இடுகைகள்

February, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
☰ உள்ளே....

சிங்கம்

படம்
ர்நாடக- தமிழ்நாடு எல்லைப் பகுதியில் காடுகள் அழித்து வருகிறது .
(---- நாளிதழ் செய்தி..)

காட்டைப் பத்தி  ஒரு கதை சொல்கிறேன்....
காட்டில் ஒரு சிங்கம் வாழ்ந்து வந்தது.

அட! மீதி கதை உங்களுக்கே  தெரியும்..

நவீனம் ......

படம்

மனிதனும் மர்மங்களும்

படம்
'இந்தியாவிலும் உலவுவதாக நம்பப்படுகின்ற மோகினிப் பிசாசு, குட்டிச் சாத்தான் ஆவிகளை விரட்ட துடைப்பம், வேப்பிலை மற்றும் ரம்யா கிருஷ்ணனின் படங்கள் உதவிபுரிகின்றன.

கி.மு கி.பி

படம்
'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்;

பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சென்று ஆதிவாசி அருந்திய ஆகாரம் பற்றி எழுதவும் முடியும். உலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது ஆதாம் அல்ல 'ஏவாள்'தான் என்கிறார்.

விஞ்ஞான அடிப்படையில் அதை உறுதியாகக் கூறிவிட்டு, 'அட' சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது உண்மைதான்' என 'லோக்கல்'ஆக சந்தோஷப்பட வைக்கிறார்.

இந்த நூலுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. உலகம் தோன்றியது, மனிதன் பிறந்தது, நாகரிகங்கள் உண்டானது, மதங்கள் வளர்ந்தது, போர்கள் உண்டது என வரலாறு தெரிந்து கொள்ளலாம்.

இன்னொரு சிறப்பு, இதையெல்லாம் சரித்திரப் பாடல்கள்போல போரடிக்காமல் மதன் ஸ்டைலில் படுஜாலியாகவே ருசிக்கலாம்! '

கிமு கிபிமதன்Rs150.00
விகடன்  


மதன் என்கிற கோவிந்தகுமார், தமிழ்நாட்டு இதழாளர், கேலிச் சித்திரக்காரர் மற்றும் சினிமா விமர்சகர். இவர் 1947ஆம் ஆண்டு திருவரங்கத்தில் பிறந்தார். தற்பொழுது விகடன்  குழுமத்தில் உதவி ஆசிரியராகப…

Finding Nemo

படம்
தேடுதல் சுகமானது, அனுபவங்களை அள்ளித்தருவது, அதுவே வாழ்க்கையை நகர்த்துகிறது. பணம், பொருள், இன்பம் இவற்றிற்கான தேடுதல் ஒருபுறமிருந்தாலும் அன்பிற்கான தேடுதலே உயர்ந்தது. அதிலும் தொலைந்துபோன உறவுகளை தேடுவது என்பது வலியோடு சேர்ந்த சுகமான சுமையாகிறது. அப்படி தொலைந்துபோன தன் மகனைத்தேடி புறப்படும் தந்தை மீனின் கதைதான் "Finding Nemo".

நிலமெல்லாம் ரத்தம் (புத்தகம்) .

படம்
இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்திக்க நேர்ந்த மிகப்பெரிய சிக்கல், இஸ்ரேல்-பாலஸ்தீன் தொடர்பானது. தனித்துவம் மிக்க இரண்டு மதங்களின் வலுவான முரண்பாட்டுப் பின்னணியில் திறமை மிக்க அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மக்களின் உணர்வு சார்ந்ததொரு பிரச்னை. இன்றுவரை இது தீர்க்கப்பட முடியாமல் இழுத்துச் செல்வதன் காரணம் என்ன?

இரண்டாம் உலகப்போரில் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு உலகமெங்கும் சிதரிக்கிடந்த யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற அடையாளத்தை கொடுத்தவர்கள் பாலஸ்தீனியர்கள். ஆனால் வரம் கொடுத்தவனின் தலையிலே கை வைத்ததுபோல் இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தை வஞ்சிப்பதேன்?.பல நூற்றாண்டுகால மதப் பிரச்சனை ஒருபக்கம் இருந்தாலும், 1948 ஆம் ஆண்டிற்குப் பிறகு இஸ்ரேல் என்ற தேசம் தோற்றுவிக்கப் பட்டதிலிருந்து இன்றுவரை அங்கு தினமும் குண்டுவெடிப்பும் கலவரங்களும் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. நமது ஊர் அரசியல் கட்சிகள்போல தீவிரவாத இயக்கங்கள் புதிது புதிகாக முளைத்துக் கொண்டிருக்கின்றன, இவற்றையொல்லாம் பீட்ஸா சாப்பிட்டுக்கொண்டே உலக நாட்டாமைகளும் ஐ. நா சபையும் வேடிக்கை பார்பதேன்.

சொந்த மண்னை இழந்து, பெரும் மக்களை இழந்து, வளங்கள்…

Leaf (Mobile Photography).

படம்

பஞ்சம்,படுகொலை,பேரழிவு, கம்யூனிஸம்

படம்
கம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம், படுகொலை, பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல கோடி. உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது இந்நூல்.

சூப்பர் ஹிட்

சூப்பர் ஹிட் தமிழ் பாடல் என்பது
லோக்கல் பாரிலோ அல்லது
ஹைகிளாஸ் பப்பிலோ பாடப் படுவதாகும்......