மாயவலை..


ஐ எஸ் ஐ எஸ் - இன்று உலகம் சற்று அச்சத்துடன் உச்சரிக்கும் வார்த்தை இதற்குமுன் அல்காயிதா.
9/11, ஆப்கானிஸ்தான் போர், ஒசாமா பின்லேடனின் மரணம் இவற்றிற்குப் பிறகு உலகம் தீவிரவாத அச்சுறுத்தலிருந்து சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தது. ஆனால் தற்போது மாயாஜால படங்களில் வரும் பூதம்போல் ஒன்றை அழிக்க மற்றொன்று முளைத்திருக்கிறது. யார் இவர்கள்? தீவிரவாத இயக்கம் என அறியப்படும் இவற்களைப்போல் யார் யார் இருக்கிறார்? இன்னும் யார் யார் ? வருவார்கள். இவர்களது நோக்கம் என்ன?. என உலகை அச்சுறுத்தும் அனைத்துத் தீவிரவாத இயக்கங்களைப் பற்றி மிக விரிவான துள்ளியமான அறிமுகத்தைத் தருகிறது இந்த புத்தகம்.




தீவிரவாதம், இருபத்தியோராம் நூற்றாண்டின் புற்று நோய். எப்படி இது தீவிரமடைகிறது? ஏன் தடுக்கவோ ஒழிக்கவோ அழிக்கவோ முடிவதில்லை? அல் காயிதா, ஹிஸ்புல்லா, தாலிபன் ..... போன்ற இயக்கங்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் செல்வாக்கு பெற்றது எப்படி? இவர்களுக்கு ஆட்களும் பணமும் கிடைக்கும் வழியென்ன? தீவிரவாத இயக்கங்களின் நெட் ஒர்க் எப்படிச் செயல்படுகிறது? ஏன் எந்த அரசினாலும் இவர்களைத் தடுக்க முடிவதில்லை? பேரழிவுச் சம்பவங்களை எப்படி திட்டமிடுகிறார்கள்? எப்படி அவற்றுக்காக உழைக்கிறார்கள்? இயக்கங்களுக்கு ஆயுதங்கள் எப்படிக் கிடைக்கின்றன? எம்மாதிரியான பயிற்சிகள் தரப்படுகின்றன? எந்தெந்த தேசங்கள் தீவிரவாத இயக்கங்களை ஊக்குவிக்கின்றன? ஏன் அவர்களை யாராலும் ஒன்றும் செய்ய முடிவதில்லை? தீவிரவாதச் செயல்களுக்கு மதம் எப்படி ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது? நவீனகாலத்தில் டெக்னாலஜி அப்டேட் என அவர்கள் கலக்குவதேன்.

ஆறு ஆண்டு கால ஆராய்ச்சி ஆதாரப்பூர்வமான தகவல்கள் சற்றும் விறுவிறுப்பு குறையாத எழுத்து என ஆயிரம் பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகத்தை கையில் எடுத்தால் வைக்க மனம் வரவில்லை. குமுதம் ரிப்போர்ட்டரில் இரண்டு வருடங்களாக வெளிவந்து பலரது பாராட்டுகளைப் பெற்ற தொடரின் மொத்த தொகுப்பு இந்த புத்தகம். ஒட்டுமொத்த தீவிரவாத இயக்கத்தின் ஆரம்பப்புள்ளி முதல் தற்போதைய நிகழ்வுவரை அலசி ஆராய்கிறது இந்த புத்தகம். தவறாமல் வாசியுங்கள்.

மாயவலை
பா. ராகவன்
கிழக்கு பதிப்பகம்
விலை ₹ 850