யாதும் ஊரே ..யாவரும் அகதிகள்..




சாம்செட் அகதிகள் முகாம் பாகிஸ்தான். சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.ஆப்கன் அகதியான ஜமால் முகாமில் புறப்படும் வேனில் ஏறி  தன் உறவினர் இருக்கும் இடத்திற்கு போகிறான். ஜமாலின் உறவினரான  இனாயத்தை அவன் அப்பா லண்டனுக்கு அனுப்ப விரும்புவதாக சொல்கிறார். சாவு எல்லா எல்லா இடத்திலையும் உண்டு இங்கு இருந்து  அடிமையாய் சாவதைவிட அங்குபோய் ஒளித்து வாழட்டும் என்கிறார் .  அவனுடன் தானும் செல்வதாக ஜமால்  முடிவு  செய்கிறான். வெளிநாட்டிற்கு கள்ளத்தனமாக ஆட்கள் அனுப்பும் ஏஜென்ட் ஒருவனை சந்தித்து லண்டன் செல்ல ஏற்பாடு செய்கிறார்கள்.

திறந்த வேனில் தரைவழி பயணமாக பாகிஸ்தான் -இரான் எல்லையை அடைகிறார்கள். அங்கிருக்கும் ஏஜென்ட் -ஒருவனை சந்திக்கிறார்கள்.தங்களிடம் இருக்கும் பணத்தையும் உடைகளையும் மாற்றிக்கொண்டு பத்து நாட்களுக்கு பிறகு பொது வழியில்பேருந்தில் செல்கிறார்கள். செல்லும் வழியில் சோதனைச்சாவடியில் இராணுவ அதிகாரிகள் அடையாள அட்டையை பரிசோதிக்கிறார்கள் எந்தவித ஆவணமும் இல்லாத ஜமாலும், இனையத்தும் பாகிஸ்தான் எல்லைவரை திருப்பிவைக்கப் படுகின்றனர். 

பாலைவனமாக இருக்கும் எல்லையை கடந்து ஒருவாரம் கழித்து  பாகிஸ்தானை  அடைகின்றனர். ஈரானுக்கு அனுப்பிய  ஏஜென்ட்-ஐ சத்தித்து மீண்டும் பயணத்தை தொடங்குகிறார்கள். ஜீப் டிரைவர் ஒருவரின் மூலம் ஈரான்- துருக்கி எல்லையில் உள்ள ஒரு கிராமத்தை அடைகின்றனர். அன்றிரவு ஜீப் டிரைவர் வீட்டிலே தங்குகின்றனர். அந்த குடும்பத்தின் உள்ள சிறுவன் ஒருவன் வழிகாட்ட கடுமையான பனிபொழிவின் நடுவே பயணம் செய்து துருக்கியை அடைகின்றனர். 


இஸ்தான்புல் நகரம் ஜமாலும், இனையத்தும் ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் மூடப்பட்ட வேனில் ஏறி கிளம்புகிறார்கள் அவைகளுடன் ஒரு ஈரான் அகதி குடும்பம் ஒன்றும் வருகிறது. வேன் நேராக கண்டைனேர் இருக்கும் இடத்திற்கு  செல்கிறது.அனைவரும் கண்டைனேரில்  எற்றப்படுகிறார்கள்.  கடல்பயணம் தொடங்குகிறது. 40 மணி நேரத்திற்குப்பின் கண்டைனேரில் மூச்சு திணற ஆரம்பிக்கிறது, திரை  இருள்கிறது. "கதவை திற" மூச்சு தினறுகிறாது" குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. 


ட்ரிஸ்டே நகரம், கப்பலிலிருந்து கண்டைனேர் இரக்கப்பட்டு உரிய இடத்திற்க்கு செல்கிறது. கதவு திறக்கப்படுகிறது இறந்த உடல்கள் கீழே விழுகின்றன.  ஜமால் மட்டும் உயிர் பிழைத்து  அங்கிருந்து ஓடுகின்றான்.
இரண்டு வராத்திற்குபின் ஒரு பெண்ணின் கைபையை திருடி பாரிஸ் செல்கிறான்.      பாரிஸ்-ல் உள்ள  அகதிகள் முகாம் ஜூன்-2002 ஜமால் அங்கிருக்கும் சிறுவன் ஒருவனுடன் திருட்டு ரயிலேறி  லண்டன் போகிறான். 
லண்டன் மாநகர் ஜமால் ஒரு கடையில் கிளாஸ் கழுவும் வேளையில் சேர்கிறான் அங்கிருக்கும் தொலைபேசியில் பாகிஸ்தானுக்கு பேசுகிறான். நான்  ஜமால்  லண்டனில் இருந்து பேசுகிறேன். ஆமாம் லண்டன் வந்துவிட்டேன் இனாயத் உயிருடன்  இல்லை. மறுமுனையில் இனாயத்தின் அப்பா......

ஆகஸ்ட் 9 2002 லண்டன் அகதிகள் முகாம் ஜாமாலுக்கு பாரிந்துரைக்கப்பட்ட மனு நிரகாரிக்கப்படுகிறது. அவன் லண்டனில் வசிக்கிறான் 18 வயதிற்குள் லண்டனைவிட்டு வெளியேரவேண்டும் என்ற எழுத்து மறைய,  ஜமாலின் பிராத்தனையுடன் படம் நிறைவடைகிறது..... 

இங்கிலாந்த் டைரக்டர் மைக்கேல் வின்டர் பட்டோம் என்பவரால் degital video  முறையில் படம்பிடிக்கப்பட்டு உலகமெங்கும் வாழும் அகதிகளின் உணவுர்களை வெளிபடுத்தும் மிகச் சிறந்த திரைப்படம். தவறாமல் பாருங்கள்.