எழுதிய ‘மரங்களை நட்டவன்' (The Man Who Planted Trees, 1953) என்ற கதை உலகப் புகழ்பெற்றது. பிரான்ஸில் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் தனியாய் வாழ்ந்த எல்செயார் புஃபியே என்ற ஆடு மேய்ப்பவரைப் பற்றிய கதை அது.

Malèna
Sicily 1940 Italy இரண்டாம் உலகப்போரில் கலதுகொள்ளும் தருணம், 12 வயது சிறுவன் ரெண்டோ (Renato) இன்று மூன்று புதிய அனுபவங்களை பெருகிறான் ஒன்று இத்தாலி  போரில் கலந்துகொண்டது,தனக்கு கிடைத்த புதிய சைக்கிள் மற்றொண்று மெலினாவை (Melena) பார்த்தது.
மெலினாவின் கணவன், நினோ ச்கோர்டியா (Nino Scordia) ஆப்ரிக்காவிற்கு போரிட அனுப்பப்பட்டுளான். அவள், காது கேளாத தன் தந்தையுடன் வசித்து வருகிறாள். தனது தனிமையை சமாளிக்க முயல்கிறாள். தனிமையில் வசிக்கும் ஒரு அழகான பெண்படும் துயரத்தை அவளும் அனுபவிக்கிறாள் நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் அவளை அடையத் துடிக்கிறார்கள்  12 வயது சிறுவன் ரெண்டோ உட்பட. மெலினா தன் கணவன் மீது என்றும் அன்புடன் இருக்கிறாள்.  சிறுவன்  ஒருமுறை ரெண்டோ மெலினா தனிமையில் இருக்கும்போது அவளது வீட்டிற்கு சென்று ஜன்னல் வழியே பார்க்கிறான். அவளது அழகை ரசிக்கிறான், நினைத்து ஏங்குகிறான் சுயஇன்பம் செய்கிறான் .


டிய்யாலோ..... டிய்யாலோ.....

பொதுவாக எனக்கு குத்துப்பாடல்கள்  பிடிப்பதில்லை. நான் மெலடி விரும்பி.
இரைச்சல்   நிறைந்த குத்துப்பாடல்கள் நடுவே  அறிதாக சில folk  பாடல்கள் மனதிற்கு இதம் தருகின்றன. குறிப்பாக D.இமான் இசையில் சில பாடல்கள்.     மைனாவில் தொடங்கி கயல் வரை இசையமைத்த பாடல்கள்  folk வகையை சார்ந்தது , நாட்டுப்புற வாத்தியங்களை பயண்படுத்துவது அவரது சிறப்பு.

நீயில்லாத பயணம்..................பறக்கும் 

போகும்பாதை தூரமில்லை.............


வயலின், உயிருக்குள் புகுந்து உள்ளார்ந்த துயரங்களை துடைத்து செல்கிறது..

Baran (சினிமா).இரவு 2.00 மணி பீகார்- பாட்னா லால்பக்ஹ் சாலையில் சுற்றிக் கொண்டிருந்தேன் வழக்கம்போல் போலீஸ் பிடித்துக் கொண்டார்கள். (ஹீ..ஹி அதிகமுறை மாட்டிக்கொண்டு விழித்திருக்கிறேன் ) நம்ம ஊரென்றால் எதாவது  அரசியல்வாதி, தெரிந்த மாமா, மச்சான் பெயரைச் சொல்லி  50-100 கொடுத்து வந்துவிடலாம் ஆனால் இங்கு நிலமை வேறு. பீகாரில் அடியேனுக்கு தெரிந்த ஒரே நபர் நம்ப லாலுபிரசாத்யாதவ் மட்டுமே. வெளிஊர்-மொழியும் கொஞ்சம் சிரமமாக இருந்தது தெரிந்த ஆங்கிலத்தில் பேசி அடையாள அட்டையை காண்பித்து ஒருவாறு சமாளித்தேன்.
2.00 மணிக்கு உனக்கு இங்க என்ன வேலை? ...
சார், டீ குடிச்சிட்டு ஒரு தம் அடிச்சிட்டு போகலாம்....னு.....  தூக்கம் வரவில்லை என்றேன்.
உண்மையான காரணமும் அதுதான். என் தூக்கத்தை கலைத்த படைப்பு இந்த ஈரான் நாட்டுத் திரைப்படம் "Baran".


உன்னை நேசிக்கிறேன் அம்மா!

பின்னணியில் மெலிதான இசையோடு கூடிய 'உன்னை நேசிக்கிறேன் அம்மா!' (LoveYouMa!) பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியத் துணைக்கண்டத்தில் அசாதாரணமான பல சம்பவங்கள் நடந்தேறின. அதன் வட மேற்குப் பகுதி வறட்சியின் பிடியில் சிக்க ஆரம்பித்தது. மண் அரிப்பும் நில நடுக்கங்களும் சேர்ந்து கொள்ளவே அங்கு பாய்ந்த நதிகளின் பாதைகள் தாறுமாறாக ஆகின. அவற்றில் ஒன்று என்றென்றைக்குமாக மறைந்துபோனது. அதுதான் வேதங்களிலும் மகாபாரதத்திலும் வெகுவாகப் புகழப்பட்டிருக்கும் சரஸ்வதி நதி.
புவியியல் மற்றும் தட்பவெப்பவியல் ஆய்வுகள் சமீப காலங்களில் அந்த நதியின் பரிணாம வளர்ச்சியை வெகு துல்லியமாக முன்வைத்திருக்கின்றன. செயற்கைக்கோள் புகைப்படங்கள் நதியின் மறைந்துபோன தடத்தை அடையாளம் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கின்றன. ஐஸோடோப்பு ஆய்வுகள். அந்தத் தார் பாலைவனத்தில் சரஸ்வதி நதியின் புராதன நீர் இன்றும் பூமியின் அடி ஆழத்தில் தேங்கிக் கிடப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன.சரஸ்வதி நதியை மீட்டெடுப்பதன் வாயிலாக இந்திய வரலாற்றின் ஒரு முக்கிய பாகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது இந்தப் புத்தகம்.