'நாகரிகத்தின் தொட்டில்'

தொன்மை சிறப்பில் நாகப்பட்டினம் மாவட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பழங்கற்காலம் தொடங்கி புதிய கற்காலம், பெருங்கற்காலம் சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம் என்று இன்றுவரை தொடர்ந்து மக்கள் வாழ்ந்திருப்பதற்கான சான்றுகள் இம்மண்ணில் இன்னமும் விரவிக் கிடக்கிறது.

ஆறாம் திணை


நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் காலத்தில் போட்டதில்லை. திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் எனும் எட்டுப் பொருட்கள்--தான் அந்தக் காலத்தில் சமையலுக்குத் தாளிக்கப் பயன்பட்டன.

extra curricular activity



லஜ்ஜா

தமிழில்-அவமானம்
 
 டிசம்பர் 6, 1992 அன்று இந்து அடிப்படைவாதிகள் அயோத்தியில் பாபர் மசூதியைத் தரைமட்டமாக்கினார்கள். சுதந்தரம் அடைந்ததில் இருந்தே பெரும்பான்மை இஸ்லாமியர்களால் ஓரங்கட்டப்பட்டுவந்த பங்களாதேச இந்துக்களின் வாழ்க்கை, பாபர் மசூதி உடைப்பைத் தொடர்ந்து நரகமானது.
இஸ்லாமிய மதவெறிக் கும்பல்கள் பங்களாதேசத்தில் வசிக்கும் ஒவ்வொரு இந்துவையும் தேடிப் பிடித்துத் தாக்கின. இந்துக்களின் உடமைகள் நிர்மூலமாக்கப்பட்டன.
காஷ்மீர் என்றால் இயற்கை. காஷ்மீர் என்றால் அழகு. காஷ்மீர் என்றால் துப்பாக்கி. காஷ்மீர் என்றால் குண்டுவெடிப்பு. ரத்தம். கலவரம். ஊரடங்கு. 1948 முதல் இன்றுவரை பதற்றம் குறையாத பகுதியாக இருக்கிறது காஷ்மீர். ஏன்? பாகிஸ்தான் தான் காரணமா? வேறு எந்தக் காரணமும் இல்லையா?

பிரபல கொலை வழக்குகள்


எம்ஜிஆரைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்ஆர் ராதா. இருவரும் உயிர் பிழைத்தது எப்படி? எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது?

இறந்துபோன ஜமீன் இளவரசர் ஒருவர் பல்லாண்டுகள் கழித்து, சந்நியாசியாகத் திரும்பிவந்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அவர்மீது திரும்பியது. அவர் உண்மையிலேயே இளவரசரா அல்லது ஜமீனின் சொத்துகளை அபகரிக்க வந்தவரா? இந்தச் சிக்கலை விடுவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் உண்மையை நிரூபிக்கத் தொடுக்கப்பட்ட வழக்கும் மர்ம நாவலைவிடவும் விறுவிறுப்பானவை. திடுக்கிடச் செய்யும் விசாரணை விவரங்கள்.

மறைக்கப்பட்ட இந்தியா

ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை நமக்கு காட்டியிருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பாகவும், வியப்பாகவும், மனிதாபிமானத் தோடும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.

நெல்லை ஜமீன்கள்


ஜமீன்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க எப்போதுமே அளவுக்கதிகமான ஆர்வம் ஏற்படும். அந்த ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நெல்லை சீமையில் வாழ்ந்து வீழ்ந்த பத்து ஜமீன்களைப்பற்றி படம்பிடித்துக் காட்டுகிறது இந்த நூல்.ஒரு ஜமீனின் எல்லைக்குள் பல கிராமங்கள் இருந்தன. அங்கு நெல் அறுவடை செய்வது, வரி வசூல் செய்வது, காவல் வேலை உள்ளிட்ட பல பணிகளை ஜமீன்கள்தான் செய்து வந்தன. வரி வசூலித்து மன்னருக்குக் கொடுத்தது போக மீதியை அவர்கள் அனுபவித்துக்கொண்டனர். தங்களை மகாராஜாவாக எண்ணிக்கொண்டு ராஜ தர்பார் நடத்தி, ஒரு கட்டத்தில் தாங்கள்தான் எல்லாமும் என தான்தோன்றித்தனமாக வாழ ஆரம்பித்தனர். மிருகங்களை வேட்டையாடி மகிழ்ந்த ஜமீன்தார்கள், மக்களை அடிமை போல நடத்தி, அராஜகம் செய்து பொதுமக்களுக்கு பல இன்னல்களைக் கொடுத்தனர். விதிவிலக்காக சில ஜமீன்தார்கள், சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் உயிரையும், பொருளையும்கூட இழந்துள்ளனர். அரசாங்கத்தால் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டு, ராஜாவாக இருந்தவர்கள் எல்லாம் ஒரே நாளில் சாதாரண மனிதர்களாகிவிட்டனர். இந்த ஜமீன்களின் வாழ்க்கை வரலாற்றை திரைக்கதை போல் விறுவிறுப்பாக எழுதியுள்ளார் நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது என்று ஜமீன்களின் வரலாற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். மக்களை அடிமைபோல் நடத்தி அராஜகம் செய்வோர் பின்னாளில் எத்தகைய நிலைமைக்கு ஆளாவார்கள் என்பதும் இந்த நூலின் மூலம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

திருக்கொள்ளிக்காடு..

பொங்கு சனி...
திருக்கொள்ளிக்காடு..

சனி பகவான் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் தவறுகளுக்கு தகுந்தபடி தண்டனை கொடுப்பவர். அதே போல் ஒருவர் பிறந்த நேரத்தின்படி சனிபகவான் நன்மை செய்வதாக அமைந்திருந்தால் அவர்களுக்கு அளவற்ற நன்மைகளையும், சிறந்த முன்னேற்றத்தையும் அளிப்பார்.

ராஜீவ் காந்தி கொலை


ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது 1991 மே 21-ம் நாள்! 22 ஆண்டுகள் கடந்த பின்னாலும் ராஜீவ் கொலை இன்னும் மர்மம் நிறைந்ததாகவும், ரகசியம் விலகாததாகவும் இருக்கிறது. எந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்ட தரப்பு வழக்கறிஞர்கள்தான், வழக்கு விசாரணையை விமர்சனம் செய்வார்கள். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் விசாரணை செய்த அதிகாரிகளே... விசாரணையின் போக்கை விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ராஜீவ், சர்வதேச சதியின் காரணமாக கொலை செய்யப்பட்டார் என்பது உண்மை.