பட்ட விரட்டி.




காபூலின் வசீர் அக்பர் கான் பகுதியைச் சேர்ந்த பாஷ்டூன் இனச் செல்வக் குடும்பமொன்றில் பிறந்த அமீர் எனும் பையனைப் பற்றிய கதையைச் சொல்கிறது இந்நூல். தனது சிறு பருவத் தோழனும் தந்தையின் ஹசரா இன வேலையாளின் மகனுமான ஹசனுக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகம் அமீருக்குக் குற்றவுணர்வைத் தருகிறது. ஆப்கானிஸ்தானின் முடியரசின் வீழ்ச்சி, சோவியத்  படையெடுப்பு, பாகிஸ்தானுக்கும்  அமெரிக்காவுக்குமான மக்கள் வெளியேற்றம், மற்றும் தலிபான் ஆட்சி எனும் அமளியான காலகட்டங்களில் இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது


கதை அமீரின் பார்வையில் சொல்லப்படுகிறது. அமீர், அமெரிக்காவில் கலிபோர்னியாவில்  வாழும் ஒரு ஆப்கானியன். 1970-களிலான தன் சிறுவயது ஞாபகங்களை அசைபோடுகிறான்.
ஞாபகங்களைச் சொல்லும் போது, போருக்கு முந்திய ஆப்கானிஸ்தானிலிருந்து ஆரம்பிக்கிறான். சிறுவயதில் அமீரும் ஹசரா இன வேலைக்காரச் சிறுவனுமான ஹசனும் நாட்களை ஒன்றாகவே கழிக்கின்றனர். அமீரின் விருப்பமான நினைவுகளில் ஒன்றாக அவன் ஒரு மாதுளை மரத்தின் கீழிருந்து ஹசனுக்குக் கதைகளைக் கூறுவது இருக்கிறது. இறந்து போன தாயைப் போலவே அமீருக்கு இலக்கியங்களில் ஈடுபாடு இருக்கிறதைக் கண்டு அவனது தந்தை தன்னைப் போல விளையாட்டு வீரனாக துடிப்புள்ளவனாக அமீரை ஆக்க எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. தனது எழுத்தார்வத்தைத் தொடரும் அமீர் பல சிறுகதைகளை எழுதுகிறான். அவற்றில் தந்தை ஈடுபாடு காட்டாத போதும் தந்தையின் நண்பரான ரகீம்கான் அமீரைப் பாராட்டுகின்றார்.

காபூலில் ஒரு நாள் அமீரும் ஹசனும் சுற்றுகையில் ஆசிவ்வைச் சந்திக்கின்றனர். ஆசிவ் ஹசரா இனத்தவர் மேல் வெறுப்புக் கொண்ட முரட்டுக் குணமுள்ள பையன். அமீரைச் சண்டைக்கு இழுக்கும் ஆசிவ்வை ஹசன் உண்டிவில்லால் அடித்து ஒற்றைக்கண் ஆசிவ் என அறியப்பண்ணுவதாகச் சொல்கிற போது ஆசிவ் பின்வாங்குகிறான். ஆனாலும் மீண்டும் தாம் சந்திப்போம் எனச் சொல்கிறான். ஆப்கானிஸ்தானின் விருப்ப விளையாட்டான பட்டம் விடும் விளையாட்டு நடக்கையில் ஆசீவ்வின் பயமுறுத்தல் உண்மையாகிறது.

அமீர் இப்போட்டியில் வெற்றியையும் தந்தையின் பாராட்டும் பெறுகிறான். விருதாகக் கருதப்படும் அமீரின் பட்டத்தைத் தேடிச் செல்லும் ஹசன் ஆசிவ்வையும் அவனது இரு தோழர்களையும் எதிர் கொள்ள நேர்கிறது. ஹசன் ஆசிவ்விடம் அடிவாங்கி அவனால் வன்புணரப்படுகிறான். இதைக் காணும் அமீர் பயத்தினால் உதவ முன்வராமல் ஒளிந்திருந்து பார்க்கிறான். இதைத் தொடர்ந்து ஹசன் உற்சாமின்றிக் காணப்படுகிறான். ஏனென்று அமீருக்குத் தெரிந்திருந்தாலும் அதை இரகசியமாயே வைத்திருக்கிறான். ரகீம்கானிடமிருந்து ஒரு கதையைக் கேள்விப்படும் அமீர் ஹசன் வெளியேறுவதே நல்லதென்று நினைத்து ஹசன் மேல் களவுக்குற்றம் சுமத்துகிறான். ஹசன் அதனை ஒத்துக் கொண்டாலும் அமீரின் தந்தை ஹசனை மன்னித்து விடுகிறார். ஆனாலும் அவருக்கு மனவருத்தம் தரும் வகையில் அலியும் ஹசனும் வீட்டை விட்டு நீங்குகின்றனர். இது நடந்து கொஞ்ச நாட்களில் ரஷ்யப்படை ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கிறது. அமீரும் தந்தையும் அமெரிக்காவிற்குத் தப்பிச் செல்கின்றனர். ஒரு சிறு வீட்டில் குடியிருக்கின்றனர். தந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலைக்குப் போகிறார். பாவித்த பொருட்களை சந்தையில் கொண்டு விற்பதன் மூலம் மேலதிகமாக ஒரு சிறு வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். அங்கே சொராயாவைச் சந்திக்கும் அமீர் அவளை விரும்பி திருமணம் செய்து கொள்கிறான். அமீரின் தந்தை நுரையீரற் புற்றுக் காரணமாய் இறக்கிறார். அமீருக்கும் சொராயாவுக்கும் தம்மால் பிள்ளைகள் பெற்றுக் கொள்ள முடியாதெனத் தெரிய வருகிறது.

அமீர் ஒரு வெற்றிகரமான எழுத்தாளனாகித் தனது முதற் புதினத்தை வெளியிடுகிறான். திடிரென தன அப்பாவின் பழைய நண்பரான ரகீம்கானிடம்  தொலைபேசி  அழைப்பு வருகிறது    அவரைச் சந்திக்க பாகிஸ்தானுக்குச் செல்லும் அமீர்,  ஹசன் பற்றிய வாழ்கை ரகசியங்களை தெறிந்துதுக்கொள்கிறான்.பின்பு அவனை தேடுவதே மீதமுள்ள நாவலின் கதையாகும்.

த கைட் ரன்னர் (The Kite Runner): பட்டவிரட்டி   என்ற பொருளுடைய தலைப்பைக் கொண்டது ஒரு ஆங்கில  நூல். ஆப்கானிய  அமேரிக்கர் காலித் ஹுசைனியால் எழுதப்பட்ட முதல் புதினம். ஒரு ஆப்கானியரால் முதன்முதலில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட புதினம் இதுவாகும். river head நிறுவனத்தினரால் இந்நூல் 2003 ஆண்டு வெளியிடப்பட்டது. தமிழில் கூட கிடைக்கிறது.திரைப்படமாகவும் வெளிவந்து பல விருதுகளை அள்ளிய நாவல் வாசியுங்கள்...

Trailer .