கி.மு கி.பி


'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்;

பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சென்று ஆதிவாசி அருந்திய ஆகாரம் பற்றி எழுதவும் முடியும். உலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது ஆதாம் அல்ல 'ஏவாள்'தான் என்கிறார்.

விஞ்ஞான அடிப்படையில் அதை உறுதியாகக் கூறிவிட்டு, 'அட' சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது உண்மைதான்' என 'லோக்கல்'ஆக சந்தோஷப்பட வைக்கிறார்.

இந்த நூலுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. உலகம் தோன்றியது, மனிதன் பிறந்தது, நாகரிகங்கள் உண்டானது, மதங்கள் வளர்ந்தது, போர்கள் உண்டது என வரலாறு தெரிந்து கொள்ளலாம்.

இன்னொரு சிறப்பு, இதையெல்லாம் சரித்திரப் பாடல்கள்போல போரடிக்காமல் மதன் ஸ்டைலில் படுஜாலியாகவே ருசிக்கலாம்! '

கிமு கிபி

மதன்

Rs 150.00
விகடன்  


 மதன் என்கிற கோவிந்தகுமார், தமிழ்நாட்டு இதழாளர், கேலிச் சித்திரக்காரர் மற்றும் சினிமா விமர்சகர். இவர் 1947ஆம் ஆண்டு திருவரங்கத்தில் பிறந்தார். தற்பொழுது விகடன்  குழுமத்தில் உதவி ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஆனந்த விகடனில் இவர் வழங்கி வரும் ஹாய் மதன்! எனும் கேள்வி - பதில் பகுதி மிகவும் புகழ் பெற்றது.

இவர் அன்பே சிவம் என்னும் தமிழ்த் திரைப்படத்தின் உரையாடலாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும் சன் தொலைக்காட்சியில் வரலாறு தொடர்பான ஒரு நிகழ்ச்சியையும், விஜய் தொலைக்காட்சியில் திரைவிமர்சன நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தி இருக்கிறார். தற்பொழுது ஜெயா தொலைக்காட்சியில் மதன் டாக்கீசு எனும் திரைவிமர்சன நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

1998ஆம் ஆண்டு வின் நாயகம் என்னும் பத்திரிகையைத் தொடங்கினார். 1999ஆம் ஆண்டு அது நிறுத்தப்பட்டது.


..................................பறக்கும்