பஞ்சம்,படுகொலை,பேரழிவு, கம்யூனிஸம்

கம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம், படுகொலை, பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல கோடி. உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது இந்நூல்.



லெனின், ஸ்டாலின், மாவோ என்று தொடர்ச்சியாக கம்யூனிஸத் தலைவர்கள் எல்லோருமே எப்படி ரத்தம் தோய்ந்த வரலாற்றை எழுதினார்கள்? எப்படி சக தோழர்களையே வேட்டையாடினார்கள்? புக்காரினும் டிராட்ஸ்கியும் என்ன ஆனார்கள்? சே குவேரா உண்மையிலேயே இளைஞர்களின் ரோல் மாடல்தானா? ஸ்டாலின், லெனினை எப்படி எதிர்கொண்டார்? ரஷ்யா உண்மையிலேயே கனவு பூமிதானா? வதைமுகாம்கள், கூட்டுப்படுகொலைகள் என்பதெல்லாம் ஹிட்லர் காலத்துக்கு முன்பே ரஷ்யாவில் உண்டா? வரலாற்றின் மிக முக்கியமான இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.
கம்யூனிஸம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? நேருவின் கம்யூனிஸப் பாசம் இந்தியாவுக்குத் தந்த பரிசு என்ன? தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரிக்கு என்ன ஆனது? கம்யூனிஸ்டுக் கட்சிகள் இந்தியாவில் ஆடிய ஆட்டங்கள் என்ன? இவற்றையும் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.
வெறும் வாய்ப்பந்தல் போடாமல், சிவப்பு பயங்கரத்தைப் பற்றிய ஒவ்வொரு குறிப்பையும் அதற்கான ஆதாரத்துடன் எழுதியுள்ளார் அரவிந்தன் நீலகண்டன். தமிழ்ப் புத்தக வரலாற்றில் மிக முக்கியமான நூலாக இது அமையும்.

Price: Rs 250.00 
கிழக்கு பதிப்பகம்

அரவிந்தன் நீலகண்டன்  தமிழ் எழுத்தாளர் (பிறப்பு: 1971). அரசியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வருகிறார். நாகர்கோவிலை சேர்ந்தவர். இவரது தந்தை என்.எஸ்.பிள்ளை ஒரு தமிழறிஞர். நாகர்கோயில் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். அரவிந்தன் வேளாண்மை பட்டப்படிப்பின் நுழைந்தாலும் ஆர்வமின்மையால் மேலே படிக்கவில்லை. உளவியலிலும், பொருளியலிலும் பட்டம் பெற்றிருக்கிறார். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் களப்பணியாளராக சேவை செய்கிறார். சமூகவியல், அறிவியல், இந்துமதம், வரலாறு, உளவியல், சூழலியல் ஆகிய பன்முகப்பட்ட துறைகளிலும் ஆழ்ந்த வாசிப்பும், புலமையும் கொண்டவர்.
திண்ணை இணையதளத்தில் எழுத ஆரம்பித்த அரவிந்தன் அறிவிய, சமூகவியல், திரைப்படம், ஆன்மீகம் சார்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தமிழ் ஹிந்து இணையதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர்; இத்தளத்தில் இந்து கலாசாரம், வரலாறு, அறிவியல் தொடர்பான பல கட்டுரைகளையும், புத்தக அறிமுகங்களையும் எழுதியுள்ளார். தமிழ் பேப்பர் இணையதளத்தில் வேதங்களைப்பற்றி ஆழிபெரிது என்ற தொடரும் சொல்வனம் இணையதளத்தில் அறிவியல் திரைப்படங்கள் பற்றி ஒரு தொடரும் எழுதி வருகிறார்......

..............பறக்கும்