இடுகைகள்

March, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
☰ உள்ளே....

Train to Pakistan (புத்தகம்) .

படம்
1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றது அந்த நேரத்தில்தான் மாபெரும் துயர் இந்தியாவை சூழ்ந்தது. 90 சதவீதத்திற்குமேல் முஸ்ஸீம்கள் வாழும் பகுதியை தனிநாடாக உருவாக்க வேண்டும் என்ற கனவு ஜின்னாவிற்கு இருந்தது. தேசத்தை இரண்டாக பிரிப்பது என்பது தேகத்தை கூறுபோடுவதுபோல் மாறிவிடும் என்ற அச்சம் மகாத்மா காந்திக்கு இருந்தது. எரிகிற கொள்ளியில் எதையாவது எடுத்துக்கொள்ளலாம் என்ற நோக்கம் ஒருசில தலைவர்களுக்கு இருந்தது. எல்லாவற்றையும் முடித்துவிட்டு அக்கடா என நிம்மதியாக சாயும் ஆசை கடைசி வைசிராயான மவுண்ட் பேட்டனுக்கு இருந்தது. யார் எக்கேடு கெட்டால் என்ன? பென்சிலை கூர்தீட்டி வரைபடத்தில் கோடுகிழிக்கும் ஆர்வம் சிரில் ராட்கிளிஃப் என்ற பொறியாளருக்கு இருந்தது. வந்தேமாதரம் என்ற அவல் தீர்ந்தபின் இந்தியர்களின் (பாகிஸ்தானையும் சேர்த்து) வெறும்வாய்க்கு மெல்ல ஏதாவது ஒன்றும் தேவைப்பட்டது. அப்போதுதான் தேசம் இரண்டாக பிரிக்கப்பட்டது.

அதுவரை சகோதரர்களாக வாழ்ந்துவந்த இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்களின் காதுகளுக்கு பிரிவினை என்ற வார்த்தை சென்றடைந்தது. இந்தியா முழுவதும் அவர்கள் பேயாட்டம் ஆட, வேஷம் கட்டத் தொடங்கினர். சுத…