இடுகைகள்

January, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
☰ உள்ளே....

ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்

படம்
ஆன் பிராங்க் இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒருயூதச் சிறுமி.  தான் இவரது குடும்பம் நெதர்லாந்தில் வசித்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாசிப்படைகளால் யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டு வந்ததால் இவர்களது குடும்பம் ஒரு மறைவிடத்தில் இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தது. பின்னர் அடையாளம் தெரியாத ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இவர்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். அங்கு இச்சிறுமி இறந்து விட்டாள்.

The Goal (புத்தகம்).

படம்
நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருக்கலாம். உயர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகியாக இருக்கலாம். தொழிலாளியாகவும் இருக்கலாம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்களில் நிச்சயம் யாராவது ஒருவரில் உங்களைக் காண்பீர்கள். உங்கள் பணியிடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தத் துறையாகவும் இருக்கலாம். ஆனால், இந்தக் கதைக்களமான தொழிற்சாலையின் பிரச்னைகளும் நிகழ்வுகளும் உங்கள் பணியிடத்திலும் வாழ்கையிலும் எதிர்ப்படக் கூடியவைதான். அத்தகைய அனுபவத்தை உணர்வை தரக்கூடியது இந்த புத்தகம் "The Goal". 

என் பெயர் மரியாட்டு

படம்
THE BITE of the MANGOஉலகமெங்கும் கொட்டிக்கிடக்கும் தன்னம்பிக்கை புத்தகம் ஏராளம்.
விளையாட்டு, சினிமா, தொழில் என சாதித்தவர்களின் கதைகள்தான் இன்று அதிகமாக விற்பனையாகின்றன. புத்தகம் வாசிக்கத் தொடங்கிய புதிதில் அவ்வாறான கதைகளை படித்திருக்கிறேன். அவர்களின் தன்னம்பிக்கை ரசிக்கத் தக்கவையாகவும் செய்தியைப் போலவும் இருந்திருக்கிறது என்பதைத் தவிர வேறு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. புத்தகங்களுக்கான தேடுதல் தொடங்கியபோது எளிய மனிதர்களைப் பற்றி வாசிக்க நேர்ந்தது அவர்கள் வாழ்வியலோடு கலந்த தன்னம்பிக்கை அனுபவங்களை உணர முடிந்தது.
அப்படி வாசித்து உணர்ந்த வாழ்வியல் கதைதான் "The Bite of the Mango". இன்றளவும் தோற்றுப்போகும் சில தருணங்களில் இந்த நிஜக்கதையின் நாயகி மரியாட்டுவை (Mariatu Kamara) நினைத்துக்கொள்வேன். அவள் வாழ்க்கையில் அந்த நிமிடத்தில் அவள் பெற்ற தன்னம்பிக்கை என் தோளிலும் தொற்றிக்கொள்ளும். யார் அவள்? அவள் கதைதான் என்ன? அன்று அவளுக்கு என்ன நிகழ்ந்தது? இன்று அவள் என்ன செய்துக் கொண்டிருக்கிறாள்?


மாயவலை..

படம்
ஐ எஸ் ஐ எஸ் - இன்று உலகம் சற்று அச்சத்துடன் உச்சரிக்கும் வார்த்தை இதற்குமுன் அல்காயிதா.
9/11, ஆப்கானிஸ்தான் போர், ஒசாமா பின்லேடனின் மரணம் இவற்றிற்குப் பிறகு உலகம் தீவிரவாத அச்சுறுத்தலிருந்து சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தது. ஆனால் தற்போது மாயாஜால படங்களில் வரும் பூதம்போல் ஒன்றை அழிக்க மற்றொன்று முளைத்திருக்கிறது. யார் இவர்கள்? தீவிரவாத இயக்கம் என அறியப்படும் இவற்களைப்போல் யார் யார் இருக்கிறார்? இன்னும் யார் யார் ? வருவார்கள். இவர்களது நோக்கம் என்ன?. என உலகை அச்சுறுத்தும் அனைத்துத் தீவிரவாத இயக்கங்களைப் பற்றி மிக விரிவான துள்ளியமான அறிமுகத்தைத் தருகிறது இந்த புத்தகம்.