இடுகைகள்

September, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
☰ உள்ளே....

The song of sparrows (சினிமா).

படம்
"ஓடு அல்லது பற" வாழ்க்கை நமக்கு கட்டளையிடும் சொல் அதை துரத்தி குடும்பம், வேலை, பணம் என வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். தொட்டிச் செடியில் இன்று புதிதாக பிறந்த மலரையும், கோவில் கோபுரங்களில் பெட்டையுடன் ஒளியும் புறாக்களையும், தென்னை மரங்களுக்கிடையே மறையும் சூரியனையும், அன்றாட அற்ப நிகழ்வுகளாய் கடந்துவிடுகிறோம். சிறுவயதில் ரசித்த ஆறும், மலையும், வயல்களும் அதன் வழியில் அப்படியே இருக்க ஒருநிமிடம் நின்று ரசிக்கத் தவறுகிறோம். அன்புசெலுத்தும் சாதாரண மனிதர்களை கௌரவம் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு அலட்சியப்படுத்துகிறோம். ஒருகாலட்டத்தில் சராசரியான இந்த வாழ்க்கையை வெறுத்து அமைதியையும், மகிழ்ச்சியையும் எங்கோ தேடத் தொடங்குகிறோம். அனைத்தும் நம் அருகிலே இருந்தது, இருக்கிறது என அறியாமல் மீண்டும் வேறொரு பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறோம்.

சரி..சாதாரண பூக்களும், மழையும், சூரியனும் அற்ப மனிதர்களும் அன்றாட நிகழ்வுகளும் அமைதியான வாழ்க்கைக்கு எப்படி உதவக்கூடும்? இதை அழகாக விளக்கும் ஈரான் நாட்டு திரைப்படம்தான் "The Song of Sprrows".