சாரதா கபூர் (பாடல்கள்) .புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரான இவரது அப்பா சக்தி கபூர் ஹிந்தி சினிமாவின் மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் சுமார் 700 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். பற்றாக்குறைக்கு இவரின் சொந்த பந்தங்களான கபூர் குடும்பமே பாலிவுட்டில் கோலோச்சியிருக்கிறது. இருந்தும், என்பது மற்றும் தொன்னூறுகளின் சினிமா நடிகர் நடிகைகளின் வாரிசுகள் எல்லாம் வரிசையாக திரைப்படங்களில் நடிக்க வர, இவர் மட்டும் நடிப்பதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என தான் உண்டு தன் சைக்காலஜி படிப்பு உண்டு என ஆரம்ப காலகட்டத்தில் ஒதுங்கியிருந்தார். ஆனால் இன்று 'இந்த கதாபாத்திரத்திற்கு இவர்தான் பொருத்தமாக இருப்பார்' என தேடும் அளவிற்கு பாலிவுட்டின் ஆர்ப்பாட்டமில்லாத நடிகையாக விளங்குகிறார். அவர்தான் சாரதா கபூர் (Shraddha Kapoor).

The Bang Bang Club (சினிமா) .
இயற்கை காட்சிகள், அதிசயங்கள், அபூர்வங்கள், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள், திருவிழாக்கள், வரலாற்று நிகழ்வுகள், சமூகம் சார்ந்த பிரச்சனைகள், பேரிடர்கள், சோக நிகழ்வுகள் போன்ற வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படமாக எடுப்பது என்பது தேர்ந்த ஒரு கலை.  எந்தத்துறைக்கு பயன்படுகிறதோ இல்லையோ செய்தித்துறையில் இந்த புகைப்படக்கலையின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். பக்கம் பக்கமாக எழுதி புரியவைக்க முடியாத ஒரு செய்தியை சிறந்த புகைப்படம் ஒன்று அப்பட்டமாக விளங்க வைத்துவிடும். ஆப்கானிஸ்தானின் பச்சைநிற கண்ணழகி, உகாண்டா நாட்டு குழந்தையின் சூம்பிப்போன கை, ரொட்டித்துண்டிற்காக கையேந்தும் சோமாலியா குழந்தைகள், போருக்குச் செல்லும் தந்தையை பிரியும் சிறுவன், பூகம்பத்தில் புதைந்த தம்பதிகள், தன் தலைவனின் இருதி ஊர்வலத்தில் வாசிக்கும் இராணுவ வீரன். இறந்து கரை ஒதுங்கிய சிரியாநாட்டு குழந்தை, போபால் விசவாயு தாக்கப்பட்ட குழந்தை,  அல்பேனியாவின் அகதிகள் முகாம்,  ஹிட்லரின் வதை முகாம், என புகழ்பெற்ற சில புகைப்படங்களே இதற்கு சாட்சியாகும். குறிப்பாக வியட்நாம் போரின்போது எடுக்கப்பட்ட எரியும் புத்தபிட்சுவின் படமும் நிர்வாண சிறுமியின் அலரலும் இந்த உலகையே உளுக்கியது குறிப்பிடத்தக்கது. உலகின் கவணத்தைத் திருப்ப இத்தகைய புகைப்படங்களை எடுக்க புகைப்படக்காரர்கள் பலர் தங்கள் உயிரையும் பணயம் வைக்கின்றனர். போர், கலவரங்கள், போராட்டங்கள், பேரிடர்கள் என அந்த கால சூழ்நிலையில் அத்தகைய உணர்வுபூர்வமான புகைப்படங்களை எடுக்கும் அவர்கள் எத்தகைய சிரமத்திற்கு உள்ளாகின்றனர்? அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அவர்களின் நாட்கள் எவ்வாறு கழியும்?. இதனை நான்கு புகைப்படக்காரர்கள் மற்றும் அவர்களின் அனுபவம் மூலம் அழகாக விவரிக்கிறது இந்த திரைப்படம் "தி பேங் பேங் கிளப்" (The Bang Bang Club). 

மயானம் (என் தமிழ்) .
மயானம் அல்லது சுடுகாடு என்றால் அனைவருக்கும் ஒரு பயம், ஒரு சிறிய தயக்கம் இருக்கும். அட ஏன்? மயானம் இருக்கும் பக்கம் கூட நாம் கால் வைக்க மாட்டோம். அதையும் மீறி அவ்வழி செல்வதாக இருந்தால் அடிவயிற்றில் ஆரஞ்சு நிறத்திலிருக்கும் அட்ரினல் சுரக்க ஒரு வித கிலியுடன் கடந்து செல்வோம். பேய் பிசாசு ஆவி மோகினி ராகினி கவுதமி என அதற்கு காரணமாக இருந்தாலும், இதுதான் நிரந்தரம் ஒருநாள் இங்குதான் வருவோம் என்ற எண்ணமும் பயமும் நம்மில் யாருக்குமே கிடையாது. அதனால்தான் பிக்பாஸ் என அத்தனை ஆட்டத்தையும் ஆடுகிறோம்.


யாழ் - சிவயநம (பாடல்).சங்ககாலத்தில் தமிழால் இசையால் பாடல்களால் மக்களை மகிழ்வித்த "பாணர்கள்" என்பவர்களைப் பற்றி என்தமிழ் என்ற பகுதியில் எழுதியிருந்தேன் அதற்கான தகவல்களை திரட்டும்போதுதான் இந்தப் பாடல் எதேச்சையாக கிடைத்தது. பாணர்கள் பல இசைக் கருவிகளை வாசிக்க கற்றிருந்தனர் அதில் குறிப்பிடும்படியாக "யாழ்" எனும் நரம்பு இசைக் கருவியின் வாத்தியத்தில் அவர்கள் கைதேர்ந்தவர்களாக விளங்கினர். இந்த யாழ் எனும் இசைக் கருவியே இன்று புழக்கத்திலிருக்கும் வீணை, சித்தார், மேண்டலின் போன்ற நரம்பு இசைக் கருவிகளுக்கு முன்னோடியாகும். மேலும் தமிழர்கள் வாசித்த முதல் இசைக் கருவி இதுதான் என்று நம்பப்படுகிறது. யாழ் கருவியை வாசிக்கும் பாணர்களின் ஒரு பிரிவினர் யாழ் பாணர்கள் என அழைக்கப்பட்டனர். இலங்கை நாட்டின் முக்கிய பகுதியான யாழ்பாணம் என்ற இடத்தில் பண்டைய காலத்தில் இந்த பாணர்களின் பிரிவினர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தனர். அதனால்தான் அந்த பகுதிக்கு யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்ததாக வரலாறும் இருக்கிறது. அத்தகைய பாணர்களின் வரலாற்றையும் சிறப்பு வாய்ந்த யாழ் எனும் இசைக் கருவியின் பெருமையையும் அழகான ஓவியத்துடன் நமக்கு காட்டுகிறது இந்தப் பாடல்.